7 சீட்டர் Renault Dacia Bigster வெளியிடப்பட்டது
published on அக்டோபர் 10, 2024 03:48 pm by dipan for ரெனால்ட் டஸ்டர் 2025
- 108 Views
- ஒரு கருத்தை எழுதுக
வடிவமைப்பு டஸ்டர் போலவே உள்ளது. மேலும் 4x4 பவர்டிரெய்ன் ஆப்ஷன் உடன் வருகிறது.
-
ரெனால்ட் டஸ்டர் 7-சீட்டர் உலகளவில் டேசியா பிக்ஸ்டர் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
-
வெளிப்புற வடிவமைப்பு, ஹெட்லைட்கள் மற்றும் டெயில் ஆகியவை 2025 டஸ்டர் போலவே போலவே உள்ளது.
-
19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் பெரிய முன்பக்க பம்பர் உள்ளது.
-
இதில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன், 10 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளது.
-
இது 4 இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. அதில் ஒன்று 4 வீல் சக்கர டிரைவ் (4WD) அமைப்பைக் கொண்டுள்ளது.
-
இது 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. இதன் விலை சுமார் ரூ.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம்.
டேசியா பிக்ஸ்டர் என அழைக்கப்படும் 2025 ரெனால்ட் டஸ்டர் காரின் விரிவாக்கப்பட்ட பதிப்பு உலகளவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இது 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட்டின் துணை நிறுவனமான டேசியா 2021 ஆம் ஆண்டில் பிக்ஸ்டரை அதன் உற்பத்திக்கு தயாராக உள்ள பதிப்பு வெளிப்படுவதற்கு முன்பு ஒரு கான்செப்ட் காராக அறிமுகம் செய்தது. முன்னதாக 2025 ஆம் ஆண்டில் டஸ்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டங்களை ரெனால்ட் உறுதிப்படுத்தியது. இதனால் பிக்ஸ்டர் டஸ்டரின் 7-சீட்டர் பதிப்பாக இந்திய சந்தையிலும் நுழைய வாய்ப்புள்ளது. டேசியா பிக்ஸ்டர் காரை பற்றிய சிறிய முன்னோட்டம் இங்கே:
வெளிப்புறம்
டேசியா பிக்ஸ்டரின் முன் வடிவமைப்பானது டஸ்ட்டர் போலவே உள்ளது. Y-ஷேப்டு எலமென்ட்களுடன் கூடிய நேர்த்தியான LED ஹெட்லைட்கள் உள்ளன. டஸ்ட்டருடனான ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசம், லோயர் கிரில்லைச் சுற்றி பிளாஸ்டிக் கவர்கள் இதில் இல்லை. ஃபாக் லைட்ஸ் பம்பருக்கு அருகில் உள்ளது, மேலும் இது ஒரு சில்வர் கலர் ஸ்கிட் பிளேட் ஒன்றும் உள்ளது.
19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், அறுகோண வடிவிலான வீல் ஆர்ச்கள் ஆகியவற்றை பக்கவாட்டில் பார்க்க முடிகிறது. மேலும் பிளாக் பாடி கிளாடிங் எஸ்யூவி -க்கு முரட்டுத்தனமான தோற்றத்தை சேர்க்கிறது. டர்ன் இன்டிகேட்டர்கள் பக்கவாட்டு மிரர்களில் கொடுக்கப்பட்டுள்ளன. பின் டோர்களுக்கான கைப்பிடிகள் சி-பில்லர் மீது உள்ளன. இது சில்வர் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் பிளாக் ரூஃப் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.
பின்புறத்தில் வி-வடிவ எல்இடி டெயில் லைட்ஸ் டஸ்டரை போலவே உள்ளது. பூட் டோரில் கார்பன்-ஃபைபர் பட்டையின் மேல் ‘டேசியா’ என்ற எழுத்து உள்ளது. மேலும் இது இலகுவான நிற ஸ்கிட் பிளேட்டுடன் கூடிய பெரிய ரியர் பம்பரும் உள்ளது. பின்புறம் ஒட்டுமொத்த தட்டையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் தோற்றத்தை ஃபினிஷ் செய்வதற்கான ஒரு இன்டெகிரேட்டட் பின்புற ஸ்பாய்லரும் உள்ளது.
இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
டேசியா பிக்ஸ்டர் டூயல்-டோன் கிரே மற்றும் பிளாக் கலர் இன்ட்டீரியர் உள்ளது. கேபின் முழுவதும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
டேஷ்போர்டு டஸ்டர் போலவே உள்ளது. டிரைவரை நோக்கி சாய்ந்துள்ளவாறு 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 10 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே உள்ளது. இது 6-ஸ்பீக்கர் ஆர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவையும் உள்ளன.
ஓட்டுநரின் இருக்கை மேனுவல் லும்பார் சப்போர் உடன் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடியவை. சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்டில் கூல்டு ஸ்டோரேஜ் பாக்ஸ், சார்ஜிங் பகுதி மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் உள்ளன.
இரண்டாவது வரிசையில் இது 40:20:40 விகிதத்தில் மடிக்கக்கூடிய பெஞ்ச் இருக்கையைப் பெறுகிறது. மூன்று இருக்கைகளிலும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் உள்ளன. மேலும் நடு இருக்கை கப்ஹோல்டர்களுடன் ஆர்ம்ரெஸ்டாக ஃபோல்டு செய்யலாம்.
உலகளாவிய மாடலுக்கு மூன்றாவது வரிசை கிடைக்கவில்லை. இது 667 லிட்டர் பூட் இடத்தை வழங்குகிறது. இருப்பினும் இந்திய பதிப்பில் மூன்றாவது வரிசை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பூட் லோடிங் இடத்தை குறைக்கும்.
பாதுகாப்பிற்காக பிக்ஸ்டரில் பல ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றஅட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: இந்த பண்டிகை காலத்தில் ரெனால்ட் கார்களுக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி கிடைக்கும்
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
டேசியா பிக்ஸ்டர் 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளிநாடுகளில் வழங்கப்படுகிறது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் பெயர் |
ஹைபிரிட் 155 |
TCe 140 |
TCe 130 4x4 |
இன்ஜின் திறன் |
ஸ்ட்ராங்-ஹைபிரிட் 4-சிலிண்டர் பெட்ரோல் (இன்ஜின் திறன் வெளிப்படுத்தப்படவில்லை) |
1.2 லிட்டர் 3-சிலிண்டர் 48V மைல்ட்-ஹைப்ரிட் செட்டப் உடன் கூடிய டர்போ- பெட்ரோல் இன்ஜின் |
1.2 லிட்டர் 3-சிலிண்டர் 48V மைல்ட்-ஹைப்ரிட் செட்டப் உடன் கூடிய டர்போ- பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
157 PS |
142 PS |
132 PS |
டார்க் |
170 Nm |
230 Nm |
230 Nm |
டிரான்ஸ்மிஷன் |
TBA |
6-ஸ்பீடு மேனுவல் |
6-ஸ்பீடு மேனுவல் |
டிரைவ்டிரெய்ன்* |
FWD |
FWD |
4WD |
FWD = ஃபிரன்ட்-வீல் டிரைவ்; 4WD = 4 வீல் டிரைவ்
பெட்ரோல்-எல்பிஜி பவர்டு இகோ-G 140, இது 1.2-லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின், குளோபல்-ஸ்பெக் பிக்ஸ்டருடன் கிடைக்கிறது. இந்தியாவில் பிக்ஸ்டர் 2025 ரெனால்ட் டஸ்ட்டரின் அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
7 இருக்கைகள் கொண்ட ரெனால்ட் டஸ்டர், 2025 ரெனால்ட் டஸ்ட்டரை விட கூடுதல் விலையில் வரும். இதன் விலை ரூ.10 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற நடுத்தர அளவிலான எஸ்யூவி -களான டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ், ஹூண்டாய் அல்கஸார், மற்றும் மஹிந்திரா XUV700 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.