Mahindra XEV 9e ஃபுல்லி லோடட் பேக் 3 வேரியன்ட்டின் விலை ரூ.30.50 லட்சத்தில் தொடங்குகிறது
79 kWh பேட்டரி பேக் கொண்ட டாப்-ஸ்பெக் பேக் 3 வேரியன்ட் -க்கான முன்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 14 -ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
79 kWh பேட்டரியுடன் கூடிய டாப்-ஸ்பெக் பேக் 3 வேரியன்ட்டின் விலை ரூ. 30.50 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜனவரி 14 முதல் டெஸ்ட் டிரைவ்கள் படிப்படியாக தொடங்கப்படவுள்ளன.
-
மார்ச் மாதம் முதல் டாப்-எண்ட் வேரியன்ட்டுக்கான டெலிவரிகள் தொடங்கவுள்ளன.
-
கனெக்டட் LED DRL -கள் மற்றும் டெயில் லைட்ஸ், LED ஹெட்லைட்கள் மற்றும் 20-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை உள்ளன.
-
மூன்று 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் மற்றும் ஒரு இல்லுமினேட்டட் லோகோவுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகிய வசதிகள் இந்த காரில் உள்ளன.
-
பனோரமிக் கிளாஸ் ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் செல்ஃபி கேமரா ஆகியவை அடங்கும்.
-
பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, பார்க் அசிஸ்ட் மற்றும் லெவல்-2 ADAS ஆகிய வசதிகளும் உள்ளன.
-
656 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
79 kWh பேட்டரியுடன் கூடிய மஹிந்திரா XEV 9e காரின் ஃபுல்லி லோடட் ‘பேக் 3’ வேரியன்ட் -க்கான விலை 30.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) இருந்து தொடங்குகிறது. இந்த விலை ஹோம் சார்ஜரை உள்ளடக்கியதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதை தனித்தனியாக வாங்க வேண்டும். XEV 9e ஆனது மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது: பேக் 1, பேக் 2 மற்றும் பேக் 3 மற்றும் என்ட்ரி லெவல் வேரியன்ட்டின் விலை 2024-ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் முன்பதிவுகள் பிப்ரவரி 14, 2024 முதல் தொடங்கும் மற்றும் ஜனவரி 14, 2025 முதல் டெஸ்ட் டிரைவ்கள் படிப்படியாகத் தொடங்கவுள்ளன. XEV 9e காரின் டாப்-எண்ட் வேரியன்ட் -க்கான டெலிவரிகள் மார்ச் 2025 முதல் தொடங்கவுள்ளன. மஹிந்திரா XEV 9e காரின் விரிவான விலை விவரங்கள் இங்கே:
மஹிந்திரா XEV 9e இன் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள்:
வேரியன்ட் |
பேட்டரி பேக் ஆப்ஷன்கள் |
|
59 kWh |
79 kWh |
|
பேக் 1 |
ரூ.21.90 லட்சம் |
– |
பேக் 2 |
அறிவிக்கப்படவுள்ளது |
அறிவிக்கப்படவுள்ளது |
பேக் 3 |
அறிவிக்கப்படவுள்ளது |
ரூ.30.50 லட்சம் |
மஹிந்திரா XEV 9e காரில் கிடைக்கும் விஷயங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்:
வெளிப்புறம்
மஹிந்திரா XEV 9e ஒரு தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது ஆகவே இது மற்ற கார்களில் இருந்து தனித்து நிற்கிறது. இது செங்குத்தாக உள்ள LED புரொஜெக்டர் ஹெட்லைட்களின் பக்கங்களுக்கு நீட்டிக்கப்படும் கனெக்டட் LED DRL -களை பெறுகிறது. EV என்பதால் கிரில் காலியாக உள்ளது. அதற்கு கீழே பிளாக் கலரில் ஒரு பெரிய ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது .
XEV 9e ஒரு எஸ்யூவி-கூபே என்பதால் இது காரின் பின்பகுதியை நோக்கி ஒரு சாய்வான ரூஃபை கொண்டுள்ளது. இது ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள், பாடி கலர்டு ORVM -கள் மற்றும் EV -யின் நீளம் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள பிளாக் கலர் கிளாடிங் உடன் வருகிறது. இது 19-இன்ச் வீல்களை ஸ்டாண்டர்டாக வருகின்றன. வேண்டுமென்றால் பெரிய 20-இன்ச் ஏரோடைனமிக்கிறாக வடிவமைக்கப்பட்ட டூயல்-டோன் அலாய் வீல்களை ஒரு ஆப்ஷனல் ஆக்ஸசரி தேர்வு செய்யலாம்.
பின்புறத்தில் உள்ள கனெக்டட் எல்இடி டெயில் லைட் செட்டப் முன்பக்கத்தை போலவே உள்ளது. டெயில்கேட்டில் ஒரு ஒளிரும் இன்ஃபினிட்டி லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. பின்புற பம்பர் பிளாக் கலரில் ஒரு குரோம் அப்ளிக் உடன் உள்ளது.
இன்ட்டீரியர்
XEV 9e -ன் உட்புறம் வெளிப்புற வடிவமைப்பைப் போலவே அதிநவீனமாக உள்ளது. இது ஒரு லேயர்டு டேஷ்போர்டு வடிவமைப்புடன் வருகிறது. இதன் மேல் பகுதியில் மூன்று 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் ஒளிரும் லோகோவுடன் கூடிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் உள்ளது. அதே சமயம் கீழ் பகுதி சென்டர் கன்சோலில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
ஸ்டீயரிங், ஆடியோ மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பிற்கான பட்டன்கள் மட்டுமின்றி, 10 வினாடிகளுக்கு கூடுதல் சக்தியை கொடுப்பதற்காக ஒரு பட்டனும் உள்ளது.
சென்டர் கன்சோலில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவிங் மோடுகள் மற்றும் டிரைவ் செலக்டர் லீவருக்கான கன்ட்ரோல்கள் உள்ளன. இரண்டு கப் ஹோல்டர்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜரும் உள்ளது.
இருக்கைகள் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகின்றன. மேலும் அனைத்து இருக்கைகளும் 3-பாயின்ட் சீட் பெல்ட்கள் மற்றும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்களுடன் வருகின்றன. பின்புற ஏசி வென்ட்கள் மூலம் பின்பக்க பயணிகளுக்கான கம்ஃபோர்ட் மேம்பட்டதாக இருக்கும்.
மேலும் படிக்க: மஹிந்திரா பிஇ 6 பேக் 3 விலை ரூ.26.9 லட்சத்தில் தொடங்குகிறது
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
மஹிந்திரா XEV 9e பிரீமியம் வசதிகளுடன் வருகிறது. லைட்டிங் எலமென்ட்களுடன் கூடிய பனோரமிக் கிளாஸ் ரூஃப், மல்டி ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 1400-வாட் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் மற்றும் வென்டிலேஷன் மற்றும் பவர்டு முன் இருக்கைகள் உள்ளன. இது ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.
7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை பாதுகாப்புக்காக உள்ளன. கூடுதலாக இது டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்துடன் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளுடன் வருகிறது. மஹிந்திரா சில சொகுசு மாடல்களில் உள்ளதை போன்ற பார்க் அசிஸ்ட் வசதியை XEV 9e காரில் கொடுத்துள்ளது.
பேட்டரி பேக், செயல்திறன் மற்றும் ரேஞ்ச்
மஹிந்திரா XEV 9e இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் ரியர் வீல் டிரைவ் (RWD) செட்டப் உடன் வருகிறது. விரிவான விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
59 kWh |
79 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் (கள்) எண்ணிக்கை |
1 |
1 |
பவர் |
231 PS |
286 PS |
டார்க் |
380 Nm |
380 Nm |
வரம்பு (MIDC பகுதி 1 + பகுதி 2) |
542 கி.மீ |
656 கி.மீ |
டிரைவ்டிரெய்ன் |
RWD |
RWD |
EV ஆனது 175 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இது பேட்டரியை 20 நிமிடங்களில் 20 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய உதவுகிறது. கூடுதலாக, மஹிந்திரா இரண்டு ஆப்ஷனலான ஹோம் சார்ஜிங் யூனிட்களை வழங்குகிறது, 7.3 kWh மற்றும் 11.2 kWh சார்ஜர். 3 டிரைவிங் மோடுகள் உள்ளன: ரேஞ்ச், எவ்ரிடே மற்றும் ரேஸ்.
போட்டியாளர்கள்
மஹிந்திரா XEV 9e -க்கு இப்போதைக்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் இது BYD அட்டோ 3 மட்டுமில்லாமல் வரவிருக்கும் டாடா ஹாரியர் EV மற்றும் டாடா சஃபாரி EV ஆகியவற்றுடன் போட்டியிடலாம். இவை இந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மஹிந்திரா XEV 9e காரின் வசதிகள் ஹூண்டாய் அயோனிக் 5 -க்கு இணையாக உள்ளன.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.