இணையத்தை கலக்கும் Tata Sierra EV -யின் புதிய புகைப்படங்கள்
published on நவ 28, 2024 12:11 am by rohit for டாடா சீர்ரா ev
- 131 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா சியாரா EV -யைபொது இடங்களில் சில முறை பார்த்திருந்தாலும் கூட இன்னும் ஒரு கேள்வி எழுந்த வண்ணமே உள்ளது. இது இறுதி வரை கான்செப்ட் வடிவத்தில் மட்டுமே இருக்குமா ?.
-
சியரா கார் ஆனது ICE மற்றும் EV பதிப்புகள் இரண்டிலும் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
-
ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தின், ஆக்ஸ்போர்ட் ஹையர் ( Oxfordshire) நடைபெற்ற கார் நிகழ்வில் இருந்து இந்த லேட்டஸ்ட் படங்கள் கிடைத்துள்ளன.
-
சியராவின் இரண்டு பதிப்புகளும் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் வரும் என்று டாடா சமீபத்தில் அறிவித்தது.
-
நிறைய பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 550 கி.மீ தூரம் வரை இது செல்லக்கூடியதாக இருக்கும்.
-
விலை ரூ.25 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா சியரா EV காரில் நீங்கள் ஆர்வம் கொண்டவராக இருந்தால் ஆன்லைனின் தயாரிப்புக்கு தயாராக உள்ள மாதிரியின் படங்களுடன் சில அறிக்கைகளை நீங்கள் கண்டிருக்கலாம். படத்தில் காணப்படும் எஸ்யூவி ஆனது டாடா சியரா EV என்றாலும் கூட இது சரியாக உற்பத்திக்கு தயாராக உள்ள பதிப்பு அல்ல என்பதையும் அதற்கான சரியான காரணத்தை நாங்கள் மேற்கோள் காட்டியுள்ளோம்.
உற்பத்திக்கு தயாராக உள்ள சியரா EV -வாக இருக்க வாய்ப்பு இல்லை
இது சியாராவின் தயாரிப்புக்கு தயாராக உள்ள பதிப்பு அல்ல என்று நாங்கள் கூறுவதற்கு முக்கியக் காரணம் உள்ளது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு டிசைன் டாடா மோட்டார்ஸின் VP தலைவர் மார்ட்டின் உல்ஹாரிக் பகிர்ந்த படத்தில் இருந்த அதே கான்செப்ட் கார்தான் இது. இங்கிலாந்தில், ஆக்ஸ்போர்ட் ஹையர் (Oxfordshire) -ல் நடைபெற்ற பிஸ்டன்ஸ் & பிரெட்ஸெல்ஸ் நிகழ்வின் ஒரு பகுதியாக இது டாடா நெக்ஸான் EV மற்றும் புதிய டாடா சஃபாரி உடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
எப்போது இதை பார்க்க முடியும்?
சியரா EV மற்றும் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) இரண்டும் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என்றும் EV முதலில் வரும் என்று டாடா சமீபத்தில் நடைபெற்ற தனது முதலீட்டாளர் கூட்டத்தில் உறுதி செய்தது. எனவே 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், ஒருவேளை பண்டிகைக் காலத்தில் கார் தயாரிப்பாளர் EV-யைக் காட்சிப்படுத்தலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
டாடா சியாரா EV: ஒரு விரைவான பார்வை
டாடா சியாரா EV ஆனது ஆட்டோ எக்ஸ்போ 2020 -ல் தனது முதல் பொதுத் தோற்றத்தைக் கொடுத்தது. மேலும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. சியரா EV -யின் வடிவமைப்பு 1990 -களில் விற்கப்பட்ட சியரா எஸ்யூவி -யிலிருந்து கொஞ்சம் விஷயங்களை பெற்றிருந்தாலும் கூட அதன் புதிய வடிவமைப்பை டாடா இங்கே இணைத்துள்ளது. அதன் தற்போதைய வரிசையில் மற்ற எஸ்யூவிகளுடன் அதைக் கொண்டுவருவதற்கான முயற்சியாக அதை பார்க்கலாம்.
முன்புறத்தில் கனெக்டட் LED DRL ஸ்ட்ரிப், அசல் சியராவில் காணப்படும் பெரிய ஆல்பைன் ஜன்னல்கள், ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் ஆகியவை உள்ளன.
கான்செப்ட் மாடல் அதன் கேபினில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்த அதிக விவரங்களை வெளியிடவில்லை என்றாலும் கூட சஃபாரி மற்றும் புதிய ஹாரியரின் மினிமலிஸ்ட் கேபினுடன் இது ஒற்றுமையைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தனித்துவமான விவரங்களில் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் மையத்தில் ஒளிரும் ‘டாடா’ லோகோவுடன் 4-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவை அடங்கும். சியரா EV இல் 4- மற்றும் 5-இருக்கை உள்ளமைவுகளை வழங்குவதே முக்கிய வேறுபாடு ஆகும். ஹாரியர் ஆனது 5 இருக்கைகள் கொண்ட எஸ்யூவியாக மட்டுமே கிடைக்கும். கேபின் தீம் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரிக்கான வண்ணங்களின் தேர்வு அடிப்படையில் சியரா EV மற்றும் ICE ஆகியவற்றை டாடா தனித்தனியாக கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: Tata Harrier EV மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரவுள்ளது
நிறைய வசதிகள் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
டாடாவின் சமீபத்திய EV -கள் நிறைய வசதிகள் நிறைந்ததாக இருக்கிறன என்பதை கருத்தில் கொண்டு பார்க்கையில் சியரா EV தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த கேபினை இது கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்க்கு மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட்க்கு ), வென்டிலேட்டட் சீட்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் ஆகியவை அடங்கும்.
இதன் பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவையும் உள்ளன.
இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறலாம்
டாடா சியரா EVக்கு 45 kWh மற்றும் 55 kWh பேட்டரி பேக்குகளை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 550 கி.மீ வரை கிளைம் செய்யப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் இன்னும் பெரிய பேட்டரி பேக்குடன் வழங்கலாம். சியரா EV ஆனது சிங்கிள் எலக்டரிக் மோட்டார் ஆப்ஷனை பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும் பவர் அவுட்புட்டில் மாற்றங்களுடன் வெவ்வேறு பேட்டரி பேக்குகள் கொடுக்கப்படலாம்.
டாடா சியாரா EV காரின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா சியாரா EV -யின் ஆரம்ப விலை சுமார் ரூ.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு வரவிருக்கும் டாடா EV -க்கு நேரடி போட்டியிடும் வகையில் எந்த கார்களும் இல்லை. ஆனால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா BE 6e மற்றும் மஹிந்திரா XEV 9e கார்களுக்கு மாற்றாக இது இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.