• English
  • Login / Register

அறிமுகமானது Land Rover Defender Octa கார், விலை ரூ.2.65 கோடியில் தொடங்குகிறது

published on ஜூலை 04, 2024 08:03 pm by dipan for லேண்டு ரோவர் டிபென்டர்

  • 35 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஆக்டா கார் ஆனது 635 PS அவுட்புட் உடன் இது வரை வெளியானதிலேயே மிகவும் சக்திவாய்ந்த புரடெக்ஷன்-ஸ்பெக் டிஃபென்டர் மாடலாகும்

  • புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டா டிஃபென்டர் வரிசையில் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யாக வெளியிடப்பட்டது.

  • மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் கூடிய 4.4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜினுடன் மிகவும் சக்திவாய்ந்த டிஃபென்டர் ஆக மாறியுள்ளது.

  • ஒரு ஸ்பெஷல் எடிஷனும் கிடைக்கும். இது அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடத்திற்கு பின்னர் விற்பனை செய்யப்படும்.

  • டிஃபென்டர் 110 அடிப்படையிலானது. ஆனால் அதிக டைனமிக் மற்றும் ஆஃப்-ரோடு திறனுக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  • இது ஒரு புதிய சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் ஒரு புதிய பெர்ஃபாமன்ஸ் ஆஃப்-ரோடு ஃபோகஸ்டு டிரைவிங் மோடையும் பெறுகிறது.

  • ஜூலை இரண்டாவது வாரத்தில் முன்பதிவு தொடங்கும். விலை சுமார் ரூ.2.65 கோடியில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும்.

லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டா மிகவும் பவர்ஃபுல்லான புரடெக்ஷன்-ஸ்பெக் டிஃபென்டர் ஆகும். அதன் உலகளாவிய பிரீமியரை உருவாக்கியுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட அளவுகள், கூடுதலான ஆஃப்-ரோடுக்கென மையப்படுத்தப்பட்ட எக்ஸ்ட்டீயர் எலமென்ட்கள் மற்றும் ஹார்ட்வேர் ஆகியவற்றில் முழுமையான மாற்றங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் டிஃபென்டர் ஆக்டாவின் இன்டிகேட்டிவ் விலை விவரங்கள் இங்கே:

மாடல்

லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டா

லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டா பதிப்பு ஒன்

விலை

ரூ.2.65 கோடி

ரூ.2.85 கோடி

விலை, எக்ஸ்-ஷோரூம்

இந்த ஃபிளாக்ஷிப் டிஃபென்டர் மாடலின் சிறப்புகள் இங்கே:

அதிக சக்தி வாய்ந்த இன்ஜின்

லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஏற்கனவே சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட V8 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளது. ஆனால் புதிய டிஃபென்டர் ஆக்டா ஒரு ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜினை மைல்டு-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் வருகிறது. இரண்டின் விரிவான விவரங்கள் இங்கே:

இன்ஜின் விவரங்கள்

லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டா

லேண்ட் ரோவர் டிஃபென்டர் V8

இன்ஜின்

மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 4.4 லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜின்

5-லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட V8 பெட்ரோல் இன்ஜின்

பவர்

635 PS

525 PS

டார்க்

750 Nm*

625 Nm

டிரான்ஸ்மிஷன்

8-ஸ்பீடு AT

8-ஸ்பீடு AT

டிரைவ்டிரெய்ன்

4WD

4WD

மணிக்கு 0-100 கி.மீ

4 வினாடிகள்

5.1 வினாடிகள்

* லாஞ்ச் கன்ட்ரோல் உடன் இதன் டார்க் அவுட்புட் 800 Nm ஆக அதிகரிக்கிறது.

கூடுதல் முரட்டுத்தனமான வெளிப்புறங்கள்

Land Rover Defender Octa front three-fourth

வெளிப்புற எலமென்ட்கள் அதே டிஃபென்டர்-எஸ்க்யூ சில்ஹவுட்டை கொண்டிருந்தாலும், திருத்தப்பட்ட பரிமாணங்களைக் கொண்டுள்ளன. லேண்ட் ரோவர் அதன் உயரத்தை 28 மி.மீ அதிகரித்துள்ளது, பாதை 68 மி.மீ விரிவடைந்துள்ளது மற்றும் பெரிய 33 இன்ச் விட்டம் கொண்ட வீல்களுக்கு இடமளிக்கும் வகையில் வீல் ஆர்ச்களும் நீட்டிக்கப்பட்டுள்ளன. பம்பர்கள் அணுகுமுறை மற்றும் புறப்படும் கோணத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பிரேக்-ஓவர் கோணம் அப்படியே உள்ளது. ஆல் LED ஹெட்லைட்ஸ், டெயில் லைட்ஸ் மற்றும் ஒரு அலுமினிய அலாய் அண்டர்பாடி பாதுகாப்பு கவசம் ஆகியவை மற்ற டிஃபென்டர்களை போலவே இருக்கும். ஆனால் சிறந்த வென்டிலேஷனுக்கான கிரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் ஒரு ஸ்போர்ட்டி க்வாட்-எக்சிட் எக்ஸாஸ்ட் செட்டப்பை பெறுவீர்கள்.

Land Rover Defender Octa rear

டிஃபென்டர் ஆக்டா நான்கு பெயிண்ட் ஸ்கீம்களை பெறுகிறது. இதில் இரண்டு பிரத்யேக புதிய பிரீமியம் மெட்டாலிக் ஃபினிஷ்கள் உள்ளன: பெட்ரா காப்பர் மற்றும் ஃபாரோ கிரீன், கார்பாத்தியன் கிரே மற்றும் சாரெண்டே கிரே. ஃபரோ கிரீன் கலர் ஸ்கீம் லிமிடெட் டிஃபென்டர் ஆக்டா எடிஷன் ஒன் மாடலுக்கான பிரத்தியேகமானது, இது அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்கு மட்டுமே கிடைக்கும். அனைத்து ஆக்டா மாடல்களும் கான்ட்ராஸ்ட் ரூஃப் மற்றும் டெயில்கேட் இன் கிளாஸி நார்விக் பிளாக் நிறத்தில் உள்ளன.

ஆக்டா வேரியன்ட்களுக்கென பிரத்தியேகமான மற்றொரு நுட்பமான டச் உள்ளது - சுற்றியிருக்கும் டைமன்ட் கிராஃபிக், பின்புற ஜன்னலுக்குப் பின்னால் உள்ள பேனலில் டைட்டானியம் பிளேட்டுக்குள் பிளாக் டைமன்ட் இருப்பதை காட்டுகிறது.

ஆஃப்-ரோடை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஹார்டுவேர் மற்றும் தொழில்நுட்பம்

ஹார்டுவேர் முன்பக்கத்தில், இந்த ஃபிளாக்ஷிப் டிஃபென்டர் ஒரு ஹைட்ராலிக் இன்டர்லிங்க்ட் 6டி டைனமிக்ஸ் சஸ்பென்ஷன் தொழில்நுட்பத்தைப் பெறுகிறது, இது ஒரு செயலற்ற சஸ்பென்ஷன் தொழில்நுட்பமாகும், இது தனிப்பட்ட சக்கரங்களின் தேவைக்கேற்ப தாக்கத்தை குறைக்கிறது, இதனால் கரடுமுரடான மற்றும் நடைபாதை சாலைகளில் எஸ்யூவி சவாரி சீராக இருக்கும். கூடுதல் ஸ்டிஃப் -க்கான சேசிஸ் திருத்தப்பட்டுள்ளது என்றும் லேண்ட் ரோவர் கூறுகிறது. 

டிஃபென்டர் ஆக்டா மூன்று டிரைவிங் மோடுகளை பெறுகிறது - கம்ஃபோர்ட் மோட், ரோடு-ஃபோகஸ்டு டைனமிக் மோட் மற்றும் பெர்ஃபாமன்ஸ் சார்ந்த ஆஃப்-ரோடிங்கை செயல்படுத்தும் புதிய ‘ஆக்டா’ மோடு. ஆக்டா மோடு ஆனது தளர்வான பரப்புகளில் அதிகபட்ச ஆக்ஸலரேஷனுக்கான ஆஃப்-ரோடு லாஞ்ச் மோடையும் செயல்படுத்துகிறது. குறைந்த டிராக்‌ஷன் கன்ட்ரோல் செட்டப்களுடன் இணைந்தால், தளர்வான பரப்புகளில் சிறப்பான பிரேக்கிங் செயல்திறனுக்கான தனித்துவமான ஆஃப்-ரோடு ABS கேலிப்ரேஷனையும் இது செயல்படுத்துகிறது. 

தனித்தனி டெர்ரெயின் மோடுகளும் உள்ளன - சேண்ட், மட் மற்றும் ரட்ஸ், புல் கிராவல் ஸ்னோ மற்றும் ராக் கிரால்.

வழக்கமான இன்ட்டீரியர்

டிஃபென்டர் ஆக்டாவின் உட்புறங்கள் டூயல்-டோன் தீம் மற்றும் பர்ன்ட் சியன்னா மற்றும் எபோனி அல்லது லைட் கிளவுட் மற்றும் லூனார் ஆகியவற்றுக்கு இடையே ஒரு ஆப்ஷனை பெறுகின்றன. ஆக்டா எடிஷன் ஒன் காக்கி மற்றும் எபோனி ஆகிய இரண்டு கலர்களில்  மட்டுமே இன்ட்டீரியரை கொண்டுள்ளது. முன் இருக்கைகள் இப்போது மேம்படுத்தப்பட்ட போல்ஸ்டர் சப்போர்ட் மற்றும் ஒருங்கிணைந்த ஹெட்ரெஸ்ட்களை பெறுகின்றன. டாஷ்போர்டு மற்றும் கன்ட்ரோல் அமைப்பு, முன்புறத்தில் பெரிய சென்ட்ரல் கன்சோலுடன் வழக்கமான டிஃபென்டரை போலவே இருக்கும்.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

டிஃபென்டர் ஆக்டா வேரியன்ட்களுக்கான முழுமையான வசதிகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், மற்ற டாப்-ஸ்பெக் டிஃபென்டர்களை போலவே இதிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது 11.4-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருடன் நேவிகேஷன் ஆகியவற்றைப் பெறும். மற்ற டிஃபென்டர் மாடல்கள் 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் செட்டப்பை பெற்றாலும், ஆக்டா இன்னும் பல ஸ்பீக்கர்களுடன் அதிக பிரீமியமான சிஸ்டத்தை பெறலாம். ஏனெனில் இது பாடி மற்றும் சோல் சீட் ஆடியோ டெக்னாலஜியை கொண்டுள்ளது.

Land Rover Defender Octa Interior

பாதுகாப்பைப் பொறுத்தவரை மல்டி ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் பிரேக்கிங் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெற வாய்ப்புள்ளது. டிஃபென்டர் ஆக்டா சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -கள் பொருத்தப்பட்டிருக்கும். 

விலை மற்றும் முன்பதிவு

லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டாவின் விலை ரூ.2.65 கோடியிலிருந்து தொடங்கும் என தெரிகிறது. ஆக்டா எடிஷன் ஒன் விலை ரூ.2.85 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. லேண்ட் ரோவர் நிறுவனம் இந்த எஸ்யூவி -யானது ஜூலை மாதம் நடைபெறவுள்ள குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடில் அறிமுகமாகும் என்றும் அதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆட்டோமோட்டிவ் உலகில் நடப்பவை பற்றி உடனடி அறிவிப்புகள் வேண்டுமா? கார்தேக்கோ வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்

மேலும் படிக்க: டிஃபென்டர் ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது Land Rover டிபென்டர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience