• English
  • Login / Register

ஹயுண்டாய் இந்தியாவில் நான்கு மில்லியன் கார்களை விற்றுள்ளது !

published on நவ 27, 2015 12:59 pm by nabeel

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

சேன்ட்ரோ கார்களுடன் முதன் முதலில் இந்தியாவில் கால்வைத்த நாள் முதல் இன்று வரை வாடிக்கையாளர்களை திருப்தி பத்துவதில் ஹயுண்டாய் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்று சொல்லலாம்.  இதன் விளைவாக 4 மில்லியன் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து ஒரு புதிய மைல் கல்லை இந்நிறுவனம் எட்டியுள்ளது. இந்த கொரியன் கார் தயாரிப்பாளர்கள் தங்களது 19 வருட பயணத்தில் ஏராளமான ஏற்ற இறக்கங்களை பார்த்துள்ளனர். இவர்களின் சமீபத்திய SUV பிரிவு அறிமுகமான க்ரேடா கார்கள் வரலாறு காணாத வரவேற்பை பெற்றுள்ளதை நாம் நமது வேறு பல செய்திகளில் விளக்கியுள்ளோம். அறிமுகமான தினத்தில் இருந்து இதுவரை 70,000 க்ரேடா கார்கள் இந்திய சந்தையில் மட்டும் புக்கிங் செய்யப்பட்டுள்ளன என்பதே க்ரேடாவின் வெற்றிக்கு ஒரு பெரிய சான்றாகும்.  SUV பிரிவில் மட்டுமல்ல, ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவிலும் இந்நிறுவனத்தின் எலீட் i20 கார்கள் அமோக வர வேற்பை பெற்று   சமீபத்தில் இந்திய சந்தையில் மட்டும்   1,50,000 கார்கள் என்ற விற்பனை இலக்கை தொட்டுள்ளன. மார்ச் 2014 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த கார்கள், 'இந்தியன் கார் ஆப் தி இயர் '  (ICOTY) 2015 உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.  ப்ரீமியம் ஹேட்ச் பேக் பிரிவில் 66% சந்தை பங்கு (மார்கெட் ஷேர்) தன்வசம் உள்ளதாக ஹயுண்டாய் கூறுகிறது.

வெர்னா கார்களும் தன்னுடைய பிரிவில் ஒரு சமயத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதனுடைய புதிய ப்லூயிடிக் வடிவமைப்பு கோட்பாடு பலராலும் பாராட்டப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. பின்னர் இந்த வடிவமைப்பு கோட்பாடு வெர்னா கார்களுக்கு பின் அறிமுகமான எலன்ட்ரா  கார்களிலும் பின்பற்றப்பட்டது. இந்த நான்கி மில்லியன் என்ற மந்திர இலக்கை தொட்டது பற்றி கருத்து தெரிவிக்கையில்  ஹயுண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.கூ , “ ஹயுண்டாய் இயான் முதல் சேண்டா பி வரை   இன்று பத்து விதமான கார்களுடன் மிக வலுவான ஒரு ப்ரேன்டாக வளர்ந்து நிற்கிறது.  மேக் இன் இந்தியா திட்டத்தை பின்பற்றி உலக தரத்துடன் , சர்வதேச சந்தைக்கு எங்கள் வாகனங்களை  இந்தியாவில் தயாரித்து வருகிறோம்.  இன்று இந்தியாவில், கார் தயாரிப்பு நிறுவனங்களில் மிகப்பெரிய எற்றுமதியாளராகவும் , ப்ரீமியம் கார் தயாரிப்பாளராகவும் வளர்ந்து நின்று பெருகி வரும் இந்திய வாடிக்கையாளரின் விருப்பங்களையும் தேவைகளையும்  பூர்த்தி செய்யும் விதமாக செயலாற்றி வருகிறது.  மிக வேகமாக நாங்கள் எட்டியுள்ள இந்த விற்பனை மைல்கல் வாயிலாக  எங்கள் வெற்றியை நாங்கள் பார்க்கும் அதே வேளையில் தொடர்ந்து அர்பணிப்பு உணர்வுடன்  செயலாற்றுவோம் என்றும் உறுதி கூறுகிறோம். “  

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience