ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது 20 ஆவது “இலவச கார் பராமரிப்பு கிளினிக்கை” தொடங்கி வைத்தது
published on அக்டோபர் 30, 2015 01:29 pm by sumit
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
நாட்டின் மிக முக்கியமான கார் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், தனது -20 ஆவது “இலவச கார் பராமரிப்பு கிளினிக்கை” தொடங்கியுள்ளது. இது நாடு முழுவதும், தொடர்ந்து 10 நாட்கள் நடைபெரும். இந்நிகழ்ச்சி, நவம்பர் மாதம் 2 -ஆம் தேதி முடிவடைந்துவிடும். ஹுண்டாய் நிறுவனம் நாடு முழுவதும் இந்த முகாமை நடத்துவதற்காக, 1,150 சேவை மையங்களை உருவாக்கி தனது சிறந்த சேவையை விரிவுபடுத்துவதன் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையை வழங்க முயற்சி செய்கிறது.
இலவச கார் பராமரிப்பு கிளினிக்கில், ஹுண்டாய் கார்களுக்கு 90 விதமான பரிசோதனைகளை செய்வது தவிர ஸ்பேர் பார்ட்ஸ், லேபர் சார்ஜ், குறிப்பிட்ட அக்சசரீஸ், மற்றும் வேல்யூ ஆடெட் சர்வீஸ் ஆகியவற்றின் மீது தாராளமான விலைத் தள்ளுபடிகளை வழங்கி அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்து, மகிழ்ச்சியூட்டுகிறது.
இந்த 20 -ஆவது ஃப்ரீ கார் கேர் கிளினிக் தொடக்க விழா அறிவிப்பில், ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சேல்ஸ் & மார்கெட்டிங் பிரிவின் சீனியர் வைஸ் பிரெஸிடெண்ட்டான, திரு. ராகேஷ் ஸ்ரீ வஸ்தவா சிறப்புரை ஆற்றினார். அவர், “எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளையும், விருப்பங்களையும் நன்கு புரிந்து வைத்துக் கொள்வதை மிகவும் முக்கியமாகக் கருதுகிறோம். எப்போதுமே, ஹுண்டாயின் ஃப்ரீ கார் கேர் கிளினிக் எங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்று வந்துள்ளது. அதே போல இந்த ஆண்டும், நாடு முழுவதிலும் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் பேராதரவு, அதீதமான அளவில் இருக்கும் என்று நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்நாள் முழுவதும் துணையாக நீடித்து இருப்பதே எங்களின் உயரிய நோக்கமாகும். நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள எங்களின் விற்பனை பார்ட்னர்களின் துணையோடு சிறப்பான ஹுண்டாய் அனுபவத்தை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்குவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்” என்று உரையாற்றினார்.
வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த சேவையை முன்கூட்டியே “Hyundai Care“ மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது கஸ்டமர் கேர் வெப்சைட் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் வாசிக்க :
- ஹுண்டாய் கிரேட்டா ஆட்டோமேடிக் கார்களுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்கள்
- ஹுண்டாய் கிரேட்டா மற்றும் i20 கார்களின் விலை எகிறியது, நிறுவனம் 6 மில்லியன் ஃபேஸ்புக் ஃபாலோயர்களை பெற்றது