சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தாண்டின் 5.05 மில்லியன் கார்களின் விற்பனை இலக்கு: ஹூண்டாய் இழக்க வாய்ப்பு

published on டிசம்பர் 23, 2015 09:41 am by sumit

ஜெய்ப்பூர்:

இந்தாண்டின் விற்பனை இலக்கை, ஹூண்டாய் நிறுவனம் இழக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அந்நிறுவனத்தினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி சேர வேண்டுமானால், வழக்கமான மாத சராசரி விற்பனையை விட, இந்த மாதம் 50% கூடுதல் கார்களை விற்பனை செய்ய வேண்டும். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்த தென் கொரியன் நிறுவனம் தொடர்ந்து அதன் விற்பனை இலக்கை அடைந்து வந்துள்ளது. ஆனால் இந்த வெற்றிப் பயணத்தை தடுக்கும் வகையில் பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவில் இந்தாண்டு புதுப்பிக்கப்பட்டவைகளின் போட்டியை அந்நிறுவனம் சந்திப்பதோடு, எந்த இலாபகரமான தயாரிப்புகளும் இல்லை.

2015 ஆம் ஆண்டில் 5.05 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை அந்நிறுவனம் நியமித்தது. ஆனால் சமீப காலத்தில் சீனாவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் பணப் பரிமாற்றத்தின் ஏற்றத்தாழ்வு ஆகியவை, ஹூண்டாயின் விற்பனை வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்துவதாக அமைந்தது. சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையின் தாக்கம், குறிப்பாக ஹூண்டாய்க்கு இப்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் இதுவரை இந்த ஆசிய நாட்டை சாத்தியமான சந்தையாய் கொண்டு இது வெற்றிப் பெற்று வந்தது. சிறப்பான விற்பனையை கொண்ட புதிய மாடல்கள் இல்லாமை மற்றும் பிரேசில் மற்றும் ரஷ்யாவில் தொடரும் வலுவில்லாத நிலை ஆகிய காரணங்களால், வரும் 2016 ஆம் ஆண்டின் ஹூண்டாய் விற்பனை, இந்தாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாகவே இருக்கும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இது குறித்து மூன் யோங் கொன் என்ற ஒரு ஆய்வாளர் கூறுகையில், “அடுத்தாண்டிற்குள் ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள சூழ்நிலை முழுமையாக மாற வாய்ப்பு இல்லை. வரும் 2016-ல் நாட்டில் உள்ள விற்பனை மற்றும் தயாரிப்பு விகிதத்தை மீட்டெடுக்க, சீனாவில் உள்ள வரிக்குறைப்பை பயன்படுத்தி கொள்வது மட்டுமே முக்கிய வழியாக அமையும்” என்றார்.

மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வாளரான லீ சாங் ஹூயன் கூறுகையில், “இந்தாண்டு ஏற்பட்டது போல சீனாவில் விற்பனை வீழ்ச்சியடையும் என்று யாராவது எதிர்பார்த்து இருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. ஏனெனில் சீனா ஒரு வெள்ளை குதிரையாக, நாம் எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. சந்தையின் சூழ்நிலை எப்படி அமையும் என்பதை பொறுத்தே, வரும் 2016 ஆம் ஆண்டு ஒரு வேளை சீனாவில் விற்பனை மேம்படலாம் என்றாலும், எந்த காரியங்களும் உற்சாகப்படுத்தும் வகையில் இல்லை” என்றார்.

இந்த கொரியன் கார் தயாரிப்பாளருக்கு, அமெரிக்காவில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைத்துள்ளது. கடந்த 11 மாதங்களில் அங்கு 698,202 யூனிட்கள் விற்பனையாகி 5.6% விற்பனை உயர்வை அடைந்துள்ளது.

மேலும் வாசிக்க

s
வெளியிட்டவர்

sumit

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.10.44 - 13.73 லட்சம்*
எலக்ட்ரிக்
பேஸ்லிப்ட்
Rs.67.65 - 71.65 லட்சம்*
பேஸ்லிப்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை