ஹயுண்டாய் சேண்ட்ரோ மீண்டும் அறிமுகமாகாது; புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு மாடல் மீதும் ரூ. 1,000 கோடி முதலீடு
published on டிசம்பர் 31, 2015 04:20 pm by manish
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
புது டெல்லி:
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களான ஹயுண்டாய் நிறுவனத்தினர் 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்த போவதாக அறிவித்துள்ளனர். புதிய மாடல் கார்கள் மற்றும் ஏற்கனவே அறிமுகமாகி மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படும் மாடல்கள் ஆகிய இரண்டு வகையான கார் மாடல்கள் ஒவ்வொன்றின் மீதும் ரூ. 1,000 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளனர். கார் உரிமையாளர்களர்களுக்கு அவர்கள் செலுத்தும் தொகைக்கு நிகரான மதிப்பை மேலும் உயர்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை என்று ஹயுண்டாய் கூறுகிறது. ஹயுண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO YK கூ, பிஸ்னஸ் லைன் பத்திரிக்கைக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் , ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1% சந்தை பங்கை ( மார்கெட் ஷேர்) அதிகரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
ஹயுண்டாய் நிறுவனம் தனது மிகவும் பிரபலமான சேன்ட்ரோ கார்களை மேம்படுத்தி மீண்டும் அறிமுகப்படுத்தலாம் என்று நாம் ஆலோசனை சொல்லி இருந்தோம். இதுபற்றி கருத்து தெரிவித்த ஹயுண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் , அத்தகைய திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை என்று தெளிவு படுத்தியதுடன் , சேன்ட்ரோ கார்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட i10 கார்கள் தொடர்ந்து நல்ல முறையில் ஹேட்ச்பேக் பிரிவில் விற்பனை ஆகி அந்த பிரிவு வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.
ஹயுண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான SUV வகை வாகனமான க்ரேடா இந்தியன் கார் ஆப் தி இயர் (ICOTY) விருதை 2015 ஆம் ஆண்டிற்காக வென்றுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை மிகச் சரியாக கணித்து அதற்கு ஏற்றாற்போல் தனது வாகனங்களை தயாரித்து வெளியிடுவதில் ஹயுண்டாய் நிறுவனத்தின் அசாத்திய திறமைக்கு சான்றாக இந்த விருது கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அவருடைய கூற்றை உண்மையாகும் வகையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹுண்டாய் இந்த விருதை வென்றுள்ளது.
மேலும். ஹயுண்டாய் மாடல் கார்களுக்கு உள்ள ரிசேல் வேல்யூ ( மறு - விற்பனை மதிப்பு ) இந்த நிறுவனத்தின் கிராமப்புற சந்தை பங்கையும் (மார்கெட் ஷேர் ) கணிசமான அளவு உயர்த்தி உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful