மாருதி செலிரியோ பிஎஸ்6 ரூபாய் 4.41 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது
published on ஜனவரி 24, 2020 01:32 pm by rohit for மாருதி செலரியோ 2017-2021
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
அனைத்து வகை மேம்படுத்தப்பட்ட பிஎஸ்6 கார்களும் ரூபாய்15,000 என்ற ஒரே மாதிரியான விலை உயர்வுடன் வரவிருக்கிறது
-
இந்த புதிய பிஎஸ் 6 காரில் பெட்ரோல் இயந்திரம் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளது.
-
தொடர்ச்சியாக 68பிஎஸ் ஆற்றல் மற்றும் 90என்எம் முறுக்கு திறனை உருவாக்குகிறது.
-
தற்போது முந்தைய மாதிரியிலிருந்த அதே 1.0-லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் கூட 5-வேகக் கைமுறை மற்றும் தானியங்கி முறை விருப்பத்துடன் வழங்கப்படுகிறது.
-
முன்பு பிஎஸ்4 மாதிரியைப் போலவே அதே அம்சங்களுடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
மாருதி நிறுவனம் மிகவும் அடிப்படை வாகனமான ஈகோ பிஎஸ்6 மாதிரியை அறிமுகப்படுத்தி இருக்கிறது என்று நாங்கள் சமீபத்தில் தெரிவித்தோம். தற்போது, இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் பிஎஸ்6 மாதிரியை ஒத்த 1.0- லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் செலிரியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஈகோவைப் போலவே, செலிரியோவின் சிஎன்ஜி வகைகளும் மேம்படுத்தலிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
இந்த கார் தற்போதும் அதே 1.0-லிட்டர் பெட்ரோல் இயந்திரம் மூலமாகவே இயக்கப்படுகிறது, இதன் தற்போதைய வடிவமானது 68பிஎஸ் ஆற்றல் மற்றும் 90என்எம் முறுக்கு திறனை உற்பத்தி செய்கிறது. 5-வேகக் கைமுறை அல்லது தானியங்கி முறை போன்ற செலுத்துதல் விருப்பங்கள் முன்பு இருந்த மாதிரியின் படியே தற்போதும் இருக்கிறது.
-
பிஎஸ்6 மாதிரிகள் குறித்த கூடுதல் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
திருத்தப்பட்ட விலைகளை இங்கே காணலாம்:
வகைகள் |
பிஎஸ்4 |
பிஎஸ்6 |
வித்தியாசம் |
எல்எக்ஸ்ஐ |
ரூபாய் 4.26 லட்சம் |
ரூபாய் 4.41 லட்சம் |
ரூபாய் 15,000 |
எல்எக்ஸ்ஐ (O) |
ரூபாய் 4.34 லட்சம் |
ரூபாய் 4.49 லட்சம் |
ரூபாய் 15,000 |
விஎக்ஸ்ஐ |
ரூபாய் 4.65 லட்சம் |
ரூபாய் 4.8 லட்சம் |
ரூபாய் 15,000 |
விஎக்ஸ்ஐ (O) |
ரூபாய் 4.72 லட்சம் |
ரூபாய் 4.87 லட்சம் |
ரூபாய் 15,000 |
விஎக்ஸ்ஐ ஏஎம்டி |
ரூபாய் 5.08 லட்சம் |
ரூபாய் 5.23 லட்சம் |
ரூபாய் 15,000 |
விஎக்ஸ்ஐ ஏஎம்டி (O) |
ரூபாய் 5.15 லட்சம் |
ரூபாய் 5.3 லட்சம் |
ரூபாய் 15,000 |
இசட்எக்ஸ்ஐ |
ரூபாய் 4.9 லட்சம் |
ரூபாய் 5.05 லட்சம் |
ரூபாய் 15,000 |
இசட்எக்ஸ்ஐ (O) |
ரூபாய் 5.31 லட்சம் |
ரூபாய் 5.46 லட்சம் |
ரூபாய் 15,000 |
இசட்எக்ஸ்ஐ ஏஎம்டி |
ரூபாய் 5.33 லட்சம் |
ரூபாய் 5.48 லட்சம் |
ரூபாய் 15,000 |
இசட்எக்ஸ்ஐ ஏஎம்டி (O) |
ரூபாய் 5.43 லட்சம் |
ரூபாய் 5.58 லட்சம் |
ரூபாய் 15,000 |
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மாருதி நிறுவனம் நிலையான பாதுகாப்பு அம்சங்களுடன் செலிரியோவை புதுப்பித்திருக்கிறது. இது தவிர, உலோகச் சக்கரங்கள் மற்றும் மின்சாரம் சரிசெய்யக்கூடிய ஓஆர்விஎம்கள் உள்ளிட்ட அதே விதமான அம்சங்களுடன் வசதியான ஹேட்ச்பேக் போன்ற கூடுதல் வசதிகள் வழங்கப்படுகிறது.
மேலும் பார்க்க: 2020 ஆம் ஆண்டில் மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் முதல் முறையாகச் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது
விஎக்ஸ்ஐ சிஎன்ஜி வகையின் விலை ரூபாய் 5.29 லட்சமாகும், அதே போல் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி (ஓ) வகையின் விலை ரூபாய் 5.38 லட்சமாக இருக்கும். மாருதி நிறுவனம் அதன் அனைத்து மாதிரிகளிலும் இருக்கும் சிஎன்ஜி வகைகளின் பிஎஸ் 6 அமைப்புகளை அறிமுகப்படுத்தும் போது பிற அம்சங்களை காணலாம்.
மேலும் படிக்க: மாருதி செலிரியோ ஏஎம்டி
0 out of 0 found this helpful