மாருதி ஆம்னிக்கு போட்டியாக மஹிந்த்ரா ‘சூப்ரோ வேனை’ ரூபாய். 4.38 லட்சத்திற்கு அறிமுகப்படுத்துகிறது
modified on அக்டோபர் 19, 2015 11:01 am by sumit
- 19 Views
- 17 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்த்ரா & மஹிந்த்ரா (M&M) நிறுவனம், சூப்ரோ வேன் என்ற பெயரில் ஒரு புதிய டீசல் MPV வாகனத்தை, ரூபாய். 4.38 லட்சம் (தானே எக்ஸ் ஷோரூம் விலை) என்ற விலைக்கு அறிமுகப்படுத்தியது. சூப்ரோ வேன் BSIII எமிஷன் தர நிலைகளைப் பின்பற்றும். பகுதியளவில் நகர அமைப்பில் (செமி-அர்பன்) வாழும் குடும்பங்களுக்காக இந்தப் புதிய வேன் தயாரிக்கப்பட்டுள்ளது.
909 cc செயல்திறன் மிக்க இதன் இஞ்ஜின், அதிகபட்ச திறனாக 45.6 bhp குதிரைத் திறனை வழங்குகிறது. இது, மக்களை ஏற்றிக் கொண்டு, பல இடங்களில் பயணம் செய்யத்தகுந்த வாகனம். இந்த வேனை, 5 இருக்கை அமைப்பு அல்லது 8 இருக்கை அமைப்பு என்று இரண்டு விதமாக, வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்றபடி, மாற்றிக் கொள்ளலாம்.
இந்த வேன், புதிய சூப்ரோ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. வாகன சந்தையில் தற்போது கோலோச்சிக் கொண்டிருக்கும் மாருதி ஆம்னி மற்றும் Eஈகோ போன்ற மாடல்களுடன் போட்டியிடும் விதத்தில், இந்த வேன் தயாரிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கவனத்திற்கு: மஹிந்த்ரா வரலாற்றில் பலீனோவின் பங்கு.
சூப்ரோ வேன், VX டிரிம், LX டிரிம் மற்றும் ZX டிரிம் ஆகிய மூன்று விதமான மாடல்களில் வருகிறது. ZX மாடலில் விசை திருப்பி (பவர் ஸ்டியரிங்) மற்றும் குளிர் சாதன அமைப்பு பொருத்தப்பட்டு, உயர்ரக மாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது. LX மாடலில் விசை திருப்பி மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. அடிப்படை மாடலான VX வேரியண்ட்டில், இந்த இரண்டு வித அம்ஸங்களும் அமைக்கப்படவில்லை. எனினும், அனைத்து மாடல்களிலும், 5 வேக கையியக்கி பல்லிணைப்பு பெட்டி (கியர் பாக்ஸ்) பொருத்தப்பட்டுள்ளது.
M&M நிறுவனம், சூப்பரோ வேன் தவிர மற்றுமொரு வாகனத்தை ரூபாய். 4.25 லட்சம் என்று தானே எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு அறிமுகப்படுத்துகிறது. இதன் பெயர் சூப்ரோ மாக்ஸி டிரக். இந்த வணிக வாகனத்தில், ஒரு டன் வரை சுமை ஏற்றிக்கொள்ளலாம். சூப்ரோ மாக்ஸி டிரக்கும் BS – III எமிஷன் தரநிலையை பின்பற்றும். இரண்டு வாகனங்களும், புனேவிற்கு அருகே உள்ள சக்கன் ஆலையில் தயாரிக்கப்படும். இவை மூன்று விதமான வண்ணங்களில் வருகின்றன.
தொடர்புடைய செய்தி:
- மஹிந்த்ரா TUV 300 ரூபாய். 6.90 லட்சத்திற்கு அறிமுகம்
- புதுபொலிவேற்றப்பட்ட டொயோட்டா எடியோஸ் லிவா அறிமுகம்
மேலும் வாசிக்க: மாருதி ஆம்னி
0 out of 0 found this helpful