டெல்லியில் மஹிந்திரா XUV500 மற்றும் ஸ்கார்பியோ ஆகியவை 1.9L mஹாக் என்ஜின்களை பெறுகின்றன
published on ஜனவரி 25, 2016 06:32 pm by nabeel for மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
தனது முன்னணி SUV-க்களுக்கான ஒரு சிறிய அளவிலான என்ஜினின் உருவாக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்று நாங்கள் முன்னமே அறிவித்திருந்த நிலையில், அந்த மேம்படுத்தப்பட்ட கார்கள் இப்போது வெளிவந்துள்ளன. XUV500 மற்றும் ஸ்கார்பியோ ஆகிய கார்களுக்கான 2.0-லிட்டரை விட சற்றுக் குறைவான திறனுள்ள என்ஜின்களை கொண்ட டீசல் வகைகளை மஹிந்திரா நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. 2.0 லிட்டர் அல்லது அதற்கும் அதிக திறனுள்ள டீசல் என்ஜின்களுக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டதன் எதிரொலிப்பே, இந்த அளவு குறைப்பிற்கான முக்கிய காரணமாக அமைந்தது. இந்த என்ஜின் தேர்வுகள், நாட்டின் தலைநகரத்தில் மட்டுமே துவக்கத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேற்கண்ட தடையின் விளைவாக, மஹிந்திராவின் ஏறக்குறைய முழு SUV வரிசையின் விற்பனையும் இழந்த நிலையில், இது ஒரு சிறந்த செயல்பாடாக அமைகிறது. இந்த விற்பனை பாதிக்கப்பட்ட பட்டியலில் பலேரோ, தார், ஸ்கார்பியோ, XUV500 மற்றும் சைலோ ஆகியவை உட்படுகின்றன.
மஹிந்திராவின் mஹாக் குடும்பத்தை சேர்ந்த இந்த என்ஜின்கள் 1,990cc யூனிட்கள் ஆகும். இவை XUV500-க்கு 140bhp-யும், ஸ்கார்பியோவிற்கு 120bhp-யும் என்று மதிப்பிடப்படுகின்றன. இது தவிர வேறெந்த விபரங்களையும், மஹிந்திரா தரப்பில் வெளியிடப்படவில்லை என்றாலும், கடந்த 2014 ஆகஸ்ட் மாதமே இந்த என்ஜின்கள் உருவாக்கும் பணிகளை அவர்கள் துவங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி டீசல் தடை மீது மஹிந்திராவிற்கு கடும் அதிருப்தி இருக்கிறது. மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் இயக்குனர் பவன் கோயின்கா கூறுகையில், “அரசினால் நிர்ணயிக்கப்பட்ட எல்லா விதிமுறைகளுக்கும் இவ்வாகனங்கள் ஏற்ற முறையில் இருந்தும், டீசல் வாகனங்கள் மட்டும் ஏன் ஒரு குற்றவாளியை போல பார்க்கப்படுகிறது என்பது எங்களுக்கு புரியவில்லை. ஒரு பகுதியின் எல்லா விதிமுறைகளுக்கும் ஏற்ப உள்ள ஒரு தயாரிப்பிற்கு எப்படி தடை விதிக்க முடியும்? இது போன்ற ஒரு நடவடிக்கையை எடுக்கும் முன் வாகன தொழிற்துறை பிரதிநிதிகளிடம் எந்தவிதமான கலந்தாலோசனையும் நடத்தப்படவில்லை. இதனால் டீலர்ஷிப்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களை என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. எனவே இதில் விரைவில் ஒரு தெளிவு ஏற்படுத்தப்படும் என்று நம்புகிறோம்” என்றார்.
இந்த குழுமத்தின் தலைவர் திரு.ஆனந்த் மஹிந்திரா கூட மேற்கூறிய தடையை ஏற்பதாக இல்லை. அவர் கூறுகையில், “நாங்கள் சவால்களை எதிர்கொண்டு அதற்கு மேலாக எழுந்து வருவோம். பல ஆண்டுகளாக நாங்கள் செய்து வருவது போல, எங்களின் விரிவாக்கத் திறன் மூலம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துவோம். மஹிந்திராவின் டிஎன்ஏ-வின் மையப் பகுதியில் எந்த அசைவும் இல்லாத நம்பிக்கை காணப்படுவதால், கடந்து செல்வது கடினமாக இருந்தாலும், மஹிந்திரா தொடர்ந்து முன்னேறும். எனவே டீசல் வாகனங்களின் மீதான இந்த முடிவு உகந்தது அல்ல என்று நாங்கள் நம்பினாலும், அதற்கு நாங்கள் மதிப்பு அளிப்பதோடு, அவர்களின் நிபந்தனைகளுக்கு ஒத்துப் போகும் வாகனங்களை நாங்கள் உருவாக்குவோம். உச்சநீதிமன்றம் என்பது சமூக நீதியையும், இந்திய ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் ஒரு சங்கம் என்று நான் எப்போதும் நம்புகிறேன்” என்றார்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful