• English
  • Login / Register

சோதனையின் போது முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ள Tata Sierra

டாடா சீர்ரா க்காக பிப்ரவரி 20, 2025 10:52 pm அன்று kartik ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 31 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய டாடா சியரா ஆனது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஒரு EV வெர்ஷன் விற்பனைக்கு வரலாம். அதைத் தொடர்ந்து ICE பதிப்பு வெளியிடப்படும்.

முந்தைய ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுகளில் கான்செப்ட் ஆக காட்சிப்படுத்தப்பட்ட புதிய டாடா சியரா ICE பதிப்பு மற்றும் இவி ஆகிய இரண்டு கார்களும் இப்போது  முதல் முறையாக சோதனை செய்யப்படும் போது படம்பிடிக்கப்பட்டுள்ளன. 2025 ஆண்டு நிகழ்வில் டாடா நிறுவனம் முதல் முறையாக சியரா கான்செப்ட்டின் ICE பதிப்பைக் காட்சிப்படுத்தியது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியரா முதலில் EV ஆக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ICE பதிப்பு வெளியாகலாம். ஸ்பை ஷாட்கள் மூலமாக தெரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் மற்றும் டாடா சியரா -வை பற்றி இங்கே பார்க்கலாம். 

ஸ்பை ஷாட்கள் மூலம் தெரிய வரும் விவரங்கள் என்ன ?

முதலாவதாக இந்த குறிப்பிட்ட சோதனைக் கார் EV அல்லது ICE பதிப்பாக உள்ளதா என்பது சரிவர தெரியவில்லை. ஏனெனில் இது முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் பார்க்கக்கூடியது, ஒத்த LED ஹெட்லைட் அமைப்புடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டுள்ளது. கீழ் பம்பரில் ஒரு ஏர் டேம் ஒன்று தெரிகிறது. இங்கே தெரியவில்லை என்றாலும் கூட தயாரிப்புக்கு தயாராகவுள்ள ஸ்பெக் மாடல் பானட்டின் முழுமையான அகலத்துக்கும் லைட் பாரை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பக்கவாட்டு தோற்றம் ஆனது 90 -களின் விற்பனையில் இருந்த சியராவின் பிரபலமான வடிவமைப்பின் அதிநவீனமயமாக்கப்பட்ட வெர்ஷனாக இருக்கும்.

ஃப்ளஷ் டோர் ஹேண்டில்களுடன் இது வரும். அசல் காரில் இருந்து பழமையான ஆல்பைன் பின்புற ஜன்னல்களின் திருத்தப்பட்ட பதிப்பைப் கொண்டிருக்கும். ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட மாடல் அலாய் வீல்கள் இருந்தன. இப்போது, ​​சோதனை கார் ஸ்டீல் வீல்களை கொண்டிருந்தது. 

பின்புறம் முழுவதுமாக றைக்கப்பட்டிருந்தது. டெயில்லேம்ப்கள் மற்றும் பின்புற ஜன்னல் மட்டுமே வெளியில் தெரிந்தன. ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலில் இணைக்கப்பட்ட LED டெயில் லைட்ஸ், கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் நடுவில் சியரா பேட்ஜிங் ஆகியவற்றை பார்க்க முடிந்தது.

மேலும் பார்க்க: 7 நிஜ வாழ்க்கைப் படங்களில் கியா சிரோஸின் மிட்-ஸ்பெக் HTK பிளஸ் வேரியன்ட்டின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தைப் பாருங்கள்

டாடா சியரா எதிர்பார்க்கப்படும் வசதிகள்

டாடா சியரா சோதனைக் காரின் உட்புற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இது 12.3-இன்ச் டிரிபிள்-ஸ்கிரீன் செட்டப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். டூயல்-சோன் ஆட்டோ ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் இயங்கும் செயல்பாட்டுடன் மற்றும் பிரீமியம் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் அமைப்பு ஆகியவையும் இருக்கலாம். 

பாதுகாப்புக்காக சியராவில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டாடா சியரா -வின் எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்

டாடா சியராவின் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் விவரங்கள் இங்கே: 

இன்ஜின் 

1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் 

1.5 லிட்டர் டீசல் 

பவர் 

170 PS

118 PS

டார்க் 

280 Nm

260 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT*, 7-ஸ்பீடு DCT^

6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT^

*MT= மேனுவல் டிரான்ஸ்மிஷன் 

^DCT= டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் 

டாடா சியரா எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள் 

டாடா சியராவின் ஆரம்ப விலை சுமார் ரூ.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, எம்ஜி ஆஸ்டர், மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

பட ஆதாரம்

was this article helpful ?

Write your Comment on Tata சீர்ரா

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்Estimated
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்Estimated
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்Estimated
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்Estimated
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf3
    vinfast vf3
    Rs.10 லட்சம்Estimated
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience