F-டைப்-பின் பிரிட்டிஷ் டிசைன் பதிப்பை, ஜாகுவார் அறிமுகம் செய்கிறது
published on ஜனவரி 08, 2016 12:54 pm by sumit for ஜாகுவார் எப் டைப் 2013-2020
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
F-டைப்-பின் பிரிட்டிஷ் டிசைன் பதிப்பை, ஜாகுவார் அறிமுகம் செய்கிறது. கடந்த 2012 அறிமுகம் செய்யப்பட்டு, அதன் வடிவமைப்பிற்காக பரவலாக அறியப்பட்ட இக்காருக்கு, இப்போது இந்த சேர்ப்பு மூலம் இன்னும் அதிக பிரத்யேகமானதாக மாறுகிறது.
இந்த அறிமுகத்தின் போது, ஜாகுவாரின் வடிவமைப்பு இயக்குநரான இயான் கல்லும் கூறுகையில், “F-டைப் என்பது மனநினைவுகளை பரவசப்படுத்தும் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இதை தனிப்பட்ட மற்றும் பிரிட்டிஷ் என்ற இரண்டிலும் இந்த ஒரு காட்சியமைப்பை காண முடியும். இந்த பிரிட்டிஷ் டிசைன் பதிப்பின் மூலம் F-டைப் தோற்றத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் அதிக நுட்பத்தை பெற நமக்கு வாய்ப்பு அளிக்கிறது” என்றார்.
இந்த காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில், பிரிட்டிஷ் பதிப்பு பேட்ஜ்கள் போன்ற சில சேர்ப்புகளை கொண்டதாக திகழ்கிறது. மேலும் இதில் மெரிடியனை சேர்ந்த பிரிட்டிஷ் வல்லுநர்களின் உதவியுடன் மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த பிரிட்டிஷ் டிசைன் பதிப்பிற்கான தரமான ஒரு ஸ்போர்ட்ஸ் டிசைன் பேக்காகவும், கிளோஸ் பிளேக் முன்பக்க ஸ்பிளிட்டர், பாடி-கலர்டு சைடு சில் விரிவாக்கம் மற்றும் பின்பக்க ஸ்பாய்லர் ஆகியவற்றை உட்கொண்டுள்ளது.
F-டைப் பிரிட்டிஷ் டிசைன் பதிப்பில், ஒரு 6 சிலிண்டர் 2,995cc என்ஜினை கொண்டு, ஒரு அதிகபட்ச 380 PS ஆற்றலும், 460 Nm முடுக்குவிசையும் வெளியிடுகிறது. இந்த ஆற்றலின் விளைவாக, அதிகபட்ச வேகமாக மணிக்கு 275 கி.மீ எட்டி சேருவதோடு, 5.1 வினாடிகளில் மணிக்கு 0-வில் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டுகிறது. இதில் ஒரு 8-ஸ்பீடு கியூக்ஸ்ஃப்ட் டிரான்ஸ்மிஷன் உடன் ஒரு ஆல்-வீல் டிரைவ் பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் விற்பனையாளரிடம் மட்டுமே, இந்த காரை பதிவு செய்ய முடியும். இந்த கூபே பதிப்பிற்கு £75,225 விலையும், மாற்றத்திற்குரியதை (கன்வர்டிபிள்) £80,390 என்ற விலையிலும் வாங்க முடியும். வரும் மார்ச் மாதத்தில் இருந்து இதன் வாடிக்கையாளர் விநியோகம் துவங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இவ்வாகனம் கேல்டிரா ரெட், கிளாசியர் வைட், அல்ட்ரா ப்ளூ மற்றும் அல்டிமேட் பிளாக் போன்ற நான்கு நிறங்களில் வெளியாகிறது .
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful