மாருதி விடாரா ப்ரீஸா 2016 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டது.
manish ஆல் பிப்ரவரி 03, 2016 10:46 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
கிரேடர் நொய்டாவில் நடைபெற்று வரும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுசுகி நிறுவனத்தின் விடாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த வாகனத்தின் விற்பனை துவங்கும் என்று தெரிய வருகிறது. சுசுகி நிறுவனத்தின் இந்திய கூட்டு நிறுவனமான மாருதி நிறுவனத்தால் முழுதும் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது இந்த விடாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV வாகனங்கள்.
வடிவமைப்பை பொறுத்தவரை , கலைநயத்துடன் மிகவும் நேர்த்தியாக இந்த வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ப்லோடிங் ரூப்லைன் ,LED உடன் கூடிய ப்ரொஜெக்டர் ஹெட் லேம்ப் , அப்ரைட் ஹூட், ஏங்குலர் டெயில்லேம்ப் , நீள்சதுர வடிவிலான வீல் ஆர்செஸ் , ரைசிங் பெல்ட் லைன் மற்றும் நன்கு உயர்த்தப்பட்ட கிரௌண்ட் கிளியரன்ஸ் ஆகியவை இந்த வாகனத்தின் தோற்றத்தை கட்டுறுதி மிக்கதாக காட்டுவது மட்டுமின்றி நல்ல ப்ரீமியம் வாகனமாகவும் காட்டுகிறது. இந்த ப்ரீஸா கார்களின் க்ரில் மீது எஸ் - க்ராஸ் கார்களில் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.
மிக அதிக கிரௌண்ட் கிளியரன்ஸ் ( 198 மி.மீ) கொடுக்கப்பட்டுள்ளதால் கரடு முரடான பாதைகளில் வெகு லாவகமாக இந்த ப்ரீஸா பயணிக்கும் என்று தெரிகிறது. 215/60 அளவிலான R16 அல்லாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வெளிப்புறம் இருக்கும் அதே அழகுடன் வாகனத்தின் உட்புறமும்(இன்டீரியர்ஸ் ) அலங்கரிக்கப்பட்டுள்ளது. 7 - அங்குல இன்போடைன்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆபிள் கார்ப்ளே அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. பலேனோ , ஸ்விப்ட் மற்றும் சியஸ் கார்களில் உள்ளது போன்ற நேர்த்தியான ஸ்டீரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக எஸ் -க்ராஸ் ப்ரீமியம் க்ராஸ்ஓவர் வகை வாகனங்களில் உள்ளது போல் ஸ்டீரிங் சக்கரத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அழகிய காம்பேக்ட் SUV வாகனங்கள் பல வித என்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்பட உள்ளது. 1.2-லிட்டர் மற்றும் 1.4- லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களிலும், பியட் இடம் இருந்து பெறப்பட்ட 1.3 லிட்டர் DDiS என்ஜின் ஆப்ஷனுடனும் விற்பனைக்கு வர உள்ளது. இந்த DDiS என்ஜின் 90PS அளவுக்கு சக்தியை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. காம்பேக்ட் SUV பிரிவு வாகனங்களில் இந்த அளவு என்ஜின் ஆற்றல் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருப்பதால் இந்த இஞ்சின் ஆப்ஷன் சேர்கப்பட்டுள்ளது. மாருதியின் ப்ரீமியம் டீலர்ஷிப் மையமான நெக்ஸா மூலம் விற்பனை செய்யப்பட உள்ள இந்த விடாரா ப்ரீஸா வாகனங்கள், மஹிந்திராவின் TUV 300 மற்றும் போர்ட் ஈகோஸ்போர்ட் வாகனங்களுடன் போட்டியிடும் என்று தெரிகிறது.
இதையும் படிக்கவும்