ஃபிராங்க்பர்ட்டில் இருந்து நேரடி தகவல்: இந்தியாவில் விரைவில் வெளிவர இருக்கும் பலேனோ என்ற YRA காரை சுசூக்கி அறிமுகப்படுத்தியது
published on செப் 16, 2015 02:41 pm by raunak for மாருதி வைஆர்ஏ
- 17 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
எலைட் i20 காரின் புகழை வீழ்த்திவிடக் கூடிய இந்த மிகச் சிறந்த செயல்திறனுடைய கார், இந்தியாவிற்கு வரும் போது, பெயர் மாற்றப்பட்டு புதிய பெயருடன் வரும். ஏற்கனவே, இதன் உற்பத்தி மானேசர் ஆலையில் தொடங்கிவிட்டதனால், அடுத்த மாதம் சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்தேறிக் கொண்டிருக்கும் 2015 ஃபிராங்க்பார்ட் மோட்டார் ஷோவில், சுசூக்கி நிறுவனம், தனது பலேனோ என்ற YRA காரை அறிமுகப்படுத்தியது. உலகின் மற்றைய பகுதிகளுக்கு இதன் பெயர் பலேனோவாக இருக்கும், ஆனால் இந்தியாவில் இதற்கு வேறு பெயர் சூட்டப்படும், ஏனெனில், மாருதி சுசூக்கி நிறுவனம் இந்தியாவில் பிரபலமாகாத ஒரு பெயரை உபயோகப்படுத்த விரும்பவில்லை. இதற்கு முன், S க்ராஸ் காரில் SX4 –ஐ நீக்கிவிட்டதைப் போல, பலேனோவின் பெயரும் மாற்றப்படும். YRA காரின் பரம போட்டியாளராக ஹுண்டாயின் எலைட் i20 இருக்கும். முதல் போட்டியாளராக ஹுண்டாய் நிறுவனம் நின்றிருந்தாலும், VW –வின் போலோ, ஃபியட்டின் புண்டோ EVO மற்றும் ஹோண்டாவின் ஜாஸ் போன்ற கார்களுக்கும் YRA சிம்ம சொப்பனமாக இருக்கும்.
இந்த புதிய சிறிய வகை காரின் அளவுகளில் இருந்து ஆரம்பிக்கலாம். பலேனோ கார் 3995 மிமீ நீளமாக, 1745 மிமீ அகலமாக மற்றும் 1470 மிமீ உயரமாகவும் உள்ளது. இதன் பூட் பகுதியில் உள்ள இடத்தைப் பற்றி பேசும் போது, தற்போது சிறிய ஹச்பேக் கார் ரகத்திலேயே மிகவும் பெரிதான 354 லிட்டர் பூட் கொள்ளளவு கொண்ட ஹோண்டா ஜாஸ் காரைப் பற்றி குறிப்பிட வேண்டும். ஏனெனில், புதிய பலேனோ அதை விட அதிகமாக 355 லிட்டர் பூட் கொள்ளளவைக் கொண்டிருப்பதால், வெற்றிகரமாக தன் மீசையை முறுக்கி விட்டுக் கொள்கிறது.
இஞ்ஜின் வகை மற்றும் செயல்திறனைப் பார்க்கும் போது, உலகம் முழுவதும் பலேனோ கார் சுசூக்கியின் தனிச்சிறப்பான, K12B 1.2 லிட்டர் மோட்டாரின் இரட்டை ஜெட் வகை இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும். இதன் மூலம், அதிகப்படியாக 89 bhp குதிரை திறன் மற்றும் 120 Nm உந்து விசையையும் உற்பத்தி செய்ய முடியும். மேலும் இதில், 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்ட் பூஸ்டர் ஜெட் மோட்டார் ஒரு சிறப்பம்ஸமாகும். இது, 2000 – 3500 rpm திருப்பங்களின் நடுவே, அதிகபட்சமாக 110 bhp குதிரை திறன் மற்றும் 170 Nm உந்து விசையை உற்பத்தி செய்கிறது.
அனைத்து இஞ்ஜின்களும், எப்போதும் உள்ள 5 வேக ஆளியக்க அமைப்புடன் இணைக்கப்படுகின்றன. இந்தியாவில், இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS 200 டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும். இது தவிர, மாருதி நிறுவனம் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ பெட்ரோல் இஞ்ஜினும் கூடுதலாக வழங்கும் என்று தெரிகிறது. மேலும், சியாஸ் காரைப் போலவே, சுசூக்கியின் தனிச் சிறப்பான SHVS என்ற கலப்பின வாகன தொழில்நுட்பமும், இந்த காரிலும் பொருத்தப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பலேனோவைப் பார்க்கும் போது, இது மிகவும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டதை உணர முடிகிறது. இதன் முன்புற வடிவம் ஸ்விஃப்ட் காரை நினைவூட்டுகிறது. இதன் பின்புறத்தில், விளிம்புகளில் வளைந்து வரும் பின்புற விளக்குகளும், சாய்வான மேற்கூரையும் மனதை கொள்ளை கொள்கின்றன. மேலும், காலையிலும் பளபளப்பாக எரியும் LED பொருத்தப்பட்ட முன்புற மற்றும் பின்புற விளக்குகளையும் எடுத்துரைக்க வேண்டும். இதன் உட்புறமானது, பொருத்தமில்லாத அமைப்புகளோடு இல்லாமல், முழுமையான கருப்பு வண்ணத்தில், ஆங்காங்கே வெள்ளி வண்ணத்திலும், கிரோமியத்திலும் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு எளிமையான மற்றும் கண்ணியமான தோற்றத்தில் வருகிறது. S க்ராஸ் மற்றும் சியாஸ் கார்களில் உள்ளதைப் போலவே, இதிலும் அதே 7 அங்குல ஸ்மார்ட் பிளே இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
0 out of 0 found this helpful