2016 ஜனவரி 6-ல் மஹிந்திரா இம்பிரியோ பிக்அப் அறிமுகம்
published on ஜனவரி 06, 2016 10:00 am by nabeel
- 21 Views
- ஒரு கருத் தை எழுதுக
இந்த ஜனவரி மாதத்தில் எல்லோருக்கும் அளிக்க விற்பனைக் கூடத்தில், மஹிந்திரா நிறுவனம் ஏதோ ஒன்றை வைத்திருப்பது போல தெரிகிறது. KUV100-யை தவிர, சிறிய வகை கமர்ஷியல் வாகன பிரிவின் ஒரு சேர்ப்பான இம்பிரியோ பிக்அப், ஹேட்ச்பேக் பிரிவில் நுழையும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வாகன தயாரிப்பாளரின் மூலம் இந்த நவீன பிக்அப், 2016 ஜனவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போதைக்கு எடைக்குறைந்த கமர்ஷியல் வாகனங்களின் பிரிவில் உள்ள 50%-க்கும் அதிகமான பங்கை கொண்டுள்ள மஹிந்திரா நிறுவனம், இப்பிரிவில் ஏற்கனவே ஜீனியோவை வைத்துள்ளது. ஜீனியோவின் எதிர்காலத்தை குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படாத நிலையில், இவ்விரு வாகனங்களையும் மஹிந்திரா நிறுவனம் ஒருங்கே விற்கலாம் என்ற வதந்திகள் பரவியுள்ளது. இந்தியாவில் டாடா ஸீனன் மற்றும் இசுசு D-மேக்ஸ் ஆகியவற்றுடன் இம்பிரியோ போட்டியிட உள்ளது.
சென்னை தொழிலகத்தில் இவ்வாகன தயாரிப்பாளரின் மூலம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செயல்பாடுகளின் பயனாக கிடைத்த இந்த வாகனம், புனே அருகில் உள்ள மஹிந்திராவின் சாகன் தொழிலகத்தில் தயாரிக்கப்படுகிறது. ஜீனியோவின் பிளாட்பாமை இம்பிரியோ பகிர்ந்து கொண்டாலும், வெளிப்புற வடிவமைப்பில் ஒரு அதிக ஆக்கிரமிப்பு தோற்றத்தை கொண்டுள்ளது. மேலும் இந்த பிக்அப்பின் பயணம் மற்றும் செயல்திறனும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீனியோவை இயக்கும் அதே 2.5-லிட்டர் என்ஜினே இம்பிரியோவிற்கும் ஆற்றல் அளிக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், இந்த பிக்அப்பில் ஏறக்குறைய 74bhp ஆற்றலும், 220Nm முடுக்குவிசையும் பெற முடியும்.
அடுத்து வரவுள்ள பிக்அப்பின் முதல்படம் (டீஸர்) கூட வெளியாகிவிட்டது. இதில் இவ்வாகனத்தின் எளிய லோடிங், செயல்திறன் உடன் கூடிய ஏர் கண்டிஷனிங் போன்ற இதமான அனுபவத்தையும், புதிய ஸ்டைலையும் பெற முடியும் என்பதை காட்டுகிறது. மேலும் இதன் அறிமுகத்திற்கான கவுண்டவுனை எண்ணும் வகையிலான ஒரு வெப்சைட்டை, மஹிந்திரா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் அறிமுகம் குறித்து பேசிய M&M லிமிடேட்டின் தலைவர் மற்றும் மூத்த நிர்வாகி (ஆட்டோமோட்டிவ்) பிரவின் ஷா கூறுகையில், “சிறிய வகை கமர்ஷியல் வாகனப் பிரிவில் நாங்கள் சந்தையின் முன்னணியில் இருக்கும் நிலையில், இம்பிரியோவின் சேர்ப்பின் மூலம் கமர்ஷியல் வாகன பகுதியில் எங்களின் முன்னணி தன்மை இன்னும் வலுவானதாக மாறும் என்பதில் உறுதியாக உள்ளேன்” என்றார்.
மேலும் வாசிக்க