UV கார்களின் விற்பனையில் மஹிந்த்ராவின ் போலேரோ தொடர்ந்து ஆதிக்கம்
மஹிந்திரா போலிரோ 2011-2019 க்காக நவ 30, 2015 09:42 am அன்று sumit ஆல் திருத்தம் செய்யப்பட்டது
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்திலிருந்து (SIAM) வெளியிடப்பட்டுள்ள, இந்தியாவில் 2015 -ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அதிகமாக விற்பனையான பயன்பாட்டு வாகனங்களின் புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலில், மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனத்தின் போலேரோ வாகனமே முதல் இடத்தை பிடித்துள்ளது. ஸ்கார்பியோ வாகனத்தின் விற்பனை 7% என்ற அளவில் குறைந்து பட்டியல் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு வந்திருந்தாலும், ஆட்டோமாட்டிக் வகை மாடலின் அறிமுகத்தால் புத்துயிர் பெற்றுள்ள இந்த நிறுவனம், மீண்டும் இந்த காரின் விற்பனையை உயர்த்தி சந்தையில் தனக்குரிய இடத்தை நிச்சயமாக பெறமுடியும் என எதிர்ப்பார்க்கிறது. போலேரோ, மஹிந்த்ராவின் சக்தி வாய்ந்த ஆயுதமாக இருந்து, இந்நிறுவனத்தைத் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துகிக்கொள்ள உதவி செய்கின்றது. முதலிடத்தை பெற்றிருந்த போதிலும், போலேரோவின் விற்பனை 15% என்ற அளவில் குறைந்து உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தை மற்றும் சர்வதேச சந்தை இரண்டிலும் பிரம்மிக்கதக்க டிமாண்ட்டை பெற்றுள்ள, பட்டியல் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள கிரேட்டா கார் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தென் கொரிய கார், இதற்கு முன் மூன்று மாதங்களாக போலேரோவிற்கு பதிலாக நம்பர் 1 இடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 2015 –இல் அதிகமாக விற்பனையான முதல் 10 பயன்பாட்டு வாகனங்கள்:
அக் – 14 |
மாடல் |
வரிசைநிலை |
மாடல் |
அக் – 15 |
சதவிகித மாற்றம் |
9090 |
போலேரோ |
1 |
போலேரோ |
7754 |
-15% |
5147 |
இன்னோவா |
2 |
கிரேட்டா |
7225 |
NA |
5095 |
ஸ்கார்பியோ |
3 |
எர்டிகா |
5832 |
16% |
5025 |
எர்டிகா |
4 |
இன்னொவா |
5724 |
11% |
4528 |
எக்கோஸ்போர்ட் |
5 |
ஸ்கார்பியோ |
4719 |
-7% |
3417 |
டஸ்டர் |
6 |
TUV 300 |
4551 |
NA |
3100 |
XUV 500 |
7 |
XUV 500 |
3964 |
28% |
2985 |
மொபிலியோ |
8 |
எக்கோ ஸ்போர்ட் |
3417 |
-25% |
1528 |
டெர்ரனோ |
9 |
S க்ராஸ் |
3017 |
NA |
1070 |
டவேரா |
10 |
டஸ்டர் |
1727 |
-49% |
தகவல்: SIAM
எக்கோ ஸ்போர்ட் 16,500 கார்களை திரும்ப பெற்றதால் ஏற்பட்ட பின்னடைவால் பாதிக்கப்பட்டு, இந்த அக்டோபர் மாதத்தில் 5 ஆவது இடத்தில் இருந்து 8 ஆவது இடத்திற்கு கீழே சென்றது. இந்த அக்டோபர் மாதத்தின் பட்டியலில், முதல் 5 இடங்களுக்குள் S க்ராஸ் மற்றும் XUV 500 ஆகிய வாகனங்களை காண முடியவில்லை என்றாலும், மாருதி சுசூகி நிறுவனத்தின் S க்ராஸ் மற்றும் XUV 500 ஆகிய வாகனங்களுக்கு கடுமையான தள்ளுபடிகளை வழங்கி கொண்டிருப்பதாலும், தற்போது ஆட்டோமாட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு விற்பனை செய்வதாலும், சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு சவாலாக இந்த கார்கள் செயல்பட்டு, தங்களது இடத்தை மீண்டும் உறுதியாக தக்க வைத்து கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
டொயொட்டோவின் இன்னோவா 11% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்திருந்த போதிலும், இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மறுபுறம், எர்டிகா கார், அதிக விற்பனை மற்றும் சிறந்த விற்பனையில் உள்ள பயன்பாட்டு வாகனங்களில் வரிசையில் முன்னணியில் இருந்து சிறப்பான ஏற்றம் கண்டுள்ளது. மாருதி சுசூகியின் எர்டிகா 16% என்ற அளவில் அதிக விற்பனையாகி, இந்த மாதத்தில் 3 -ஆவது இடத்தை பிடித்துள்ளது.