ஹயுண்டாய் க்ரேடாவின் புக்கிங் 90,000 என்ற எண்ணிகையை கடந்தது . தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.
ஹூண்டாய் கி ரெட்டா 2015-2020 க்காக ஜனவரி 04, 2016 01:07 pm அன்று nabeel ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
கொரியன் கார் தயாரிப்பாளர்களான ஹயுண்டாய் நிறுவனத்திற்கு க்ரேடா ஒரு மாபெரும் வெற்றி படைப்பாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த க்ரேடா SUV வாகனங்கள் தொடக்கம் முதலே பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்று ஹயுண்டாய் நிறுவனத்தின் விற்பனையை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. 2015 முடிவடைந்து இந்த புத்தாண்டிலும் க்றேடாவின் வெற்றி பயணம் தொடர்கிறது . 2015 ஆம் ஆண்டு 4.65 லட்சம் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து விட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்திருந்த ஹயுண்டாய் , ஏற்கனவே அந்த இலக்கை தாண்டி தொடர்ந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. 4.76 லட்சம் ஹயுண்டாய் வாகனங்கள் இந்திய சாலைகளில் ஏற்கனவே கம்பீரமாக உலா வரத் தொடங்கி விட்டன.
SUV பிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள க்ரேடா இதுவரை 92,000 வாகனங்கள் ( 16,000 ஏற்றுமதி ஆர்டர்கள் உட்பட ) புக்கிங் ஆகி உள்ளன. ஒரு நேரத்தில், க்ரேடா SUV வாகனங்களின் வெளிநாட்டு ஏற்றுமதியை மொத்தமாக நிறுத்தி விட்டு , அசுர கதியில் பெருகி வரும் உள் நாட்டு ( இந்திய ) தேவைகளை முதலில் பூர்த்தி செய்வோம் என்று ஹயுண்டாய் நிறுவனம் முடிவு செய்தது என்றால் அதன் மூலம் க்ரேடா பெற்றுள்ள அமோக வெற்றியின் முழுமையான வீச்சை நாம் நன்கு உணர்ந்து கொள்ளலாம். துவக்கத்தில், மாதம் 6,500 க்ரேடா கார்களை தயாரித்தால் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என்று ஹயுண்டாய் நிறுவனம் போட்ட கணக்கு தப்பு என்று வெகு விரைவில் அந்நிறுவனம் உணர்ந்து விட்டது. மாதம் 6,500 என்ற எண்ணிக்கையை 7,500 ஆக உயர்த்தியது. இந்த நடவடிக்கையால் வாகனத்தை புக் செய்து விட்டு டெலிவரிக்காக காத்திருக்கும் நேரம் கணிசமாக குறைந்தது. இதுவும் ஹயுண்டாய் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயரைப் பெற்று தந்தது. இலத்தீன் NCAP ( புதிய கார் தர நிர்ணய திட்டம் ) பாதுகாப்பு சோதனையில் 5ற்கு 4 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
க்ரேடா SUV வாகனங்கள் , மேற்கு ஆசியா , ஆப்ரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 77 நாடுகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 2016 முதல் க்ரேடா கார்களின் மாத உற்பத்தியை மேலும் 1,000 உயர்த்த வேண்டும் என்று க்ரேடா முடிவெடுத்துள்ளது.
மேலும் வாசிக்க