ஹயுண்டாய் டக்ஸன் ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் வெளியிடப்படுகிறது.
ஹூண்டாய் டுக்ஸன் 2016-2020 க்காக ஜனவரி 12, 2016 11:53 am அன்று saad ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹயுண்டாய் இந்தியா நிறுவனம் வெகு விரைவில் தனது வாகனங்களின் வரிசையில் மற்றுமொரு SUV யை சேர்க்க தயாராகி வருகிறது. SUV பிரிவு வாகனங்களின் மீதான ஈர்ப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருகி உள்ளது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ள நிலையில் , பெரும்பாலான மக்கள் SUV வாகனங்களையே வாங்க பெரிதும் விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக , கச்சிதமான அளவில் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வெளியிடப்படும் SUV வாகனங்களின் மீது பெரும்பாலான மாக்களின் பார்வை திரும்பியுள்ளது.
ஹயுண்டாய் நிறுவனம் காம்பேக்ட் SUV பிரிவில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. க்ரேடா SUV வாகனத்தின் அசாத்தியமான வெற்றிக்கு பின்னர் தங்களது பிரபலமான டக்ஸன் SUV வாகனங்களை இந்திய சந்தையில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. நமக்கு கிடைத்துள்ள ஒரு தகவல், அடுத்த மாதம் நடக்க உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016 ல், ஹயுண்டாய் நிறுவனம் டக்ஸன் SUV வாகனங்களை அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கிறது. இப்போது க்ரேடா மற்றும் சாண்டா - ஃபி வாகனங்களுக்கு இடையே உள்ள பெரிய இடைவெளியை இந்த டக்ஸன் வாகனங்கள் நிரப்பும் என்று ஹயுண்டாய் நம்புகிறது. கடந்த வருடம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த ஹயுண்டாய் டக்ஸன் வாகனங்கள் தற்போது ஐரோப்பிய வாகன சந்தையில் மிக பிரபலமான வாகனமாக திகழ்ந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உண்மையில் , 5 வருடங்களுக்கு முன்னால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட இந்த டக்ஸன் வாகனங்கள் இப்போது மறு அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது இங்கே கவனிக்கதக்கது.
இந்த புதிய 2016 டக்ஸன் ஒரு நடுத்தர அளவு கொண்ட SUV வாகனமாகும். முந்தைய மாடலை விட பல மடங்கு சிறப்பான தோற்றம் தரும் வகையில், ஹயுண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய வடிவமைப்பு கோட்பாட்டை பின்பற்றி இந்த டக்ஸன் உருவாக்கப்பட்டுள்ளது. அறுங்கோண வடிவிலான க்ரில் அமைப்பு மற்றும் LED, DRL உடன் கூடிய இரட்டை LED ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. வாகனத்தின் பக்கவாட்டு தோற்றத்தில் பெரிய அளவிலான வளைவுகள், 19 - அங்குல அல்லாய் சக்கரங்கள் மற்றும் நேர்த்தியான ரூஃப் ரயில் அமைப்பு போன்றவைகள் பிரதானமாக இடம்பிடித்துள்ளது. பின்புறத்தைப் பொறுத்தவரை , LED டெயில் விளக்குகள், சற்று உயர்த்தி பொருத்தப்பட்டுள்ள ஸ்பாயிலர் மற்றும் குரோம் பூச்சு கொடுக்கப்பட்ட எக்ஸ்ஹாஸ்ட் பைப் போன்றைவை பளிச்சென்று கண்ணுக்கு புலப்படுகிறது.
உட்புறத்தை பொறுத்தவரை ஜூனியர் க்ரேடாவை விட பல மடங்கு சிறப்பாக இந்த டக்ஸன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். ஏராளமான சிறப்பம்சங்கள் அடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிட்டு சொல்வதென்றால் , ப்ளூடூத் வசதியுடன் கூடிய 8- அங்குல இன்போடைன்மென்ட் அமைப்பு , ஸ்மார்ட்போன் தொடர்பு , அதிநவீன குளிர்சாதன வசதி, பநோரமிக் சன்ரூப் மற்றும் ஆட்டோமேடிக் பார்கிங் வசதிகளை சொல்லலாம். பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை , 6 – ஏயர் பேக் ( காற்று பைகள் ), EBD உடன் கூடிய ABS, லேன் டிபார்ச்சர் வார்னிங், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்க்ஷன் தொழில்நுட்பம், தனிச்சையான எமெர்ஜென்சி ப்ரேகிங் அமைப்பு , ஸ்டேடிக் கார்னரிங் விளக்குகள் என்று இன்னும் பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். பாதுகாப்பு தர சோதனையான யூரோ NCAP சோதனையில் 5 - நட்சத்திர மதிப்பெண்ணை இந்த டக்ஸன் பெற்றுள்ளது என்பது ஒரு கூடுதல் செய்தியாகும்.
எஞ்சினைப் பொறுத்தவரை இந்த புதிய டக்ஸன் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என்று தெரிகிறது. 182.5bhp சக்தி மற்றும் அதிகபட்சமாக 402Nm அளவுக்கு டார்கை உற்பத்தி செய்யும் 2.0 லிட்டர் CRDi என்ஜின் மற்றும் 114bhp அளவுக்கு ஆற்றலையும் 280Nm அளவுக்கு அதிகபட்ச டார்கையும் வெளியிடும் 1.7 லிட்டர் CRDi ப்ளூ ட்ரைவ் மோட்டார் பொருத்தப்பட்ட ஆப்ஷனும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மாடலைப் பொறுத்து தேவைகேற்ப 6- வேக தானியங்கி அல்லது 6 - வேக மேனுவல் கியர் அமைப்பு ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் கிடைக்கிறது . AWD மற்றும் FWD ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோ எக்ஸ்போ 2016 நெருங்கி வரும் வேளையில், SUV பிரிவில் கடுமையான போட்டி நிலவும் என்று தெரிகிறது. ஹயுண்டாய் நிறுவனமும் இந்த வாய்ப்பை முடிந்த வரை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளவே முயலும்.
மேலும் வாசிக்க