ஹுண்டாய் i10 வேரியண்ட்கள் – உங்களுக்கானதை நீங்களே தேர்ந்தெடுங்கள்

published on டிசம்பர் 17, 2015 09:30 am by sumit for ஹூண்டாய் ஐ10

  • 26 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹுண்டாய் i10, அதன் பிரிவில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஒரு B செக்மெண்ட் ஹாட்ச்பேக் காரை வாங்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்திருந்தால், பெரும்பாலும் நீங்கள் i10 காரையே தேர்ந்தெடுப்பீர்கள். மேம்பட்ட, அதிநவீன சிறப்பம்சங்களை சகாயமான விலையில், மொத்தமாக தருவதால், வாடிக்கையாளர்கள் எந்த வித குழப்பமும் இல்லாமல் i10 காரை வாங்கவேண்டும் என்று எளிதாக முடிவு செய்கின்றனர் என்பதே நிதர்சனம். இருந்தாலும், i10 மாடலில் பல வேரியண்ட்கள் இருப்பதால், எதை வாங்குவது என்ற ஒரு சிறு குழப்பம் உங்களுக்குள் மேலோங்குவது உறுதி. உங்களின் குழப்பத்தைத் தீர்க்க, ஹுண்டாய் i10 காரின் அனைத்து வேரியண்ட்களைப் பற்றிய ஒரு சிறிய ஆய்வு செய்து, முடிவுகளை கீழே உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

ஹுண்டாய் i10 3 வித வேரியண்ட்களில் வருகிறது. அவை, எரா, மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வகைகளாகும்.

எரா வேரியண்ட்: விலை – ரூ. 4.3 லட்சங்கள்

இதுதான், i10 மாடலின் அடிப்படை வேரியண்ட்டாகும். இதில் சென்ட்ரல் லாகிங்க் மற்றும் பவர் விண்டோஸ் போன்ற வசதிகள் இடம்பெறவில்லை. எனினும், வாடிக்கையாளர்கள் நிச்சயமாக வேண்டும் என்று குறிப்பிடும் அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • இஞ்ஜின் இம்மொபிலைசர்
  • ரூஃப் ஆன்டெனா
  • சென்ட்ரல் கன்சோல் ட்ரே
  • ஃப்ரண்ட் ரூம் லாம்ப்
  • கியர் ஷிப்ட் இன்டிகேட்டர்
  • i-ரிலாக்ஸ் முன்புற இருக்கைகள்
  • i-ரிலாக்ஸ் கியர் கன்சோல்
  • ஹீட்டர் வசதியுடன் வரும் ஏர் கண்டிஷனர்
  • பவர் ஸ்டியரிங்
  • உள்ளிருந்து மாற்றி அமைக்கக் கூடிய வெளிப்புற கண்ணாடிகள்

கார் வாங்குவதற்கு குறைந்த பட்ஜெட் ஒதுக்கி இருப்பவர்களும், என்ட்ரி லெவல் பிரிவில் இருந்து சற்றே மேம்படுத்தப்பட்ட காருக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களும், எரா வேரியண்ட்டை தாராளமாக வாங்கலாம். தனது மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு, எரா உங்களை நிச்சயமாக திருப்திப் படுத்தும்.

மேக்னா வேரியண்ட்: விலை ரூ. 4.6 லட்சங்கள் – ரூ. 4.7 லட்சங்கள்

மேக்னா வேரியண்ட்டில், அடிப்படை மாடலில் உள்ள அம்சங்களுடன், மேலும் சில முக்கியமான அம்சங்களான பகல் இரவிலும் உபயோகப்படுத்தக் கூடிய, உள்ளே உள்ள ரியர் வியூ மிர்ரர் மற்றும் பயணிகளுக்கான வேனிட்டி மிர்ரர் ஆகியவை கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • சென்ட்ரல் லாகிங்க்
  • முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள ஆட்டோ-டவுன் அமைப்பு கொண்ட பவர் விண்டோ
  • உலோக ஃபினிஷ் கொண்ட சென்டர் பேசியா
  • பாடி நிறத்தில் பம்பர்
  • வெயிஸ்ட்லைன் மோல்டிங்க்
  • முன்புறத்தில் டோர் மேப் பாக்கெட்
  • உயர்தர ஃபுளோர் கன்சோல்
  • முன்புற மற்றும் பின்புற கதவுகளில் முழு நீள ஆர்ம்ரெஸ்ட்

பயணம் செய்யும் போது தேவையான வசதிகள் வேண்டும், ஆனால் அதற்காக பெரிய விலையைக் கொடுக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால், மேக்னா உங்களுக்கான தீர்வாக இருக்கும். பவர் விண்டோக்கள் மற்றும் பயணிகளுக்கான வேனிட்டி மிர்ரர்கள் ஆகியவை பயணத்தை மிகவும் எளிதாகவும், சொகுசாகவும் மாற்றுகின்றன.

ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்: ரூ. 4.6 லட்சங்கள் – ரூ. 5.2 லட்சங்கள்

i10 மாடலின் உயர்தரமான வேரியண்ட் ஸ்போர்ட்ஸ் ஆகும். LPG மூலம் இயங்கும் வசதியை இந்த வேரியண்ட் தருகிறது.

சில முக்கியமான சிறப்பம்சங்கள்:

  • முன்புறத்தில் பனி விளக்கு
  • ஃபோல்டபிள் கீ
  • பர்க்லர் அலார்ம் பொருத்தப்பட்ட கீலெஸ் என்ட்ரி
  • சக்கரத்திற்கான முழுமையான கவர்
  • பின்புறத்தில் பார்சல் ட்ரே
  • ஆடியோ டிஸ்ப்ளேயுடன் வரும் டிஜிட்டல் கடிகாரம்
  • டில்ட் ஸ்டியரிங்
  • USB போர்ட்கள் பொருத்தப்பட்ட MP3 ப்ளேயர்
  • பாடி நிறத்திலேயே வெளிப்புற கண்ணாடி

இசை பிரியர்களுக்கும், ஆடம்பர அம்சங்கள் பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்க்கும், ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் ஐ10

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience