• English
  • Login / Register

கியாவின் சோனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகியவை விரைவில் புதுமையான அம்சங்களைப் பெற உள்ளன

published on மார்ச் 13, 2023 08:25 pm by rohit for க்யா சோனெட் 2020-2024

  • 26 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பாதுகாப்புப் பிரிவின் கீழ் பெரும்பான்மையான அப்டேட்கள் வருகின்றன, மிக மிக முக்கியமான அறிமுக அம்சம் பின்புறத்தில் நடுவில் அமர்ந்திருக்கும் பயணிக்கான த்ரீ-பாயின்ட் சீட் பெல்ட் ஆகும்.

Kia Carens, Seltos and Sonet

 

  • கேரன்ஸ்-ஐ தொடர்ந்து இரு SUV-களில் மட்டுமே முதன்முதலாக பின்புற நடுப் பயணிக்கான த்ரீ-பாயின்ட் சீட் பெல்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • அனைத்து கார்வகைகளிலும் ISOFIX மற்றும் ESC (டீசல் மட்டும்) வசதியை சோனெட்டிற்கு கியா வழங்குகிறது

  • நிலையானதாக 12.5 அங்குல டிஜிட்டைஸ்டு இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரை கேரன்ஸ் விரைவில் பெறும்.

  • புதுப்பிக்கப்பட்ட மூன்று கார்களின் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மார்ச் 1 ஆம் தேதி முதல் அலெக்சா இணைப்பை ஆதரிக்கும்.

  • இந்த அப்டேட்கள் கிடைத்த உடனே அவற்றின் விலை விவரங்கள் வெளிவரும்

கியா அதன் லோகல் டிரையோவுக்கான பல புதுப்பித்தல்களை திட்டமிட்டுள்ளதாகத்  தெரிகிறது  சோனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் - BS6 பேஸ் II மேம்படுத்தல்கள் தவிர கூடுதல் அம்சங்கள் உள்ளன. இப்போது, மூன்று மாடல்களுக்காக கொரியன் தயாரிப்பாளர் புதுப்பிக்க உள்ள சில அம்சங்களை  பற்றிய புதிய விவரங்கள் எங்களது ஆதாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

கியா வரிசைப்படுத்தியுள்ள மாடல் வாரியான மாற்றங்கள் இதோ

சோனெட்

Kia Sonet


புதுப்பிக்கப்பட்ட அம்சம்


காரின் வேரியண்ட்கள்


எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)


அனைத்து டீசல் என்ஜின் l கார்களிலும்  நிலையானது.


ISOFIX குழந்தை இருக்கை ஆங்கரேஜ்கள்


அனைத்து கார்களிலும் இடம்பெற்றுள்ளது


3-பாயின்ட் பின்புற மைய சீட் பெல்ட்


அனைத்து கார்களிலும் இடம்பெற்றுள்ளது


சரிசெய்யக்கூடிய பின்புற ஹெட்ரெஸ்டுகள்


அனைத்து கார்களிலும் இடம்பெற்றுள்ளது


சரிசெய்யக்கூடிய பின்புற மைய ஹெட்ரெஸ்ட்


அனைத்து கார்களிலும் இடம்பெற்றுள்ளது


கியா கனெக்டிற்காக அலெக்சா இணைப்பு (ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது)


HTX+, GTX+, X-லைன்

  • புதுப்பித்தல்களுடன், சோனெட்டின் வரிசைகளில் ஸ்டான்டர்டாக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கியோ வழங்குவதை கவனத்தில் கொள்ளும். ISOFIX ஆங்கர்ஸ் மற்றும் சரிசெய்யக்கூடிய பின்புற ஹெட்ரெஸ்டுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும், அவை உயர்-ஸ்பெக்டு HTX டிரிம்களில் மட்டுமே முன்னர் கிடைத்தன.

  • கார் தயாரிப்பாளர் சப்-4m SUVக்கு இரண்டு சிறிய மற்றும் முக்கியமான அம்சங்களை வெளியிடும்: பின்புற நடுத்தர பயணிகளுக்கு த்ரீ-பாயிண்ட் சீட்பெல்ட் மற்றும் இந்த பயணிகளுக்கான சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்.

Kia Sonet four airbags

  • சோனெட் ஏற்கனவே நான்கு ஏர்பேகுகள் மற்றும் ஹைலைன் டயர் பிரசர் கண்காணிப்பு அமைப்பை நிலையானதாக பெற்றுள்ளது.

  • இருந்தாலும், சோனெட்டில் மடக்கக்கூடிய பின்புற ஆர்ம்ரெஸ்ட் வசதி இல்லை.

  • அமேசான் அலெக்சா இணைப்புடன் சோனெட்டின் முதல் தர டிரிம்களில் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்தை கியோ சமீபத்தில் (2023, மார்ச் 1 ஆம் தேதி முதல்) புதுப்பித்தது. ரிமோட் கிளைமேட் கண்ட்ரோல், ரிமோட் வாகனநிலையின் சோதனை, வாகனத்தின் லாக்/அன்லாக் நிலை, ஃபைன்ட் மை கார், ஸ்பீடூ அலர்ட்( டர்ன் ஆன்/ஆஃப்), டைம் ஃபென்ஸ் அலெர்ட் (டர்ன் ஆன்/ஆஃப்) போன்ற ரிமோட் கமாண்டுகளை கியா கனெக்ட் வழியாக பயனர்களுக்கு அது அனுமதிக்கிறது. பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செல்டோஸ்

Kia Seltos


அம்சங்கள்

வேரியண்ட்


3-பாயின்ட் பின்புற மைய சீட் பெல்ட்


அனைத்து கார்களிலும் இடம்பெற்றுள்ளது


கியா கனெக்டிற்காக அலெக்சா இணைப்பு(ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது)


HTX, HTX+, GTX (O), GTX+, X-லைன்

 

  • சோனெட்டைப் போன்றே செல்டோஸ் இலும் பின்புற நடுப்பயணிக்காக த்ரீ-பாயின்ட் சீட் லெட்டை பெறுகிறது.

  • அதன் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி அதே செயல்பாடுகளுக்கு அமேசான் அலெக்சா இணைப்புக்கான ஆதரவு கிடைக்கிறது.

மேலும் படிக்க: உங்கள் சன்ரூஃபை சரியாகப் பராமரிக்க டாப் 5 ஆலோசனைகள்

கேரன்ஸ்

Kia Carens


அம்சங்கள்


வேரியண்ட்


12.5 அங்குல டிஜிட்டைஸ்டு இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்


அனைத்து கார்களிலும் இடம்பெற்றுள்ளது


தோல்-உறையிடப்பட்ட கியர் நாப்


பிரஸ்டீஸ் ப்ளஸ்- இலிருந்து


3-பாயின்ட் பின்புற மைய சீட் பெல்ட்


நிலையானதாக விரைவில் வழங்கப்பட உள்ளது


கியா கனெக்டிற்காக அலெக்சா இணைப்பு(ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது)


லக்சுரி, லக்சுரி பிளஸ்

Kia Carens digitised instrument cluster 

  • கியா விரைவில் 12.5 அங்குல டிஜிட்டைஸ்டு இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வசதியை  கேரன்ஸ்இன் பேஸ்-ஸ்பெக் ப்ரீமியம் டிரிம்களில் அறிமுகப்படுத்த உள்ளது. இதுவரை, பிரஸ்டீஜ் டிரிம்மின் இரண்டாவதிலிருந்து பேஸ் மாடலுக்கு மட்டும் அது வழங்கப்படுகிறது.

  • மிட்-ஸ்பெக் பிரஸ்டீஜ் ப்ளஸ் டிரிம்மிலிருந்து தோல்-உறையிடப்பட்ட கியர் நாபும் MPV-இல் வர உள்ளது, இதுவரை, அந்த அம்சம் உயர்-ஸ்பெக் லக்சுரி கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

  • இந்த புதுப்பித்தலுடன் கேரன்ஸ்-இல் த்ரீ-பாயின்ட் பின்புற மைய சீட்பெல்ட் வசதியை கார் உற்பத்தியாளர் வழங்கவில்லை, அது விரைவில் புதுப்பிக்கப்படும்.

  • செய்வதற்கு கேரன்ஸ்-இன் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் அலெக்சா இணைப்பையும் பெறுகிறது

தொடர்புடையவை: சோனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ்-கார் வரிசைகளில் டீசல்-மேனுவல் ஆப்சனை கைவிட கியா இந்தியா முடிவெடுத்துள்ளது. 

விலைகள் மற்றும் போட்டியாளர்கள்

Kia Sonet, Carens and Seltos

இந்த புதுப்பித்தல்களுடன், கியாவின் கார்களின் விலையும் உயரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இப்போது, சோனெட் ரூ.7.69 இலட்சம் முதல் ரூ.14.39 இலட்சம் வரையும், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் இரண்டும் ரூ.10.19 இலட்சம் முதல் ரூ.19.15 இலட்சம் வரையும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கியாவின் சப்-4m SUV கார், மஹிந்திரா XUV300, ஹீண்டாய் வென்யு, டாடா நெக்சான், நிசான் மேக்னைட், மாருதி பிரெசா, மற்றும் ரெனால்ட் கைகர் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது. மறுபுறத்தில், செல்டோஸ் கார், ஹீண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக், வோல்க்ஸ்வேகன் டைகுன் மற்றும் மாருதி கிரான்ட் விடாராவிற்கு போட்டியாக விளங்கும் . அதேநேரத்தில், டோயோட்டா இனோவாவிற்கு கீழே கேரன்ஸ் இடம்பெற்றுள்ளது, ஹீண்டாய் அல்கசார்  விருப்பத்திற்கு சரியான மாற்றாக உள்ளது.

மேலும் படிக்கவும்: சோனெட் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Kia சோனெட் 2020-2024

Read Full News

explore similar கார்கள்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience