• English
  • Login / Register

இந்தியாவில் Hyundai Ioniq 5 ரீகால் செய்யப்பட்டுள்ளன, 1,700 க்கும் மேற்பட்ட யூனிட்களில் சிக்கல் இருக்கலாம் என தெரிய வந்துள்ளது!

published on ஜூன் 07, 2024 06:42 pm by shreyash for ஹூண்டாய் லாங்கி 5

  • 57 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இன்டெக்ரேட்டட் சார்ஜிங் கண்ட்ரோல் யூனிட்டில் (ICCU) உள்ள பிரச்சனையின் காரணமாக அயோனிக் 5 திரும்பப் பெறப்பட்டது.

  • அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஏப்ரல் 2024 வரை தயாரிக்கப்பட்ட அனைத்து யூனிட்களும் ரீகால் செய்யப்பட்டுள்ளன.

  • கார்களில் உள்ள சிக்கல் EV -யின் அத்தியாவசிய எலக்ட்ரானிக் கம்போனன்டை இயக்கும் 12V பேட்டரியை டிஸ்சார்ஜ் செய்வதற்கு வழிவகுக்கும்.

  • ஹூண்டாய் அயோனிக் 5 உரிமையாளர்கள் தங்கள் கார்களை ஆய்வுக்காக அருகிலுள்ள ஹூண்டாய்-அங்கீகரிக்கப்பட்ட ஒர்க் ஷாப்பிற்கு எடுத்துச் செல்லலாம்.

  • குறைபாடுள்ள பகுதி கண்டறியப்பட்டால், அது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மாற்றப்படும்.

  • அயோனிக் 5, 72.6 கிலோவாட் பேட்டரியைப் பயன்படுத்துகிறது, ARAI கிளைம் செய்யும் 631 கிமீ வரையிலான ரேஞ்ஜை வழங்குகிறது.

  • அயோனிக் 5 விலை ரூ. 46.05 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் அயோனிக் 5 இந்திய சந்தையில் ஜனவரி 2023-இல் உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட யூனிட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. இன்டெக்ரேட்டட் சார்ஜிங் கண்ட்ரோல் யூனிட்டில் (ICCU) ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, அயோனிக் 5 எலக்ட்ரிக் எஸ்யூவி-யின் 1,744 யூனிட்களை தானாக முன்வந்து திரும்பப் பெறுவதாக ஆட்டோமேக்கர் இப்போது அறிவித்துள்ளது. இந்த திரும்பப் பெறும் அறிவிப்பு கொடுக்கப்பட்டதிலிருந்து ஏப்ரல் 2024 வரை தயாரிக்கப்பட்ட அனைத்து யூனிட்களையும் இந்த அறிவிப்பு பாதிக்கும்.

இன்டெக்ரேட்டட் சார்ஜிங் கண்ட்ரோல் யூனிட் (ICCU) என்றால் என்ன?

Hyundai Ioniq 5 Tracking

இன்டெக்ரேட்டட் சார்ஜிங் கண்ட்ரோல் யூனிட் (ICCU) ஒரு கண்ட்ரோலராக செயல்படுகிறது, இது பிரதான பேட்டரி பேக்கின் உயர் வோல்டேஜை, 12V (இரண்டாம் நிலை பேட்டரி) பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ஏற்ற குறைந்த வோல்டேஜாக மாற்றுகிறது. ICCU ஆனது V2L (வெஹிகிள்-டு-லோட்) செயல்பாட்டின் மூலம் காருடன் இணைக்கப்பட்ட வெளிப்புற சாதனங்களை இயக்குவதற்கும் உதவுகிறது. ICCU -இல் உள்ள ஒரு செயலிழப்பு 12V பேட்டரியை டிஸ்சார்ஜ் செய்யக்கூடும், இது இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஸ்பீக்கர்கள் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் அமைப்புகள் போன்ற EV -யின் அத்தியாவசிய எலக்ட்ரானிக் எலமென்ட்களை இயக்குகிறது.

காரின் உரிமையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஹூண்டாய் அயோனிக் 5 உரிமையாளர்கள் தங்கள் கார்களை அருகில் உள்ள ஹூண்டாயின் அங்கீகரிக்கப்பட்ட ஒர்க் ஷாப்பிற்கு எடுத்துச் செல்லலாம். வாகன உற்பத்தியாளர் பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களைத் தொடர்புகொண்டு ஆய்வுகளை திட்டமிடலாம். பாகம் பழுதடைந்து காணப்பட்டால், அது வாடிக்கையாளர்களுக்கு எந்த வித கூடுதல் செலவில்லாமல் இலவசமாக மாற்றித்தரப்படும்.

மேலும் பார்க்க: இந்தியாவில் உள்ள டாப் 5 அதி விரைவு EV சார்ஜர்கள்

அயோனிக் 5 பற்றிய மேலும் சில முக்கிய தகவல்கள்

இந்தியாவில் ஹூண்டாய் அயோனிக் 5 ஒரே ஒரு பேட்டரி பேக் ஆப்ஷனுடன் கிடைக்கிறது, அதன் விவரங்கள் பின்வருமாறு:

பேட்டரி பேக்

 

72.6 கிலோவாட்

 

பவர்

   

217 PS

 

டார்க்

 

350 Nm

 

கிளைம் செய்யப்படும் ரேஞ்ச்

 

631 கி.மீ

Hyundai Ioniq 5 Interior

அயோனிக் 5, டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் உட்பட பல்வேறு வசதிகளுடன் வருகிறது - ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காகவும் மற்றொன்று டிஜிட்டல் டிரைவரின் டிஸ்பிளேக்காகவும். இது வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் சீட்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: உங்கள் பெட்ரோல் அல்லது டீசல் காரை எலெக்ட்ரிக் காராக மாற்றுவது எப்படி என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. செயல்முறை, சட்ட நடைமுறைகள், நன்மைகள் மற்றும் தொடர்புடைய செலவுகள் பற்றி அறிக

விலை மற்றும் போட்டியாளர்கள்

ஹூண்டாய் அயோனிக் 5 விலை ரூ. 46.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா). BYD சீல் மற்றும் கியா EV6 போன்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி-யை விரும்புவோருக்கு ஒரு சிறந்த ஆப்ஷனை வழங்குகிறது. கூடுதலாக இது வோல்வோ XC40 ரீசார்ஜ்க்கு மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாற்றாக தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் படிக்க: ஹூண்டாய் அயோனிக் 5 ஆட்டோமேட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai லாங்கி 5

1 கருத்தை
1
D
dr indu renjith
Aug 19, 2024, 11:14:43 AM

My ioniq 5 brought on April electric system issue started in June past 2months the vehicle is at service centre....they are not ready to replace instead they just initiating battery change.

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    explore மேலும் on ஹூண்டாய் லாங்கி 5

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    • ஸ்கோடா enyaq iv
      ஸ்கோடா enyaq iv
      Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
    • வோல்க்ஸ்வேகன் id.4
      வோல்க்ஸ்வேகன் id.4
      Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
    • வோல்வோ ex90
      வோல்வோ ex90
      Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
    • மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
      மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
      Rs.35 - 40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
    • மஹிந்திரா பிஇ 09
      மஹிந்திரா பிஇ 09
      Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
    ×
    We need your சிட்டி to customize your experience