• English
  • Login / Register

புதிய எஸ்யூவி -யின் வடிவமைப்பு விவரங்களை கியா வெளியிட்டுள்ளது

published on நவ 07, 2024 12:55 pm by dipan

  • 31 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கியா -வின் புதிய எஸ்யூவி வடிவமைப்பில் கியா இவி 9 மற்றும் கியா கார்னிவல் ஆகிய கார்களில் இருந்து நிறைய விஷயங்கள் இடம்பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.

கியா நிறுவனம் அதன் வரவிருக்கும் எஸ்யூவி -யின் டிஸைன் ஸ்கெட்ச் எனப்படும் வடிவமைப்பு படங்களை டீஸர்களாக வெளியிட்டுள்ளது. இது கியா -வின் லேட்டஸ்ட் ‘டிசைன் 2.0’ தத்துவத்தைப் பின்பற்றும் என தெரிகிறது. பல ஆன்லைன் அறிக்கைகளின்படி இந்த புதிய எஸ்யூவிக்கு கியா சிரோஸ் என்று பெயரிடப்படலாம். ஏனெனில் இந்த பெயர் கியா இந்தியாவால் டிரேட்மார்க் செய்யப்பட்டுள்ளது. கியாவின் எஸ்யூவி -களுக்கு 'S' -ல் தொடங்கும் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கத்துக்கும் இந்தப் பெயர் ஏற்றபடி இருக்கும். படங்கள் எஸ்யூவி -யின் பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புற வடிவமைப்பை காட்டுகின்றன. இதன் மூலமாக ஒட்டுமொத்த காரின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த படங்களிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள்.

படங்களில் பார்க்க முடிந்த விஷயங்கள் என்ன ?

முதல் பார்வையில் வடிவமைப்பு ஓவியங்கள் எஸ்யூவிக்கான உயரமான, பாக்ஸி வடிவமைப்பை பார்க்க முடிகிறது. வடிவமைப்பானது இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா EV9 எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் கியா கார்னிவல் ஆகிய இரண்டு கார்களாலும் ஈர்க்கப்பட்டுள்ளதை போல தெரிகிறது. இது வரவிருக்கும் மாடலுக்கான முக்கிய முயற்சி என்று கியா தெரிவித்துள்ளது.

பக்கவாட்டில் எஸ்யூவி -யின் ஃபிளாட் ரூஃப் மற்றும் பெரிய ஜன்னல் பேனல்களை பார்க்க முடிகிறது. இது கேபின் வென்டிலேஷன் நிறைந்ததாக இருக்க உதவும். பின்புற கதவு கண்ணாடி பின்புற குவார்ட்டர் கண்ணாடியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. அதே சமயம் விண்டோ பெல்ட்லைன் சி-பில்லரை நோக்கி வளைவாக கொடுக்கப்பட்டுள்ளது. 

இது பெரிய வீல் ஆர்ச்களை கொண்டிருக்க வாய்ப்புள்ளது மற்றும் இது ஒரு முக்கிய ஷோல்டர் லைன் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் உள்ளன. முன்புறம் நீளமான LED DRL -கள் மற்றும் எக்ஸ்ட்டீரியர் ரியர்வியூ மிரர் (ORVM) டர்ன் இண்டிகேட்டர்களுடன் உள்ளது.

இரண்டாவது டிசைன் ஸ்கெட்ச் எஸ்யூவியின் பின்பகுதியை பற்றிய கூடுதல் விவரங்களைக் காட்டுகிறது. இதில் நீளமான ரூஃப் ரெயில்ஸ் மற்றும் எல்-வடிவ டெயில் லைட்ஸ் ஆகியவை உள்ளன. வரவிருக்கும் இந்த எஸ்யூவியின் பாக்ஸி தோற்றத்தை நிறைவு செய்யும் டெயில்கேட் ஃபிளாட் ஆனது.

மேலும் படிக்க: அறிமுகமானது Kia Tasman: பிராண்டின் முதல் பிக்கப் டிரக்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

புதிய எஸ்யூவி பற்றிய கூடுதல் தகவல்கள்

ஊடகங்களில் வெளியான அறிக்கைகளின்படி கியா சோனெட் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு இடையே கியா சிரோஸ் இடையே விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இருப்பினும் இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்த கியாவிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வரும் வரை காத்திருக்க வேண்டும்.

Kia Sonet Touchscreen

இன்ட்டீரியர் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் கியா "அதி விசாலமான மற்றும் வசதியான கேபினை" கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது. இணையத்தில் வெளியான ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் பார்க்கும் போது இது சோனெட் மற்றும் செல்டோஸ் போன்ற டூயல்-ஸ்கிரீன் செட்டப்பை கொண்டிருக்கும் மற்றும் பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் போன்ற பிரீமியம் வசதிகளுடன் வரலாம்.

Kia Sonet Engine

3 இன்ஜின் ஆப்ஷன்களை கொண்ட கியா சோனெட்டின் அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் இது கடன் வாங்கும் என்று தெரிகிறது. முதலில் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் 83 PS மற்றும் 115 Nm அவுட்புட்டை கொடுக்கும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 1-லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (120 PS/172 Nm) 6-ஸ்பீடு கிளட்ச்-பெடல் லெஸ் மேனுவல் (iMT) அல்லது 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) உடன் இணைக்கப்பட்டுள்ளது. சோனெட்டில் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS/250 Nm) 6-ஸ்பீடு மேனுவல் 6-ஸ்பீடு கிளட்ச் (பெடல்)-லெஸ் மேனுவல் (iMT) அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். விலை ரூ.9 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.

கியாவின் புதிய எஸ்யூவி பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன? கீழே உள்ள கமென்ட் பகுதியில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள் !

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience