மஹிந்த்ராவின் ஜூன் மாத கார் விற்பனை: சிறப்பு கண்ணோட்டம் (மொத்த விற்பனை 36,134)
published on ஜூலை 13, 2015 05:19 pm by akshit
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் கடந்த மாதம் விற்பனையில் ஒரு சிறு சரிவை கண்டது, அதாவது 2014 ஜூன் மாதத்தில் 38,466 ஆக இருந்த விற்பனை எண்ணிக்கை 2015 ஜூன் மாதத்தில் 36,134 ஆகக் குறைந்தது. இதில், இந்நிறுவனத்தின் உள்நாட்டு ஜூன் மாத விற்பனை 33,282 ஆக இருந்தது, இதுவே சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் 36,452 ஆக இருந்தது. ஆனால், இதன் ஏற்றுமதி 42 சதவீதம் வளர்ச்சி கண்டு 2,852 ஆக பதிவாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயணிகள் வாகனங்கள் பிரிவு விற்பனையை (18,635) ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் பயன்பாட்டு வாகனபிரிவில் உள்ள கார்கள் மற்றும் வேன்கள் ஜூன் மாதத்தில் 15,880 மட்டுமே விற்பனையாகியுள்ளன. ஆனால் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 45 சதவீத வளர்ச்சி கண்டு 404 ஆக பதிவாகி உள்ளது.
ஜூன் |
|||
F16 |
F15 |
மாற்ற விகிதம் |
|
பயணிகள் வாகனங்கள் |
15880 |
18635 |
-15% |
பயன்பாட்டு வாகனங்கள் |
14433 |
16492 |
-12% |
கார்கள் +வேன்கள் |
1447 |
2143 |
-32% |
வர்த்தக வாகனங்கள் |
12737 |
13273 |
-4% |
LCV<3.5T |
11507 |
12283 |
-6% |
LCV>3.5T |
826 |
711 |
16% |
MHCV |
404 |
279 |
45% |
3W |
4665 |
4544 |
3% |
உள்நாட்டு விற்பனை |
33282 |
36452 |
-9% |
ஏற்றுமதி விற்பனை |
2852 |
2014 |
42% |
மொத்த விற்பனை |
36134 |
38466 |
-6% |
கார் விற்பனை செயல்திறன் குறித்து பேசுகையில், பிரவீன் ஷா, தலைவர் & தலைமை நிர்வாகி (வாகன பிரிவு), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, “ இந்த பருவ காலத்தில் அளவுக்கு அதிகமான வாகனங்கள் புதிதாக அறிமுகபடுத்த பட்டுள்ளதால், வாகன துறையில் கணிசமான கிராக்கி ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்" என்றார். “எங்கள் சமீபத்திய அறிமுக வாகனங்களான எக்ஸ்.யு.வி. 500, ஜீட்டோ மற்றும் அனைத்து புதிய சிறிய ரக சரக்கு வாகனங்களும் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், எங்களின் ஏற்றுமதி மற்றும் கன ரக வாகனங்களின் கடந்த மாத விற்பனை வளர்ச்சிப் பாதையில் செல்வதால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம்," என்றார்.