• English
  • Login / Register

ஹயுண்டாய் நிறுவனம் ஜெர்மனியில் தனது புதிய i20 ஸ்போர்ட் கார்களை அறிமுகப்படுத்தியது.

published on ஜனவரி 06, 2016 05:38 pm by raunak

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹயுண்டாய் i20 ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் கார்களில் புதிய  1.0 லிட்டர் டர்போ GDI பெட்ரோல்  மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மாருதி  1.0  லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட பலேனோ கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை தொடர்ந்து  போட்டியாக இந்த புதிய என்ஜினுடன் கூடிய  ஹயுண்டாய் i20 இந்தியாவிலும் அறிமுகமாகலாம் என்று யூகிக்கப்படுகிறது.

       

 ஹயுண்டாய்,  i20 ஸ்போர்ட் காரை 1.0 லிட்டர் டர்போ GDI என்ஜினுடன்  ஜெர்மனியில்  அறிமுகப்படுத்தி உள்ளது.  இந்த மோட்டார், ஹயுண்டாய் நிறுவனத்தின் அளவு குறைக்கப்பட்டு , டர்போ சார்ஜ் செய்யப்பட்டு  உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக  பெட்ரோல் மோட்டார் ஆகும். i20  ஸ்போர்ட் கார்களின் ஒரு குறிப்பிட்ட வேரியன்ட் மற்றும் இந்த என்ஜினைப் பொருத்தப் பெற்றுள்ளது. 19,990 EUR ( ஏறக்குறைய ரூ. 14 லட்சங்கள் ) என்ற விலையுடன் ஐரோப்பா சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளன இந்த i20 ஸ்போர்ட் கார்கள் . இந்தியாவைப் பொறுத்தமட்டில் , இந்த கார்கள் இங்கேயும் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் , ஏறக்குறைய இதே போன்ற இஞ்சின் பொருத்தப்பட்ட பலேனோ கார்களை மாருதி அறிமுகப்படுத்த உள்ளதே ஆகும். சமீபத்தில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது  நமது கண்களில் பலேனோ தென்பட்டது. 

போலார் வெள்ளை நிறத்தில் மட்டும் தான் இப்போதைக்கு இந்த புதிய i20 கார்கள்  வெளியாகி உள்ளன. காரின் முன்புற பம்பர்  வடிவமைப்பு லேசாக மாற்றப்பட்டு சற்று நீட்டிக்கப்பட்டிருக்கிறது.  மேலும் சைட் ஸ்கர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற பம்பரில் பாக்ஸ் டிப்யூசர் மற்றும் மப்ளர் டிப் இணைக்கப்பட்டுள்ளது.  இவைகளைத் தவிர , சராசரி i20 கார்களில் உள்ள கார்னரிங்  விளக்குகளுடன் கூடிய   ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகலிலும் ஒளிரும் LED விளக்குகள் ஆகிய அம்சங்களும் இந்த புதிய i20 வேரியண்டில்  இடம் பெற்றுள்ளதை காண முடிகிறது.  நம் நாட்டில் கிடைக்கும் மாடலைப் போல் இல்லாமல் இந்த சர்வதேச மாடலில் LED பின்புற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  காரின் உட்புறத்தை பொறுத்தவரை தொடுதிரை மல்டிமீடியா அமைப்பு மற்றும் தற்போது உள்ள மாடலில் இருக்கும் அனைத்து சிறப்பம்சங்களும் இந்த புதிய சர்வதேச சந்தைக்கான மாடலிலும் பொருத்தப்பட்டிருப்பது  கவனிக்கத்தக்கது.  

 

இந்த புதிய 1.0 லிட்டர் மோட்டார் நேரடி இன்ஜெக்க்ஷன் மற்றும் டர்போ சார்ஜிங் அம்சங்களை கொண்டுள்ளது. 2014  பாரிஸ் மோட்டார் ஷோவில் விளக்கப்பட்ட இந்த மோட்டார்,  இரண்டு வகையான ஆற்றலை வெளியிடும் வகையில் ட்யூன் செய்யக்கூடிய வசதி கொண்டது. 100 PS மற்றும்  120 PS  அளவு ஆற்றலை ட்யூன் செய்ததற்கு ஏற்றார் போல் இந்த மோட்டார் வெளியிடும்.  இந்த புதிய i20 ஸ்போர்ட்   மாடலைப் பொறுத்தவரை  1,500 rpm ல் 171.6 Nm என்ற அளவுக்கு  டார்க்கை உற்பத்தி செய்யும் 120 PS வெர்ஷன் மோட்டார் தான் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 6 - வேக மேனுவல் ட்ரேன்ஸ்மிஷன் வசதி இணைக்கப்பட்டுள்ளது.   
  
மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience