ஜாகுவார் F – பேஸ் - இங்கிலாந்து நாட்டு சொகுசு ரதத்தின் பிரத்தியேக புகைப்பட கேலரி
#முதலில் நாங்கள் - மிகப்பெரிய ஊடக குழுவினருடன் இணைந்து நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போ 2016 நிகழ்வின் விரிவான மற்றும் தெளிவான செய்திகளை கார்தேகோ உடனுக்குடன் வழங்கி வருகிறது.
ஜாகுவார் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான F - பேஸ் SUV வாகனங்கள் தற்போது நடைபெற்று வரும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பளபளக்கும் நீல நிறத்தில் பார்பவர்களை கவர்ந்திழுக்கும் இந்த F - பேஸ் கார்களுக்கு நீல நிறம் மிகவும் பொருந்தி வருகிறது என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு எண்ணம் தோன்றக் காரணம் நம்மில் பலர் இந்த கார்களை நீல நிறத்தில் மட்டும் தான் பார்த்திருக்கிறோம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த காரை 2016 ல் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஜாகுவார் திட்டமிட்டுள்ளது. ஜாகுவார் நிறுவனத்தினர் இந்த F - பேஸ் வாகனத்தைப் பற்றி குறிப்பிடுகையில் மிகுந்த தன்னடக்கத்துடன் இதை ஒரு க்ராஸ்ஓவர் கார் என்றே குறிப்பிடுகின்றனர். பிரன்ட் வீல் ட்ரைவ் (FWD) வசதி மட்டுமே கொண்ட சில வாகனங்களை அதன் தயாரிப்பாளர்கள் 'பெர்பெக்ட் SUV' (முழுமையான SUV ) என்று பெருமை பேசிக் கொள்ளுவதை பார்க்கையில் AWD வசதி கொண்ட இந்த F - பேஸ் வாகனத்தை தன்னடக்கத்துடன் வெறும் க்ராஸ்ஓவர் பிரிவு வாகனம் தான் இது என்று கூறியுள்ள ஜாகுவார் நிறுவனத்தினரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை . சரி ! இனி , இந்த வாகனத்தின் புகைப்படங்களை கண்டு களியுங்கள் !