• English
  • Login / Register

புதிய ஆடம்பர பிராண்டு ஜெனிசிஸை, ஹூண்டாய் அறிமுகம் செய்கிறது

published on நவ 06, 2015 04:07 pm by raunak

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த கொரியன் வாகன தயாரிப்பாளரை பொறுத்த வரை, ‘ஜெனிசிஸ்’ என்ற பெயருக்கு ‘புதிய துவக்கங்கள்’ என்று பொருள்; இந்த டிசம்பரில் துவங்கி, அடுத்து வரும் ஆண்டுகளில், இதில் 6 மாடல்களின் வரிசையை காணலாம்.

சர்வதேச அளவிலான புதிய ஆடம்பர பிராண்டான ஜெனிசிஸை, ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகன தயாரிப்பாளரை பொறுத்த வரை, உலகின் முன்னணி ஆடம்பர கார் பிராண்டுகளுடன், இந்த வகையில் சேர்ந்த மாடல்கள் போட்டியிட உள்ளது. ஆரம்பக் கட்டத்தில், கொரியா, சீனா, வட அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய நாடுகளின் சந்தைகளில் இதன் விற்பனை நடைபெறும். அங்கு இந்த வகையில் அமைந்த மாடல் முழுபலத்தோடு கூடிய வளர்ச்சியை எட்டிய பிறகு, இந்த ஜெனிசிஸ் பிராண்டு, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மற்ற பகுதிகளில், தனது கால்தடத்தை விரிவுப்படுத்திக் கொள்ளும்.

இது குறித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் துணை தலைவர் யூயஸ்சன் சுங் கூறுகையில், “நடைமுறைக்கு ஏற்ற கண்டுபிடிப்புகளின் மூலம் நேரத்தையும், முயற்சியையும் சேமிக்கும் புத்திசாலித்தனமான உரிமையாளராக இருந்து, தங்களின் திருப்தியை அதிகரிக்க விரும்பும் வாடிக்கையாளர்களின் மீது முழு கவனத்தை செலுத்தி, இந்த புதிய ஜெனிசிஸ் பிராண்டை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த ஜெனிசிஸ் பிராண்டு மூலம் அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் பூர்த்தி செய்யப்பட்டு, எங்களின் மனிதனை மையப்படுத்திய (ஹியூமன்-சென்டர்டு) பிராண்டு நிலைப்பாடு மூலம் சந்தையில் ஒரு தலைமை வகிப்பவராக மாறி வருகிறோம்” என்றார்.

தற்போதைய ஹூண்டாய் பிராண்டில் இருந்து, இதை வேறுபடுத்தி காட்டும் வகையில், ஜெனிசிஸிற்கு என ஒரு தனித்துவமான வடிவமைப்பு அடையாளம் (டிசைன் ஐடென்டிட்டி), எம்பளம், பெயரிடும் அமைப்பு முறை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று இந்த கொரியன் வாகன தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஜெனிசிஸ் என்ற பெயரில் ஹூண்டாய் விற்பனை செய்து வரும் சேடனில், ஹூண்டாயின் முத்திரையை காண முடிவதில்லை. தற்போதைய ஜெனிசிஸ் சேடன் பதிப்பில் பயன்படுத்தப்படுவதை மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, பிரிமியம் பிராண்டு மாடல்களுக்கென ஒரு புதிய சிறகு வடிவிலான முத்திரையை அடையாளமாக அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் ஹூண்டாய் மோட்டார் R&D சென்டரின் தலைவருமான வூங் சால் யாங் கூறுகையில், “ஜெனிசிஸ் மாடல்களில், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், சிறப்பாக ஓட்டும் செயல்திறன் மற்றும் ஆடம்பரம் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு, ஒவ்வொரு ஜெனிசிஸ் மாடல்களும் உருவாக்கப்படுவதால், எந்த தேவையற்ற பாரத்தையும், அதிகபடியான தன்மைகளையும் அளிக்காமல், இந்த கார்களால் அவர்களின் தேவைகளை சரியான முறையில் பூர்த்தி செய்யப்படும்” என்றார்.

இதன் வடிவமைப்பு குறித்து நிறுவனத்தினர் கூறுகையில், ஜெனிசிஸின் தயாரிப்பிற்காக, ஒரு புதிய பிரஸ்டீஜ் வடிவமைப்பு பிரிவு செயல்பட உள்ளது. ஆடி, பென்ட்லே, லாம்பர்க்ஹினி, சீயட் மற்றும் ஸ்கோடா மாடல்களின் வடிவமைப்பிற்கு பொறுப்பாளராக இருந்த முன்னாள் வோல்க்ஸ்வேகன் பணியாளரான லூக் டான்க்கர்வோல்க், இந்த புதிய பிரிவை வழிநடத்துவார். அந்த பொறுப்போடு, வரும் 2016 மத்தியில் இருந்து ஹூண்டாய் மோட்டார் வடிவமைப்பு சென்டரின் தலைமை பொறுப்பையும் வகிப்பார்.

பரிந்துரைக்கப்படுகிறது :



 

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    Rs.2.30 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்வோ எக்ஸ்சி90 2025
    வோல்வோ எக்ஸ்சி90 2025
    Rs.1.05 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience