ஹயுண்டாய் டக்ஸன் : இதுவரை நாம் தெரிந்து கொண்டவை !
published on பிப்ரவரி 08, 2016 05:57 pm by raunak for ஹூண்டாய் டுக்ஸன் 2016-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹயுண்டாய் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை டக்ஸன் SUV வாகனங்கள் , இந்நிறுவனத்தின் க்ரேடா மற்றும் சாண்டா ஃபி வாகனங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இந்த டக்ஸன் வாகனங்கள் நிரப்பும் என்று ஹயுண்டாய் நம்புகிறது. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த டக்ஸன் வாகனத்தின் முதல் பதிப்பு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது நினைவிருக்கலாம் அந்த வகையில் பார்த்தால் இந்த மூன்றாம் தலைமுறை டக்ஸன் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட உள்ளது என்று சொல்வதையும் விட மறு அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று சொல்லுவதே மிகவும் சரியாக இருக்கும். இந்த புதிய 2016 டக்ஸன் இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனங்கள் CKD முறையில் ( உதிரி பாகங்களாக இறக்குமதி செய்து இங்கே உள்நாட்டில் அஸம்பிளிக் செய்யும் முறை ) இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட உள்ளன என்று நமக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டக்ஸன் வாகனங்களின் ஆரம்ப விலை ரூ.15 – 17 லட்சங்கள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
UK சந்தையில் இந்த வாகனங்கள் 2 லட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களை எதிர்பார்க்கலாம். இருப்பினும் 2.0 லிட்டருக்கும் கூடுதலாக திறன் கொண்ட டீசல் என்ஜின்களுக்கு இந்திய தலை நகரில் தடை விதிக்கப்பட்டுள்ள தற்போதய நெருக்கடியான சூழலில் , வரும் பட்ஜெட் கூட்டத்திற்கு பின்பு இந்த நிலையில் ஓரளவு தெளிவு பிறக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் இந்நிறுவனம் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியுள்ளது. தற்போது 2.0 லிட்டருக்கு கூடுதலான திறன் கொண்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது விதிக்கப்படும் வரி எதிர் வரும் பட்ஜெட்டிற்கு பிறகு அதிகரிக்கப்படலாம் என்றும் அத்தகைய ஒரு சூழலை சமாளிக்க குறைந்த சக்தி கொண்ட டீசல் ஆப்ஷன் ஒன்றை இந்நிறுவனம் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெக்ஸ்
2.0 லிட்டர் CRDi ( இரண்டு வகையாக ட்யூன் செய்யக்கூடிய என்ஜின் )
சக்தி -136 PS / 185 PS டார்க் - 373 Nm/ 400 Nm ட்ரேன்ஸ்மிஷன் - 6 - வேக MT/ 6 -வேக AT
ட்ரைவ்ட்ரெயின் - FWD/AWD
சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை , இந்த புதிய டக்ஸன் வாகனத்தில் நேவிகேஷன் அமைப்பு வசதியுடன் கூடிய 8- அங்குல டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரில் 4.2 அங்குல MID ஸ்க்ரீன் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை மாடல்களில் ஸ்மார்ட் பவர் டெயில்கேட்( தானாக இயங்கி திறந்துக் கொள்ளும் டெயில்கேட்) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் , LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் LED டெயில்லேம்ப்களும் பொருத்தப்பட்டுள்ளன. டைமன்ட் கட் அல்லாய் சக்கரங்கள் பொருத்தபட்டுள்ளன. இவைகளைத் தவிர நிறைய ஏயர்பேகுகள் (காற்று பைகள் ) உள்ளிட்ட நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இந்த புதிய டக்ஸன் வாகனங்களில் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க ஹயுண்டாய் i30 புகைப்பட கேலரி : i20 காரின் மூத்த சகோதரன்
0 out of 0 found this helpful