மஹிந்த்ரா KUV 100 வேரியண்ட்கள்: எதை வாங்க ுவது என்று நீங்களே தீர்மானம் செய்யுங்கள்
published on ஜனவரி 19, 2016 04:34 pm by saad for மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாபெரும் இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்த்ரா, தனது KUV 100 காரை, புதிய மைக்ரோ SUV பிரிவில் அறிமுகப்படுத்தியது. பல்வேறு தரப்பினர் இந்த காரின் அறிமுகத்திற்காக காத்திருந்தாலும், KUV 100 காரில் வழங்கப்பட்டுள்ள சுவாரசியமான அம்சங்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் இன்றைய இளம் தலைமுறையை குறிவைத்து ஈர்க்கக் கூடியதாக இருக்கின்றன. மேலும், இதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை இதற்கு முன்பு வெளிவந்த வேறு எந்த மஹிந்த்ரா காரிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. இவை, பிரெத்தியேகமாக KUV 100 காரில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. மஹிந்த்ராவின் புதிய கார், K2, K4, K6, மற்றும் K8 போன்ற 4 விதமான வேரியண்ட்களில், பல டிரிம் லெவல்களுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த காரை, புதிய 1198cc mfalcon டீசல் மற்றும் பெட்ரோல் இஞ்ஜின்கள் இயக்குகின்றன. டீசல் இஞ்ஜின் 77bhp என்ற அளவு சக்தியை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், இதன் பெட்ரோல் இஞ்ஜின் 82 bhp சக்தியை உற்பத்தி செய்கின்றது.
இன்றைய தேதியில், ஒவ்வொரு காரும் பல விதமான வேரியண்ட்களுடன் வெளிவருகின்றன. பொதுவாக, பல உன்னதமான மாடல்களில் இருந்து ஒன்றை மட்டும் தேர்வு செய்ய நினைக்கும் போது, குழப்பம் மட்டுமே மிஞ்சும். KUV 100 காரை வாங்க வேண்டும் என்று நீங்கள் எண்ணியிருந்தால், உங்களுக்கும் நிச்சயமாக இதே நிலைதான். உடனடியாக உங்கள் குழப்பம் தீர வேண்டும் என்றால், மேலும் வாசித்து, KUV 100 வேரியண்ட்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது வேலையை சுலபமாக்க, நாங்கள் இந்த காரின் வேரியண்ட்களை பட்டியலிட்டு, ஆராய்ந்து, சுருக்கமாக இங்கு விவரித்துள்ளோம். வேரியண்ட்களின் விவரப் பட்டியலுக்குள் நுழைவதற்கு முன்னர், KUV 100 காரின் அனைத்து வேரியண்ட்களிலும் முன்புறத்தில் இரட்டை காற்றுப் பைகள் ஆப்ஷனல் பாதுகாப்பு அம்சமாக வருகின்றன; அதே நேரத்தில், அனைத்து வேரியண்ட்களிலும், ABS அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே எடுத்துரைக்கிறோம். கூட்டல் குறி உள்ள வேரியண்ட்கள் அனைத்தும் இரட்டை காற்றுப் பைகள் இணைக்கப்பட்டவை. மேலும், இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகளும், டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.
மஹிந்த்ரா KUV 100 K2 (அடிப்படை): பெட்ரோல் - ரூ. 4.5 லட்சங்கள்/ டீசல் – ரூ. 5.2 லட்சங்கள்
சிக்கனமான பட்ஜெட்டில், அடிப்படை தேவைகள் பூர்த்தியாக வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்களின் தேர்வு, K2 அடிப்படை வேரியண்ட்டாக இருக்கும். பாடி நிறத்திலேயே பம்பர்கள், பவர் ஸ்டியரிங், பின்புற ஸ்பாய்லர் மற்றும் ஹீட்டருடன் வரும் மேனுவல் குளிர் சாதன வசதி போன்ற கவர்ச்சிகரமான அம்சங்கள் நிறைந்த இந்த கார், முதல் முதலாக கார் வாங்குபவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக இருக்கும்.
- பாடி நிறத்திலேயே பம்பர்கள்
- பின்புற ஸ்பாய்லர்
- டில்ட் ஃபங்சன் கொண்ட பவர் ஸ்டியரிங்
- ஹீட்டர் வசதியுடன் வரும் மேனுவல் AC
- முன்புறத்தில் ஆர்ம் ரெஸ்ட்
- கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர்
- ஸ்டீல் சக்கரங்கள்
- 6 இருக்கைகள்
- எலெக்ட்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் இஞ்ஜின் இம்மொபிலைசர் வசதி கொண்ட ஆண்டி-லாக் ப்ரேக்கிங் அமைப்பு
மஹிந்த்ரா KUV 100 K4 பெட்ரோல் ரூ. 4.8 லட்சங்கள்/ டீசல் ரூ. 5.6 லட்சங்கள்
K4 வேரியண்ட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில், சில வசீகரமான அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. மேலும், இந்த டிரிம்மில் ஒரு சில ஆஃப்-ரோடு திறன்களும் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- பாடி நிறத்திலேயே கதவு கைப்பிடி மற்றும் விங் பிளாப்கள்
- சக்கர ஆர்ச் மீது க்ளாடிங்க்
- சேறு படாமல் இருக்க மட் பிளாப் மற்றும் வீல் கேப்கள்
- மடக்கக் கூடிய பின்புற இருக்கை
- பவர் விண்டோஸ் வசதி
- சென்ட்ரல் லாகிங்க் அமைப்பு
மஹிந்த்ரா KUV 100 K6: பெட்ரோல் ரூ. 5.4 லட்சங்கள்/ டீசல் ரூ. 6.3 லட்சங்கள்
உல்லாசமாகவும், ஆடம்பரமாகவும் பயணம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வேரியண்ட்டை தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம். இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், குளிரூட்டப்பட்ட க்லோவ் பாக்ஸ், பல்வேறு டிரைவிங் மோடுகள் மற்றும் ஏராளமான மனதைக் கவரும் அம்சங்கள் போன்றவை K4 வேரியண்ட்டில் நிறைந்துள்ளதால், இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
- முன்புற கிரில் பகுதியில் குரோம் வேலைப்பாடு
- கருமை நிறத்தில் B-பில்லர் பகுதி
- காரின் மேல் பொருத்தப்பட்டுள்ள ரூஃப் ரெயில்கள் மற்றும் ஆன்டெனா
- பக்கவாட்டில், கதவின் மீது உள்ள க்ளாடிங்க்
- பியானோ கருப்பு நிறத்தில் வரும் சென்டர் கன்சோல்
- ஓட்டுனரின் இருக்கை உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி
- பின்புறத்தில் ஆர்ம்-ரெஸ்ட்
- கீ-லெஸ் என்ட்ரி
- மின்சாரத்தால் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய விங் மிர்ரர்கள்
- குளிரூட்டப்பட்ட க்லோவ்-பாக்ஸ்
- ஃபாலோ-மீ-ஹோம் முன்புற விளக்குகள் மற்றும் முன்புற கதவுகளில் படுல் (puddle) விளக்குகள்
- 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 ட்வீட்டர்கள் ஆகியவை இணைக்கப்பட்ட இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம்
- ட்ரைவ் மோடுகள்: பவர் மற்றும் எக்கோ
மஹிந்த்ரா KUV 100 K8: பெட்ரோல் – ரூ. 6.0 லட்சங்கள்/ டீசல் ரூ. 6.8 லட்சங்கள்
KUV 100 காரின் உயர்தர வேரியண்ட்டான K8 டிரிம்மில், ஏராளமான கண்ணைக் கவரும் அம்சங்களும், மனதை ஈர்க்கும் அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. காலையிலும் பளீரென்று எரியும் LED விளக்குகள், மைக்ரோ-ஹைபிரிட் அம்சம் (இஞ்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப்) மற்றும் அலாய் சக்கரங்கள் போன்றவை குறிப்பிடத்தக்க சிறந்த அம்சங்களாகும்.
- முன்புறத்தில் குரோம் வேலைப்பாடுகள் கொண்ட பனி விளக்குகள்
- அனைத்து கதவுகளிலும் படுல் (puddle) விளக்குகள்
- பின்புற கதவு கைப்பிடிகளில் வெள்ளி நிறத்தில் வேலைப்பாடுகள்
- 12 ஸ்போக் அலாய் சக்கரங்கள்
- மைக்ரோ ஹைபிரிட் அம்சம்
- காலையிலும் பளீரென்று எரியும் விளக்குகள்
KUV 100 ஆப்ஷனல் வெர்ஷன்கள்
மஹிந்த்ரா KUV 100 K2+ பெட்ரோல் ரூ. 4.7 லட்சங்கள் / டீசல் ரூ. 5.5 லட்சங்கள்
மஹிந்த்ரா KUV 100 K4+ பெட்ரோல் ரூ. 5.1 லட்சங்கள்/ டீசல் ரூ. 5.9 லட்சங்கள்
மஹிந்த்ரா KUV 100 K6+ பெட்ரோல் ரூ. 5.7 லட்சங்கள்/ டீசல் ரூ. 6.5 லட்சங்கள்
மேலும் வாசிக்க ஒப்பீடு: மஹிந்த்ரா KUV 100 vs கிராண்ட் i10 vs ஸ்விஃப்ட் vs பிகோ
0 out of 0 found this helpful