சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

அறிமுகமானது Kia Carens X-Line: விலை ரூ 18.95 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

published on அக்டோபர் 03, 2023 03:00 pm by anonymous for க்யா கேர்ஸ்

இந்த X-Line டிரிம் மூலமாக கேரன்ஸ் இப்போது செல்டோஸ் மற்றும் சோனெட் கார்களை போல மேட் கிரே எக்ஸ்டீரியர் கலர் ஆப்ஷனை பெறுகிறது.

  • கியா கேரன்ஸ் X-Line பெட்ரோல் DCT மற்றும் டீசல் 6AT இல் ஆறு இருக்கை அமைப்புடன் கிடைக்கிறது

  • மேட் கிராஃபைட் எக்ஸ்டீரியர் கலர் மற்றும் டூ-டோன் பிளாக் மற்றும் ஸ்ப்ளெண்டிட் சேஜ் கிரீன் இன்டீரியர்களுடன் வருகிறது.

  • இடது பின்புற பயணிகளுக்கான ரியர் சீட் என்டெர்டெயின்மென்ட் (RSE) யூனிட் மற்றும் கேபினை சுற்றி ஆரஞ்சு ஸ்டிச் ஆகியவற்றை பெறுகிறது.

  • டாப்-ஸ்பெக் லக்சுரி பிளஸ் வேரியன்ட்டின் அடிப்படையில், X-Line ரூ.55,000 வரை விலை அதிகமாக இருக்கும்.

  • மெக்கானிக்கல் வாரியாக மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை; கேரன்ஸ் X-Line அதே 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது.

கியா தற்போது கேரன்ஸ் காரின் லைன் அப்பில் ஒரு புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. X-Line என அழைக்கப்படும் இது, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் மட்டுமே ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரையில் ரூ.18.95 லட்சம் மற்றும் 19.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாப்-எண்ட் லக்ஸரி பிளஸ் உடன் விலை ஒப்பீடு:

வேரியன்ட்

விலை

வித்தியாசம்

கியா கேரன்ஸ் லக்ஸரி பிளஸ் DCT 6 STR

ரூ. 18.40 லட்சம்

ரூ. 55,000

கியா கேரன்ஸ் X-Line DCT (புதியது)

ரூ. 18.95 லட்சம்

கியா கேரன்ஸ் லக்ஸரி பிளஸ் டீசல் AT 6 STR

ரூ. 18.95 லட்சம்

ரூ. 50,000

கியா கேரன்ஸ் X-Line டீசல் AT (புதியது)

ரூ. 19.45 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் -க்கான விலை ஆகும்

கேரன்ஸ் X-Line டாப்-எண்ட் லக்சுரி பிளஸ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் பல அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில், MPV ஒரு மேட் கிராஃபைட் நிறம், ரேடியேட்டர் கிரில், முன் மற்றும் பின்புற பம்பர்கள், ORVM -கள், பின்புறத்தில் ஒரு ஸ்கிட் பிளேட் மற்றும் சைடு டோர் கார்னிஷஸ், கிளாஸ் பிளாக் பினிஷ் ஆகியவற்றை பெறுகிறது. கேரன்ஸ் எக்ஸ்-லைனில் சில்வர் பிரேக் காலிப்பர்களுடன் 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களை கியா கொடுத்துள்ளது.

இதையும் பாருங்கள்: கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் இன்டீரியர் முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது

காரின் உட்புறத்தில் உள்ள புதுப்பிப்புகளில் டூயல் டோன் ஸ்ப்ளெண்டிட் சேஜ் க்ரீன் மற்றும் பிளாக் அப்ஹோல்ஸ்டரி, ரியர் சீட் என்டெர்டெயின்மென்ட் பேக்கேஜ் (இடதுபக்க பின்புற பயணிகள்), ஆரஞ்சு கலர் கான்ட்ராஸ்ட் ஸ்டிச் கொண்ட கிரீன் இருக்கைகள், ஆரஞ்சு ஸ்டிச் கொண்ட கருப்பு ஸ்டீயரிங் கவர் மற்றும் கியர் லீவரைச் சுற்றி ஆரஞ்சு ஸ்டிச் ஆகியவை அடங்கும். ஃபோன் ஆப்பை பயன்படுத்திக் கன்ட்ரோல் செய்யும் வகையில் இந்த காரில் உள்ள என்டெர்டெயின்மென்ட் பேக்கேஜ் இருக்கிறது, ஸ்கிரீன் மிரரிங், பாட்காஸ்ட்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு பயன்பாடுகள் போன்ற அம்சங்களை பெறுகிறது. X-Line 6 சீட்களை கொண்டதாக இருக்கிறது =.

இன்ஜின் விவரங்களை பொறுத்தவரை, கியா கேரன்ஸ் X-Line 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இவை 160PS மற்றும் 253Nm மற்றும் 116PS மற்றும் 250Nm அவுட்புட்டை கொடுக்கின்றன. பெட்ரோல் மோட்டார் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, ​​டீசல் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை பெறுகிறது.

கேரன்ஸ் காரானது மாருதி எர்டிகா மற்றும் மாருதி XL6 ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. மேலும் இது டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் மற்றும் மாருதி இன்விக்டோ ஆகிய கார்களுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: கியா கேரன்ஸ் ஆட்டோமெட்டிக்

A
வெளியிட்டவர்

Anonymous

  • 43 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது க்யா கேர்ஸ்

Read Full News

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.10.44 - 13.73 லட்சம்*
Rs.19.77 - 30.98 லட்சம்*
Rs.10.52 - 19.67 லட்சம்*
Rs.2 - 2.50 சிஆர்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை