இந்தியாவில் Kia EV6 கார் மீண்டும் ரீகால் செய்யப்பட்டுள்ளது
முன்பை போலவே மென்பொருள் அப்டேட்டுக்காக கியா EV6 இரண்டாவது முறையாக ரீகால் செய்யப்பட்டுள்ளது.
-
ரீகாலுக்காக அழைக்கப்பட்ட யூனிட்கள் மார்ச் 03, 2022 மற்றும் ஏப்ரல் 14, 2023 -க்கு இடையில் தயாரிக்கப்பட்டவையாகும்.
-
ஆக்ஸிலரி பேட்டரியின் செயல்திறனை மேம்படுத்த உதவும் ICCU மென்பொருளை அப்டேட் செய்ய கியா வாகனங்களை ரீகால் செய்துள்ளது.
-
பாதிக்கப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை 1,380 ஆக உள்ளது.
-
EV6 -ன் உரிமையாளர்களை கியா தொடர்பு கொண்டு ரீகால் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கும்.
-
இது 77.4 kWh பேட்டரியுடன் 708 கி.மீ தூரம் வரை ரேஞ்சை கொடுக்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
EV 6 -ன் விலை ரூ.60.79 லட்சம் மற்றும் ரூ.65.97 லட்சம் ஆக இருக்கிறது.
-
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா நிறுவனம் அதன் ஆல் எலக்ட்ரிக் காரான EV6 ஆனது ரீகால் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்த ரீகால் மார்ச் 3, 2022 மற்றும் ஏப்ரல் 14, 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட மாடல்களுக்கு பொருந்தும். இந்த ரீகால் மூலம் மொத்தம் 1,380 யூனிட்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ரீகாலுக்கான காரணம் இங்கே.
Kia EV6: ரீகாலுக்கான காரணம் என்ன ?
ஆக்ஸிலரி 12V பேட்டரியின் சார்ஜிங் திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்த உதவும் வகையில் காரிலுள்ள இன்டெகிரேட்டட் சார்ஜிங் கண்ட்ரோல் யூனிட்டுக்கு (ICCU) மென்பொருள் அப்டேட் தேவை என்று கியா தெரிவித்துள்ளது. இந்த பேட்டரி குறைந்த மின்னழுத்த பாகங்கள் மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற எலக்ட்ரிக் சாதனங்களுக்கு இது சக்தி அளிக்கிறது. கியா EV6 -க்கு இது முதல் ரீகால் இல்லை. கடந்த வருடமும் இதே பிரச்னைக்காக கியா நிறுவனம் ICCU உடனான இதே பிரச்சினைக்காக EV6 காரை திரும்ப அழைத்தது.
Kia EV6: உரிமையாளர்கள் என்ன செய்ய முடியும்?
மார்ச் 3, 2023 மற்றும் ஏப்ரல் 14, 2023 -க்கு இடையில் தயாரிக்கப்பட்ட EV6 -ன் உரிமையாளர்களை கியா தொடர்புகொண்டு விரைவான மென்பொருள் அப்டேட்டுக்காக அழைக்கும். பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் கியா டீலர்களை சந்திக்க பதிவு செய்யலாம் அல்லது 1800-108-5005 என்ற எண்ணில் கால் சென்டரை தொடர்புகொள்ளலாம்.
Kia EV6: ஒரு பார்வை
EV6 ஆனது கர்வ்டு டூயல் 12.3 டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், வென்டிலேஷன் மற்றும் பவர்டு முன் இருக்கைகள், டூயல் ஜோன் ஆட்டோ ஏசி, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் 14-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் உடன் வருகிறது. பாதுகாப்புக்காக 8 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன.
EV6 இரண்டு மோட்டார் செட்டப் உடன் சிங்கிள் 77.4 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது; அவற்றின் விவரங்கள் இங்கே:
பேட்டரி |
77.4 kWh |
|
பவர் |
229 PS |
325 PS |
டார்க் |
350 Nm |
605 Nm |
டிரைவ்டிரெய்ன் |
RWD |
AWD |
கிளைம்டு ரேஞ்ச் |
708 கி.மீ வரை |
பேட்டரி 350 kW DC சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இது 18 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யும்.
Kia EV6: விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா EV6 விலை ரூ.60.79 லட்சம் மற்றும் ரூ.65.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆக உள்ளது. இது ஹூண்டாய் அயோனிக் 5 மற்றும் BMW iX1 ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.