மாருதி ப்ரீஸாவின் பேஸ் வேரியன்ட் (விலை குறைந்த மாடல் ) அறிமுகம் ஆவதற்கு முன்னதாகவே புகைப்படத்தில் சிக்கியது.
மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 க்காக பிப்ரவரி 15, 2016 05:55 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி நிறுவனத்தின் நான்கு - மீட்டர் உயரத்திற்கு குறைவான முதல் காம்பேக்ட் SUV வாகனமான விடாரா ப்ரீஸா இந்தியாவில் இந்த நிதியாண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . இந்த மிகவும் எதிர்பார்க்கப்படும் காம்பேக்ட் SUV வாகனத்தின் பேஸ் வேரியன்ட் (அடிப்படை அல்லது குறைந்த விலை மாடல் ) எங்கள் கண்களில் தென்பட்டது. நீங்கள் இந்த ப்ரீஸா SUV வாகனத்தின் டாப் எண்டு மாடலைப் பார்த்து அதன் எதிர்மறையான வண்ண பூச்சைப் கண்டு மெய் மறந்த ஏராளமானவர்களில் ஒருவர் என்றால் , இந்த ப்ரீஸாவின் பேஸ் வேரியன்ட் எப்படி இருக்கப்போகிறது என்பதையும் கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டும். ப்ரீஸா SUV வாகனங்களின் வேரியன்ட்களின் இடையே உள்ள வேற்றுமை அப்போது தான் உங்களுக்கு நன்கு புலப்படும்.
90PS சக்தியை வெளியிடும் பியட் மூலம் பெறப்பட்ட , நன்கு சோதிக்கப்பட்ட DDiS200 என்ஜின் ஆப்ஷன் ஒன்றுடன் மட்டும் தான் இந்த ப்ரீஸா வெளியாக உள்ளது. அடிப்படை வேரியன்ட் 5.3 லட்சம் என்ற விலையிலும் டாப் எண்டு வேரியன்ட் சுமார் 8 லட்சங்களை ஒட்டிய விலையுடனும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . மேலும் இந்த வாகனங்கள் மாருதியின் ஸ்டேண்டர்ட் டீலர்ஷிப் மூலமாக விற்பனை செய்யபடும் என்றும், மாருதி நிறுவனத்தின் ப்ரீமியம் டீலர்ஷிப் மையங்களான நெக்ஸா மூலம் இந்த வாகனங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும் தெரிய வருகிறது. இதைத் தவிர , வேரியன்ட் வாரியாக ப்ரீஸாவில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி கசிந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இந்த புகைப்படத்தில் உள்ள வேரியன்ட் ப்ரீஸா வாகனங்களின் Ldi வேரியன்ட் என்பதையும் நாம் உறுதி செய்துக் கொள்ள முடிகிறது. மேலும் இந்த ஒரு வேரியண்டில் மட்டும் ஓட்டுனருக்கான ஏயர் பேக், முன்புற பயணிக்கான ஏயர்பேக் மற்றும் EBD உடன் கூடிய ABS போன்ற பாதுகாப்பு அம்சங்கள் ஆப்ஷனலாக கொடுக்கப்படுகிறது.. போர்ட் ஈகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா TUV 300 வாகனங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மாருதி விடாரா ப்ரீஸா SUV வாகனங்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என்று யூகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க : மாருதி விடாரா ப்ரீஸா 2016 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டது.