மஹிந்த்ரா TUV 300 க்கு ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளார்கள்
மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா லிமிடெட் (MM) நிறுவனம் எப்போதும், தன்னை அனைவரும் கவனிக்க நேரும் போதும், பிரபலமாக இருக்கும்போதும், வெட்கப்பட்டு ஒளிந்து கொண்டதில்லை. அதே நேரத்தில், புரூஸ் வேய்ன் போல சிறு ஒப்புமைகளைக் கூட விடாமல் தெரிந்து கொண்டு, தனது வாகனங்களை மேம்படுத்தி நேர்த்தியாக்கி கொண்டுவிடும். அனைவரையும் கவர்ந்த அருமையாக சிறுத்தையை போல செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட மஹேந்திரா XUV 500-ஐ நாம் என்றுமே மறக்க முடியாது. அது போல, மீண்டும் அவர்கள் தங்களின் திறமையை உறுதி செய்துள்ளார்கள், அதாவது மஹிந்த்ரா குழுமம், புதிதாக பெயர் சூட்டப்பட்ட, அனைவரும் எதிர்பார்க்கும் மஹிந்த்ரா TUV 300 க்கு ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளார்கள்.
புதிதாக வெளியிடப்பட்ட அந்த இணைய தளத்தில், ஒரு அருமையான திரைக்காட்சியை இணைத்திருக்கிறார்கள். அத்திரைக்காட்சியில், மிகவும் உறுதியான ஒரு பொருள், ஒரு உலோகச் சுவற்றை இடித்துத் தள்ளுவது போல உள்ளது. இறுதியாக, அந்தச் சுவர் உடைந்து, கம்பீரமாக மஹிந்த்ராவின் TUV 300 இன் லோகோ சின்னத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் செப்டெம்பர் மாத மத்தியில் வெளிவரவுள்ளது. பேப்பர், பென்சில் கொண்டு வடிவத்தை உருவாக்கும் கலையை நன்கு அறிந்த இத்தாலியர்களின் மீது நாம் எப்போதும் நன்மதிப்பு கொண்டுள்ளோம். மஹேந்திரா நிறுவனத்தில் உள்ளே பணிபுரியும் வடிவமைப்பு குழுவினர் அதே முறையை பின்பற்றினார்கள், இத்தலியரான பிணிண்பரினாவுடனும் இதன் வடிவத்தை ஆலோசித்து கொண்டார்கள். இப்போது, TUV 300-இன் வடிவமைப்பு அசப்பில் ஒரு போர் டாங்கியை ஒத்துள்ளது. வளைந்த வடிவம் கொண்ட XUV 500 போல் அல்லாமல் நீண்ட மஹிந்த்ரா TUV 300, SUV வகையின் சிறப்புகளான நீண்ட தன்மையையும், உறுதியாக எதிர் கொள்ளும் நிலையையும், பின்புறம் பொருத்த கூடிய உபரி சக்கரத்தையும் கொண்டுள்ளது.
மஹேந்திரா ரிசர்ச் வேல்லி (mrv) நிலையத்தில் இதன் ஆராய்ச்சி மேற்கொள்ளபட்டது, மஹிந்த்ரா TUV 300 காரை அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவுள்ளது, இது ஒரு உலக தர மிக்க வாகனம் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம் TUV 300 கார் உலக தரத்திலான சிறப்பு பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை உறுதியாகிறது.
இந்த இணைய தளம் மேலும் ஒரு இணைப்பை கொண்டுள்ளது, நமது விபரங்களை கொடுத்த பிறகு அந்த இணைப்பில் சென்று மஹிந்த்ரா TUV 300 - இன் அறிமுக நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம். TUV 300 காரை முழு சக்தியூட்ட கூடிய எம்காவ்க் டீசல் இஞ்ஜினைப் பற்றிய சிறப்பு அம்சங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.