பிப்ரவரி மாதத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் சலுகைக ள்: எஞ்சியிருக்கும் பிஎஸ்4 மாதிரிகளின் விலையில் ரூபாய் 3 லட்சம் வரை தள்ளுபடி
published on பிப்ரவரி 22, 2020 11:14 am by rohit for மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4
- 39 Views
- ஒரு கருத்தை எழுதுக
நீங்கள் தேர்வுசெய்த வகையைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடும் என்றாலும் அனைத்து மாதிரிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன
-
பொலிரோ பவர்+ கார் மிகக் குறைந்த அளவில் பரிமாற்ற சலுகையைப் பெறுகிறது.
-
மஹிந்திரா அல்தூராஸ் ஜி4 காரில் கூடுதல் ரொக்க தள்ளுபடியை வழங்குகிறது.
-
அனைத்து சலுகைகளும் பிப்ரவரி 29, 2020 வரை செல்லுபடியாகும்.
பிஎஸ்4 இயந்திரங்களைத் தயாரித்து இருப்பு வைத்துள்ள நிறுவனங்களில் மஹிந்திரா நிறுவனமும் ஒன்று. தற்போது, பிஎஸ்6 விதிமுறைகள் (ஏப்ரல் 1, 2020 முதல்) நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இந்த வகைகளை விற்பனை செய்வதற்காக முழு அளவில் சலுகைகளையும் தள்ளுபடியையும் வழங்குகிறது. இதுவரை, எக்ஸ்யூவி300 இன் பெட்ரோல் மூலம் இயங்கும் வகைகள் மட்டுமே மஹிந்திராவின் வரிசையில் பிஎஸ்6 இணக்கமாக உள்ளன. மஹிந்திராவின் தற்போதைய சலுகைகளை உற்று நோக்கலாம்:
மாதிரிகள் |
ரொக்க தள்ளுபடி |
பரிமாற்றம் சலுகை |
பெருநிறுவன போனஸ் |
மொத்த நன்மைகள் |
35,000 ரூபாய் வரையிலும் |
40,000 ரூபாய் வரையிலும் |
4,500 ரூபாய் வரையிலும் |
79,500 ரூபாய் வரையிலும் |
|
மராசோ |
ரூபாய் 1.34 லட்சம் வரையிலும் |
25,000 ரூபாய் வரையிலும் |
7,000 ரூபாய் வரையிலும் |
ரூபாய் 1.66 லட்சம் வரையிலும் |
எக்ஸ்யுவி500 |
55,000 ரூபாய் வரையிலும் |
40,000 ரூபாய் வரையிலும் |
9,000 ரூபாய் வரையிலும் |
ரூபாய் 1.04 லட்சம் வரையிலும் |
ஸ்கார்பியோ |
44,400 ரூபாய் வரையிலும் |
30,000 ரூபாய் வரையிலும் |
5,000 ரூபாய் வரையிலும் |
79,400 ரூபாய் வரையிலும் |
ஆல்ட்ரோஸ் ஜிG4 |
ரூபாய் 2.4 லட்சம் வரையிலும் |
50,000 ரூபாய் வரையிலும் |
15,000 ரூபாய் வரையிலும் |
ரூபாய் 3.05 லட்சம் வரையிலும் |
போலேரோ பவர்+ |
13,100 ரூபாய் வரையிலும் |
10,000 ரூபாய் வரையிலும் |
4,000 ரூபாய் வரையிலும் |
27,100 ரூபாய் வரையிலும் |
டியுவி300 |
56,751 ரூபாய் வரையிலும் |
30,000 ரூபாய் வரையிலும் |
5,000 ரூபாய் வரையிலும் |
91,751 ரூபாய் வரையிலும் |
கேயுவி100 என்எக்ஸ்டி |
38,645 ரூபாய் வரையிலும் |
20,000 ரூபாய் வரையிலும் |
4,000 ரூபாய் வரையிலும் |
62,645 ரூபாய் வரையிலும் |
-
அனைத்து சமீபத்திய கார் ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து இங்கே காணலாம்.
குறிப்பு: மேற்கூறிய சலுகைகள் அனைத்தும் டெல்லியில் மட்டுமே பொருந்தும். இருப்பினும், பிற நகரங்களில் சலுகைகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட வகையைப் பொறுத்து சலுகைகள் மாறுபடக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, சரியான விவரங்களுக்கு அருகிலுள்ள மஹிந்திரா டீலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அல்தூராஸ் ஜி4 இல் கார் தயாரிப்பு நிறுவனம் அதிகபட்சமாக ரூபாய் 3.05 லட்சம் வரை சலுகையை வழங்குகிறது. இது ரூபாய் 2.4 லட்சம் வரை ரொக்க தள்ளுபடி, ரூபாய் 50,000 வரை பரிமாற்ற சலுகை மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 15,000 வரை அளிக்கிறது.
மஹிந்திராவின் எம்பிவி, மராசோ, ஆகியவை அதிக தள்ளுபடிகளை வழங்கக்கூடிய மஹிந்திராவின் இரண்டாவது மாதிரியாகும். வாங்குபவர்கள் ரூபாய் 1.66 லட்சம் வரை மொத்த சலுகைகளை பெறலாம், இது ரூபாய் 1.34 லட்சம் வரை ரொக்க தள்ளுபடி, ரூபாய் 25,000 வரை பரிமாற்ற சலுகை மற்றும் ரூபாய் 7,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவற்றை வழங்குகிறது.
மேலும் படிக்க: அல்தூராஸ் ஜி4 தானியங்கி
0 out of 0 found this helpful