மாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது
published on மார்ச் 26, 2020 01:49 pm by sonny for மாருதி ஸ்விப் ட் டிசையர் 2020-2024
- 469 Views
- ஒரு கருத்தை எழுதுக
மிகவும் ஆற்றல் மிக்க இயந்திரம், சிறந்த மைலேஜ் மற்றும் கூடுதல் பாதுகாப்பைப் பெறுகிறது
-
முன்பை காட்டிலும் அழகாகவும் மற்றும் அதிக சிறப்பம்சங்கள் இருப்பது போலத் தெரிகிறது.
-
7பிஎஸ் ஆற்றல் கூடுதலாகத் தரக்கூடிய பலேனோவிலிருந்து புதிய டூயல்ஜெட் 1.2 லிட்டர் இயந்திரத்தைப் பெறுகிறது.
-
புதிய இயந்திரம் ஒரு செயலற்ற இயந்திர நிறுத்தம்-தொடக்க அமைப்பையும் பெறுகிறது, இது கோரப்பட்ட எரிபொருள் சிக்கனத்தை குறைந்தது லிட்டருக்கு 2 கிமீ தருகிறது
-
சிறப்பம்ச புதுப்பிப்புகளில் வேகக் கட்டுப்பாடு, இஎஸ்சி, மலை ஏற்றங்களில் வாகனத்தை நிறுத்த உதவும் அமைப்பு, புதுப்பிக்கப்பட்ட ஒளிப்பரப்பு அமைப்பு ஆகியவை அடங்கும்.
-
திட்டமிட்டபடி, மாருதி டிசைருக்கான டீசல் இயந்திர விருப்பத்தை நிறுத்தி விட்டது.
புதிய பெட்ரோல் இயந்திரம் மட்டும் உடைய டிசைரின் விலை ரூபாய் 22,000 வரை அதிகரித்துள்ளது.
மூன்றாம்-தலைமுறை மாருதி டிசைர் சப்-4எம் செடான் தயாரிப்பிற்கு மையப் பகுதியில் புதுப்பிப்பை பெறுகிறது. புதிய தலைமுறை டிசைர் 2017 இல் அறிமுகமான பின்னர் இது முதல் ஃபேஸ்லிஃப்ட் ஆகும். டிசைருக்கு ஏற்கனவே பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரம் இருந்தது, ஆனால் இப்போது அது 2020 ஆம் ஆண்டிற்கான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டூயல்ஜெட் பெட்ரோல் இயந்திரத்தைப் பெறுகிறது.
முகப்பு மாற்றம் செய்யப்பட்ட டிஸைரில் மிகவும் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றம் புதிய முன்பக்க அமைவு ஆகும். அதன் முன்பக்க பாதுகாப்பு சட்டகம், காற்று தடுப்பு மற்றும் எண் பலகை இப்போது ஒரு வடிவமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, இதனால் டிசைர் முன்பை காட்டிலும் அழகாகத் தோற்றமளிக்கிறது. முன்பக்க பொருத்தப்பட்டுள்ள மூடுபனியில் பிரகாசமாக எரியக்கூடிய விளக்கு மேலும் இன்னும் கூடுதலாகத் தோற்றமளிக்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது அதன் இரட்டை-தொனி உலோக சக்கரங்களுக்கான புதிய வடிவமைப்பையும் பெறுகிறது. டிசைரின் பின்புற வடிவமைப்பு எந்தவித மாற்றமின்றி உள்ளதாகத் தெரிகிறது.
முகப்பு மாற்றம் செய்யப்பட்ட டிசைரில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று பிஎஸ்6 பலேனோவில் அறிமுகமான புதிய 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் இயந்திரம் ஆகும். இது 90பிஎஸ் ஆற்றலை உருவாக்குகிறது, இது முந்தைய 1.2 லிட்டர் கே-சீரிஸ் இயந்திரத்தைக் காட்டிலும் 83பிஎஸ் ஐ வழங்கியது, அதே நேரத்தில் முறுக்கு திறன் 113என்எம் ஒரே மாதிரியாக உள்ளது. புதிய பெட்ரோல் இயந்திரம் இந்த பிரிவுக்குச் செயலற்ற இயந்திர நிறுத்த-தொடக்க செயல்பாட்டை அறிமுகப்படுத்துகிறது, இது டிசைர் முன்பை காட்டிலும் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கின்றது:
இயந்திரம் |
2020டிசைர் |
ஃப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் டிசைர் |
மாறுபாடு |
பெட்ரோல்-எம்டி மைலேஜ் |
23.26 கேஎம்பிஎல் |
21.21 கேஎம்பிஎல் |
2.05 கேஎம்பிஎல் |
பெட்ரோல் ஏஎம்டி மைலேஜ் |
24.12 கேஎம்பிஎல் |
21.21 கேஎம்பிஎல் |
2.91 கேஎம்பிஎல் |
முகப்பு மாற்றம் செய்யப்பட்ட டிசைர் மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு (இஎஸ்சி) மற்றும் ஏஎம்டி வகைகளுடன் மலை ஏற்றங்களில் வாகனத்தை நிறுத்த உதவும் அமைப்பு என புதிய சிறப்பம்சங்களைப் பெறுகிறது. பிற புதிய சிறப்பம்சங்களில் பயணக் கட்டுப்பாடு மற்றும் பின்புறம் பார்க்கக் கூடிய கண்ணாடிகள் வெளியே தானாக மடியக்கூடிய அமைப்பு ஆகியவை அடங்கும். இது கருவித் தொகுப்பில் உள்ள அனலாக் டயல்களுக்கு இடையில் புதிய 4.2-அங்குல டிஎஃப்டி பல தகவல் தெரியக்கூடிய திரையைப் பெறுகிறது, அதே நேரத்தில் 7.0 அங்குல தொடுதிரை ஒளிப்பரப்பு அமைப்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மாருதி உட்புற அமைவில் உள்ள சிறப்பியல்புகளில் ஒரு புதிய வண்ணத்தை வழங்குகிறது. டிசைர் எல்இடி படவீழ்த்தி முகப்பு விளக்குகள், பின்புற ஏசி காற்றோட்ட அமைப்பு, அழுத்த-பொத்தான் மூலம் இயந்திர இயக்கம் மற்றும் தானியங்கி முறையிலான ஏசி ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
மாருதி டிசைர் ஃபேஸ்லிஃப்ட் முன்பு இருக்கக் கூடிய மாதிரியைக் காற்றிலும் சற்று விலை அதிகத்துடன் வருகிறது. பெட்ரோல் இயந்திரம் மட்டும் உடைய டிசைர் 2020 க்கான விலைகள் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) பின்வருமாறு:
வகை |
2020 டிசைர் |
ஃப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் டிசைர் |
மாறுபாடு |
எல்எக்ஸ்ஐ |
ரூபாய் 5.89 லட்சம் |
ரூபாய் 5.83 லட்சம் |
ரூபாய் 5,000 |
விஎக்ஸ்ஐ |
ரூபாய் 6.79 லட்சம் |
ரூபாய் 6.73 லட்சம் |
ரூபாய் 6,000 |
விஎக்ஸ்ஐ ஏஜிஎஸ் |
ரூபாய் 7.32 லட்சம் |
ரூபாய் 7.20 லட்சம் |
ரூபாய் 12,000 |
இசட்எக்ஸ்ஐ |
ரூபாய் 7.48 லட்சம் |
ரூபாய் 7.32 லட்சம் |
ரூபாய் 16,000 |
இசட்எக்ஸ்ஐ ஏஜிஎஸ் |
ரூபாய் 8.01 லட்சம் |
ரூபாய் 7.79 லட்சம் |
ரூபாய் 22,000 |
இசட்எக்ஸ்ஐ + |
ரூபாய் 8.28 லட்சம் |
ரூபாய் 8.22 லட்சம் |
ரூபாய் 6,000 |
இசட்எக்ஸ்ஐ + ஏஜிஎஸ் |
ரூபாய் 8.81 லட்சம் |
ரூபாய் 8.69 லட்சம் |
ரூபாய் 12,000 |
2020 டிசைர் சப்-4எம் செடான் பிரிவில் ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் அவுரா மற்றும் ஃபோர்டு ஆஸ்பியர் போன்ற கார்களுடன் தொடர்ந்து போட்டியிடுகிறது.