கியா சோனெட், ரூ.11.85 லட்சம் விலை உள்ள புதிய ‘ஆரோக்ஸ்’ எடிஷ னைப் பெறுகிறது
published on மே 10, 2023 04:26 pm by tarun for க்யா சோனெட் 2020-2024
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
பார்ப்பதற்கு மேம்பட்ட தோற்றத்தைக் கொண்ட இந்த புதிய பதிப்பு HTX ஆன்னிவர்சரி எடிஷன் காரை அடிப்படையாகக் கொண்டது.
-
ட்விஸ்டட் முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள் ஆரஞ்சு வண்ணத்துடன் கூடிய பக்கக்கதவு கிளாடிங் ஆகியவற்றைப் பெறுகிறது.
-
உட்புறம் மற்றும் அம்சங்களின் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை.
-
iMT மற்றும் ஆட்டோமெட்டிக் தேர்வுடன் அதே 1-லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் தொடர்கிறது.
-
HTX கார் வேரியன்ட்களைவிட ரூ40,000 கூடுதலாகப் பெறுகிறது
கியா அமைதியாக சோனெட் தயாரிப்பு வரிசைகளில் புதிய ‘ஆரோக்ஸ்’ பதிப்பை அறிமுகப்படுத்தியது . ஏற்கனவே உள்ள HTX ஆனிவர்சரி பதிப்பை அடிப்படையாகக் கொண்ட குறைந்த எண்ணிக்கையிலான எடிஷனின் விலை ரூ.11.85 லட்சங்களிலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது
|
|
|
|
|
|
|
|
|
|
ஆனிவர்சரி எடிஷனை உண்மையில் ஆரோக்ஸ் எடிஷன் மாற்றவில்லை, ஆனால் இந்த பேக்கேஜுடன் மட்டுமே பிந்தைய காரை நீங்கள் இப்போது பெற முடியும். அதன் பலனாக, ஆனிவர்சரி எடிஷனை விட அது கூடுதல் ப்ரீமியம் பெறவில்லை மேலும் அதன் விலை ரூ.11.85 லட்சம் முதல் ரூ.13.45 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. HTX+ கார்களுடன் ஒப்பிடும்போது, இதன் விலை ரூ.40,000 வரை வரை அதிகம்.
புதிதாக என்ன உள்ளது ?
ஆரோக்ஸ் எடிஷனின் மாற்றங்கள் வெறும் அழகியல் ரீதியானவையே. முன்புறத்தில், நீங்கள் ஆரஞ்சு வணத்தில் டிவிஸ்டட் ஸ்கிட் பிளேட் வடிவமைப்பைப் பெறுகிறீர்கள். அதே ஃபினிஷ் கிரில் மீதும் உள்ளது மேலும் தனிப்பட்ட ‘ஆரோக்ஸ்’ பேட்ஜிங்கும் அங்கே காணப்படுகிறது. அதே 16 -இன்ச் அலாய் சக்கரங்களை பெறுகிறது ஆனால் ஆரஞ்சு வண்ண சக்கர உறைகளை சுற்றிலும் பெற்றுள்ளது பக்கவாட்டித் தோற்றம் ஆரஞ்சு வண்ண கதவு கார்னிஷ் உடன் புதிய ஸ்கிட் பிளேட் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. பின்புற ஸ்கிட் பிளேட்டும் ஆரஞ்சு வண்ணத்தில் மறுவடிவமைக்கப்பட்டு ட்விஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
HTX கார் வேரியன்ட்கள் ஆறு ஷேடுகளில் இருந்தாலும், இந்த பதிப்பு நான்கு ஆப்ஷன்களில் கிடைக்கிறது- கிராவிட்டி கிரே, ஆரோரா பிளாக் பியர்ல், ஸ்பார்க்கிலிங் சில்வர், மற்றும் கிளேசியர் ஒயிட் பியர்ல்.
மேலும் படிக்கவும்: தோற்றத்தில் பொலிவு கூட்டப்பட்ட கியா சோனெட் ஸ்பை அறிமுகம்; 2024 இல் இந்தியாவில் அறிமுகம்
அதன் உட்புறத் தோற்றத்தில் எந்த மாற்றங்களும் இல்லை, தோலினால் ஆன இருக்கைகளுடன் அதே கறுப்பு மற்றும் பழுப்பு வண்ண உட்புறத்தோற்றமே தொடர்கிறது.
அம்சப் புதுப்பித்தல்கள் ஏதேனும் உள்ளதா?
(எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்ட சோனெட் GTX+ படம் )
சோனெட் ஆரோக்ஸ் எடிஷனில் எந்த அம்சங்களும் கூடுதலாக சேர்க்கப்படவில்லை. LED ஹெட்லேம்புகள், எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆன்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய 8-இன்ச் டச் ஸ்கிரீன், புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப், ஆட்டோமெட்டிக் ஏசி மற்றும் பேடில் ஷிஃப்டர்களுடன்(ஆட்டோமெட்டிக் கார் வேரியன்ட்களுக்கு மட்டும்) அது தொடர்கிறது.
நான்கு ஏர்பேகுகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல், ஆகியவற்றை பாதுகாப்பு அம்சம் உள்ளடக்கியுள்ளது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
மேலும் படிக்கவும்: 2022 ஆம் ஆண்டில் விற்பனையான iMT உடன் வந்த 3இல் 1 கியோ சோனெட் கார்கள்
120PS 1-லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 115PS 1.5லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் சோனெட் ஆரோக்ஸ் எடிஷன்கள் கிடைக்கின்றன. டர்போ பெட்ரோல் யூனிட் 6-வேக iMT( மேனுவல் இல்லாத கிளட்ச்) மற்றும் 7-வேக DCT(டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக்) உடன் வருகிறது மேலும் டீசல் 6 வேக iMT மற்றும் 6-வேக AT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்: கியா சோனெட் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful