எந்த மறைவுமின்றி மஹிந்திரா TUV300 பார்வைக்கு சிக்கியது
published on ஆகஸ்ட் 28, 2015 06:33 pm by அபிஜித்
- 17 Views
- 3 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
மஹிந்திராவின் கச்சிதமான SUV-யான TUV 300 உள்ளூரிலேயே தயாரிக்கப்படுவதால், அதை மிக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர். இதனால் இன்னும் வெளியிடப்படாத இந்த கார், இதுவரை பல முறை உளவு படங்களில் சிக்கி உள்ளது. இந்த காரின் அறிமுக நாள் நெருங்கி வரும் நிலையில், தற்போது மீண்டும் உளவு படத்தில் சிக்கியுள்ளது. ஆனால் இந்த முறை எந்த மூடுதிரைகளும் இல்லாமல் காணப்பட்டது. ஒரு வேளை தயாரிப்பாளர் தரப்பில், ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் நகரின் ஒரு தனிமையான பகுதியில் விளம்பர படம் எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இந்த காரை குறித்து பார்க்கும் போது, பழைய பிகானிர் (வெளிப்படையாக) நகரின் வீதிகளில் நிறுத்தப்பட்ட நிலையில் சிக்கியது. இந்த படங்களின் மூலம் காரின் ஒரு கருப்பு மற்றும் ஒரு சிகப்பு என்ற இரு TUV தயாரிப்புகளை அறிய முடிகிறது. இவ்விரு வாகனங்களும், இந்த காரின் உயர்ந்த வகையை சேர்ந்தவைகளாக இருக்கும்பட்சத்தில் அவை மேல்தர சந்தையை அலங்கரிக்க உள்ளன. கருப்பு கார், பிரிமியம் க்ரோம் ஃப்ரென்ட் கிரில்களை கொண்டு காட்சி அளிக்கிறது. அதே நேரத்தில் சிவப்பு காரில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்புற டிசைனை பொறுத்த வரையில், A பில்லருக்கு நிறைவான தோற்றம் அளிக்கும் வகையில், ஒரு நுட்பமான ரேக்கை B மற்றும் C பில்லர்கள் தாங்கி உள்ளன. அதே நேரத்தில் பக்க பகுதியில் நேரான கேரக்டர் கோடுகளை கொண்ட தெளிவில்லாத மற்றும் சதுர வடிவிலான வீல் ஆர்ச்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தடித்த டையர்கள் கூட பார்க்க நன்றாக உள்ளன. அவற்றை சூழ்ந்த வண்ணம், ஸ்டைலான 5-ட்வின் ஸ்போக் அலாய் வீல்கள் காணப்படுகின்றன. பின்பகுதியில் பின்புற கதவின் மேற்பகுதியில் வைக்கப்பட்ட ஸ்பேர் வீல், அழகாக காட்சியளிக்கும் கவரால் மூடப்பட்டுள்ளது.
பார்வைக்கு நன்றாக காட்சியளிக்கும் இந்த கார், அறிமுகம் செய்யப்பட்ட பிறகே, அதை ஆராய்ந்து அறிய முடியும்.