ஹுண்டாய் நிறுவனம் புதிய எலாண்ட்ராவின் உட்புற தோற்றங்களை கொண்ட அதிகாரப்பூர்வ வதாக வெளியிட்டுள்ளது
published on ஆகஸ்ட் 28, 2015 12:03 pm by manish
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
சமீபகாலமாக, ஹுண்டாய் நிறுவனம் தனது ஹுண்டாய் எலாண்ட்ரா காரைப் பற்றி பல உத்தியோகப்பூர்வ தகவல்கள் மற்றும் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கொரியன் வாகன தயாரிப்பாளர், விரைவில் வெளிவரவிருக்கும் எலாண்ட்ராவின் உட்புற தோற்றத்தை உள்ளடக்கிய, உத்தியோகப்பூர்வ வதாக அம்சங்களை தற்சமயம் வெளியிட்டுள்ளனர். இந்த படங்கள், புதிய கார் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை நமக்கு தெளிவாக காட்டுகிறது.
எலாண்ட்ராவின் வெளிப்புற தோற்றத்தை உள்ளடக்கிய படங்கள், சமீபத்தில் இணையத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளிவந்தன. அதன் உட்புறத்தோற்ற படங்கள், இந்த ஆண்டு முற்பகுதியில் வெளியிடப்பட்ட, சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் ஹுண்டாயின் SUV ரக புதிய டஸ்கன் காரின் உட்புற பாணியை நினைவு படுத்துகிறது. டஸ்கன் காரில் உள்ள சற்று இறங்கிய முகப்பு பெட்டி (டாஷ் போர்டு) மற்றும் மத்தியில் உள்ள இணைமையம் (சென்ட்ரல் கன்ஸோல்) போன்றவை எலாண்ட்ராவில் மாற்றியமைக்கப்பட்டு, செவ்வகமாகவும், நேராகவும் அமைக்கப்பட்டுள்ளது.
எலாண்ட்ராவில் உட்புறத்தில், முகப்புப் பெட்டியின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கிறது. இதன் இரு புறங்களிலும், குளிர் சாதன துவாரங்கள் (ஏசி வெண்ட்) பொருத்தப்பட்டுள்ளன. இத்துவாரங்களின் கட்டுபாட்டு அமைப்பு, இன்ஃபோடைன்மெண்ட் அமைப்புக்கு கீழே பொருத்தப்பட்டுள்ளது. மேலும், குளிர் சாதன கட்டுப்பாட்டு அமைப்புக்குக் கீழே கனசதுரமாக, சில சிறிய பொருட்களை வைத்து கொள்வதற்கு, ஒரு சிறிய இடம் உள்ளது.
மேலும், காரில் பயணிக்கும் பொது திடீரென்று வேகம் குறைந்தாலோ, பின்புறமாக சென்றாலோ, ஓடாமல் நின்றுவிட்டாலோ பின் வருபவர்களுக்கு உணர்த்த உதவும் ஹஜார்ட் லைட் பொத்தான் போன்ற சில கூறுகள், குளிர் சாதன கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்புக்கு நடுவே அமைந்துள்ளது. தற்போதைய எலாண்ட்ரா வகை கார்களில் உள்ளது போல, கப்களை வைப்பதற்கு வசதியாக உள்ள பிடிமானங்கள் (கப் ஹோல்டர்) ஹேண்ட் ப்ரேக் அருகில் உள்ளன. இந்த காரின் உள்ளே குரோமிய மற்றும் வெள்ளி வண்ணங்களில் வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், புதிய டஸ்கன் காரில் உள்ளது போல, இதிலும் நான்கு உருளை டீசல் இஞ்ஜின் அல்லது 174 bhp குதிரை திறனை தரவல்ல 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும் என்று தெரிகிறது. எலாண்ட்ரா கார், இந்த வருடத்தின் பின் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
0 out of 0 found this helpful