• English
  • Login / Register

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் புதுப்பிக்கப்பட்ட சுசுகி எர்டிகா அறிமுகம் – இந்தோனேஷியாவில் இருந்து நேரடி (ஃபோட்டோ கேலரி)

modified on ஆகஸ்ட் 21, 2015 05:06 pm by raunak for மாருதி எர்டிகா 2015-2022

  • 15 Views
  • 7 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

இந்திய தொடர்புக் கொண்ட எர்டிகாவின் புதுப்பிக்கப்பட்ட மாடலை, தற்போது நடந்து வரும் காய்கின்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோவில்(GIIAS) அதிகாரபூர்வமாக சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த புதுப்பிக்கப்பட்ட MPV இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தோனேஷியாவில் அறிமுகமாகி உள்ள புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவில், உட்புற மற்றும் வெளிபுற மாற்றங்களை கொண்டிருந்தாலும், என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்தியாவில், ஸ்விஃப்ட் மற்றும் டிசையரில் செய்யப்பட்டது போல, எரிப்பொருள் சிக்கனத்தை மேம்படுத்தும் வகையில் எர்டிகாவின் 1.4-லிட்டர் VVT பெட்ரோல் மற்றும் 1.3-லிட்டர் DDiS டீசல் ஆகிய என்ஜின்களை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்று தெரிகிறது.

வெளிப்புற மாற்றங்களைப் பொறுத்த வரை, சுசுகி நிறுவனம் மூலம் எர்டிகாவிற்கு புதிய மூன்று-ஸ்லட் க்ரோம் கிரில் மற்றும் ஃபோக் லேம்ப் ஹவுசிங்கை சுற்றி க்ரோம் அலங்காரத்துடன் (அப்ளிக்யூஸ்) பம்பரில் புதுமையை காண முடிகிறது. இந்த MPV-யின் ஹெட்லைட்களில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், புதிய கிரில்களுடன் இணையும் வகையில் போனட்டில் மட்டும் நுட்பமான மாற்றங்கள் தெரிகிறது.

பக்க பகுதியின் தோற்றத்தில், புதிய இரட்டை ஐந்து-ஸ்போக் ஆலாய்களின் ஜோடியை தவிர (நம் நாட்டிற்கு இது போன்ற ஆலாய் ஜோடியை மாருதி சுசுகி அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்), மற்றப்படி எந்த அம்சங்களிலும் மாற்றம் இல்லை. பின்புறம், எர்டிகாவுடன் க்ரோம் ஸ்ட்ரிப் ஜோடி மனம் கவரும் வகையிலும், மாற்றம் எதுவும் செய்யப்படாத டெயில் லைட்களுக்கு இடையே ஒரு ஜோடி ரிஃப்ளேக்டர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

உட்புறத்தை பொறுத்த வரை, ஸ்விஃப்ட் மற்றும் டிசையரில் செய்யப்பட்டது போல புஷ்-பட்டன் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப், மின்னூட்டத்தால் மடங்க கூடிய வெளிபக்க பின்புற வ்யூ மிரர்கள் உட்பட பல அம்சங்களை இந்தியாவில் அறிமுகமாகும் எர்டிகாவில் காணலாம். மேலும் மாருதி சுசுகி நிறுவனம், நம் நாட்டில் அறிமுகப்படுத்தும் புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவில் 7-இன்ச் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மெண்ட்டை சாதாரணமாக புகுத்தி அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர, இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவில் உள்ள, 50:50 ஸ்ப்ளிட் லாஸ்ட் ரோ ஃபோல்டிங்கை, இந்திய பதிப்பிற்கும் எடுத்து வரப்பட உள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti எர்டிகா 2015-2022

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience