சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மஹிந்திரா நிறுவனத்தின் டியுவி 300 செப்டெம்பர் 10ஆம் தேதி அறிமுகமாகிறது

அபிஜித் ஆல் ஆகஸ்ட் 14, 2015 08:25 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

ஜெய்பூர்: தன்னுடைய கச்சிதமான எஸ்யூவி பிரிவின் (காம்பேக்ட் எஸ்யூவி) முதல் தயாரிப்பான டியூவி 300 கார்களைப் பற்றிய நெடுநாள் மௌனத்தைக் கலைத்து டியூவி கார்கள் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி 2015 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கச்சிதமான பயன்பாட்டு வாகனம் மகாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் சக்கன் தொழிற்சாலையில் இருந்து அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த முற்றிலும் புதிய வாகனம் சென்னையில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேலி (MRV) கூடத்தில் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா மஹிந்திரா லிமிட்டடின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி (ஆட்டோமோடிவ்) திரு. பிரவின் ஷா கூறியதாவது:” டியூவி 300 இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்களில் ஒன்றாகும். இந்த வாகனம் 'மேக் இன் இந்தியா' திட்டதிற்கு ஒரு உண்மையான உதாரணமாக இது திகழும். இந்த வாகனத்தின் வடிவமைப்புக்கு ஒரு உத்வேகமாக (இன்ஸ்பிரேஷன்) இருந்தது ராணுவ டேன்க் தான். இந்த டியூவி 300 வாகனங்கள் சந்தையிலும் வாடிக்கையாளர் மத்தியிலும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இந்த கார் 1.5 லிட்டர் எம் ஹாக் 80 டீசல் மோட்டார் கொண்டு சக்தியூட்டப்பட உள்ளது. 80 என்ற இலக்கம் வெளியேற்றப்படும் சக்தியை குறிப்பதாக இருக்கலாம். வடிவமைப்பை பற்றி மஹிந்திரா கூறுகையில் நாம் ஏற்கனவே சொன்னது போல் ஒரு முழுதும் தயார் நிலையில் உள்ள ராணுவ டேன்க் ஒன்றை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. சதுரமான வடிவமைப்பு நமக்கு அதை உறுதி படுத்துகிறது. வடிவமைப்பை பற்றிய மற்ற விஷயங்களை சொல்வதென்றால் பெரிய ஜன்னல்கள்,, பந்தய கார்களை போன்ற தோற்றத்தை தருவதற்காக நீளம் குறைவான முன் மற்றும் பின்புறம் என்று மேலும் சில விஷயங்களை நாம் சொல்லலாம். மிகப் பிரபலமான வாகன வடிவமைப்பு நிறுவனமான பினின்பரினா இந்த வாகன வடிவமைப்பில் பெரிய பங்காற்றியுள்ளதால் நிச்சயமாக இந்த சார் மிடுக்கான த்ற்றதுடன் வெளிவரும் என்று உறுதியாக சொல்லலாம்.

இந்த டியூவி 300 கார்களின் அறிமுகத்தின் மூலம் மஹிந்திரா தன்னை ஒரு முழுமையான எஸ்யூவி வாகன தயாரிப்பாளராக உருவாக்கிக் கொள்ள நினைக்கிறது. இதன் மூலம் அத்தனை எஸ்யூவி பிரிவிலும் ஒவ்வொரு காரை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி விடும். டியூவி 300 கார்கள் ஈகோஸ்போர்ட், ரெனால்ட் டஸ்டர், எஸ் - கிராஸ் மற்றும் ஹயுண்டாய் க்ரேடா கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.

Share via

Write your Comment on Mahindra TUV 3OO

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை