இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஜீப்பின் கட்டமைப்பின் கீழ் உள்ள C-SUV வேவுப் பார்க்கப்பட்டது
modified on டிசம்பர் 14, 2015 02:03 pm by அபிஜித்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: ஜீப்பின் அடுத்துவரும் தயாரிப்பு இந்தியாவிற்கு வருகிறது என்பதால், மிகவும் வலிந்து ஈர்க்கும் தன்மையை கொண்டுள்ளது. இந்த C-SUV அல்லது குறியீட்டு பெயரான ஜீப் 551 என்ற வாகனம், ஒரு விமானத்தில் ஏற்றும் போது படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் பெரும்பாலும் தென் அமெரிக்காவில் எங்கேயாவது ஒரு இடத்தில் அமைந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த முன்மாதிரி வாகனத்தை சோதனையில் ஈடுபடுத்தும் வகையில் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. யாருக்கு தெரியும், அந்த வெளிநாடு என்பது நம் தாய்நாடான இந்தியாவாக கூட இருக்கலாம்!
இந்த வேவுப் பார்க்கப்பட்ட படங்களை பார்க்கும் போது, இந்த மூடப்பட்ட நிலையில் உள்ள வாகனம், SUV-யின் ஒரு அங்கமாக தெரிவதோடு, ஸ்போர்ட்டியாகவும் காட்சியளிக்கிறது. பழைய மற்றும் கடினமான SUV-யில், இவோக்கை போன்ற (எளிதில் புரிந்து கொள்ள ஒரு எடுத்துக்காட்டு) ஒரு டிராப்பிங் ரூஃப்லைனை பெற்றிருக்கலாம்.
தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அளிக்கப்படுவது போல, இந்த C-SUV-யில் ரெட்ரோ ரினிகாடு அடிப்படையை கொண்டிருக்கும் என்ற வதந்தி பரவி வருகிறது. முன்னணி சந்தைகளில் தற்போதைய ஜீப் பெட்ரியாட் மற்றும் காம்பஸ் ஆகிய மாடல்களுக்கு மாற்றாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் இந்தியாவின் (FCA இந்தியா) ரன்ஜன்காயன் தொழிற்சாலையில் இருந்து இந்த காரின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை செய்ய திட்டமிட்டுள்ளது. வெளியாகியுள்ள சில தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில், இந்நிறுவனத்தின் மூலம் வலது-கையால் ஓட்டும் வாகனங்களின் சந்தைகளில் உட்பட்ட தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சில ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இந்த ஜீப் 551-ல் உள்ள மோட்டார் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவை முக்கிய கவர்ச்சிகரமான சாதனங்களாக உள்ள நிலையில், இதில் ஒரு இன்லைன் 4-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் யூனிட்டில் டைகர்ஷார்க் (கூல் என்ஜின் பெயர்!) ரேன்ஞ் மூலம் பெரும்பாலும் ஏறக்குறைய 164 bhp ஆற்றலை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் டீசல் விரும்பிகளுக்காக ஒரு 2.0 மல்டிஜெட்டை கொண்டு, ஏறக்குறைய 170 bhp-யை ஒட்டிய ஆற்றலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு என்ஜின்களும் ஒரு மேம்பட்ட 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பெற்று, லைன்அப்பை முழுமையாக கொண்ட ஒரு தரமான 4WD அமைப்புடன் பொறுத்தப்பட்டுள்ளது.
வரும் 2016 ஆம் ஆண்டின் துவக்கத்தில், நம் நாட்டில் இதன் தயாரிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த காரின் தொழில்நுட்பத்தை, வரும் 2016 ஆம் ஆண்டில் நடைபெறும் ஏதாவது ஒரு முக்கிய அமெரிக்கன் மோட்டார் ஷோக்களில், தயாரிப்பாளர் தரப்பில் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
இதையும் படியுங்கள்