ஹூண்டாய் அவுராவுக்கு எதிராக இருக்கும் மாருதி டிசைர்: எந்த சப்-4 எம் செடானை வாங்க வேண்டும்?

ஹூண்டாய் aura க்கு modified on ஜனவரி 27, 2020 11:32 am by dinesh

 • 60 பார்வைகள்
 • ஒரு கருத்தை எழுதுக

பிரிவுக்கான உயர்ந்த நிலையை அவுராவால் பெற முடியுமா? நாம் கண்டுபிடிக்கலாம் 

Hyundai Aura vs Maruti Dzire: Which Sub-4m Sedan To Buy?

தொடக்க விலையாக ரூபாய் 7.80 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)  அறிமுகப்படுத்தப்பட்ட அவுரா, எக்ஸெண்டிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த சப்-4 எம் செடான் பிரிவில் நுழைகிறது. இந்த பிரிவில் தற்போது முன்னணியில் இருப்பது மாருதி டிசைர் ஆகும், இது மாதாந்திர விற்பனை எண்ணிக்கை 19 ஆயிரம் ஆகும். புதிய அவுராவால் இந்தப் பிரிவின் உயர்ந்த நிலையைப் பெற முடியுமா? கீழே இருக்கும் ஒப்பீட்டில் கண்டுபிடிக்கவும்.

பரிமாணங்கள்: 

 

ஹூண்டாய் ஆரா 

மாருதி டிசைர் 

வித்தியாசம் 

நீளம் 

3995மிமீ 

3995 மிமீ

இல்லை 

அகலம் 

1680 மிமீ

1735 மிமீ

+55மிமீ  (டிசைர்க்கு பெரியது)

உயரம் 

1520 மிமீ

1515 மிமீ

+5மிமீ (அவுரா உயரமானது)

சக்கர அமைப்பு 

2450 மிமீ

2450 மிமீ

இல்லை 

பயண சுமைகளை வைக்கும் இடம் 

402லிட்டர் 

378லிட்டர் 

+24லிட்டர் (அவுராவில் அதிக இடம் இருக்கிறது)

 இரண்டு கார்களும் நீளம் மற்றும் சக்கர அமைப்பின் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கிறது. இருப்பினும், அகலம் மற்றும் உயரம் என்று வரும்போது,  டிசைர் மற்றும் அவுரா இரண்டுமே முன்னிலை வகிக்கின்றன. பயண சுமைகளை வைக்கும் இடத்தைப் பொறுத்தவரை, அவுரா மாருதி டிசைரை விட அதிக இட வசதியைக் கொண்டுள்ளது. 

இயந்திரங்கள்:  

பெட்ரோல்: 

 

ஹூண்டாய் அவுரா 

மாருதி டிசைர்

இயந்திரம் 

1.2-லிட்டர்

1.0-லிட்டர் டர்போ பெட்ரோல்

1.2-லிட்டர்

மாசு உமிழ்வு

பி‌எஸ்6

பி‌எஸ்6

பி‌எஸ்6

ஆற்றல் 

83பி‌எஸ்

100 பி‌எஸ்

83 பி‌எஸ்

முறுக்கு திறன் 

113என்‌எம்

172 என்‌எம்

113என்‌எம்

செலுத்துதல் 

5-வேக எம்டி/ ஏஎம்டி  

5-வேக எம்‌டி

5-வேக எம்‌டி/ஏ‌எம்‌டி

எரிபொருள் சிக்கனம் 

20.50கே‌எம்‌பி‌எல்/20.10கே‌எம்‌பி‌எல்

20.50கே‌எம்‌பி‌எல்

கே‌எம்‌பி‌எல்/21.21 கே‌எம்‌பி‌எல்

 • அவுராவில் நீங்கள் தேர்வு செய்ய இரண்டு விதமான பெட்ரோல் இயந்திரங்களுடன் கிடைக்கிறது. மறுபுறம், டிசைரில் ஒரே ஒரு பெட்ரோல் அலகுடன் வழங்கப்படுகிறது.

 • இரண்டு கார்களுமே 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திரங்கள் ஒரே மாதிரியான ஆற்றல் மற்றும் முறுக்கு திறனைக் கொண்டுள்ளன, மேலும் அவை 5-வேக கைமுறை அல்லது 5-வேகத் தானியங்கியுடன் வழங்கப்படுகின்றன.

 • இருப்பினும், எரிபொருள் சிக்கனம் என்று வரும்போது, அவுராவின் ஒரு லிட்டருக்கு 20.50கிமீக்கு மேல் லிட்டருக்கு 21.21கிமீ என்பதில் மாருதி சற்று முன்னிலையில் இருக்கிறது.

 • ஆராவின் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் அலகு என்பது மிகவும் சக்திமிக்க  இயந்திரமாகும். இது 5-வேக கைமுறை செலுத்தும் திறன் மற்றும் லிட்டருக்கு 20.50கி.மீ என்ற எரிபொருள் சிக்கனத்தில் கிடைக்கிறது.

 • அவுராவில் 1.0-லிட்டர் டர்போ அலகின் பிஇ  எண்ணிக்கை அதன் 1.2 லிட்டர் உயிர்ப்போலி இயந்திரத்திற்குச் சாதாரணமாகவே இணையானதாக இருக்கும்.

டீசல்:

 

ஹூண்டாய் அவுரா 

மாருதி டிசைர்

இயந்திரம் 

1.2-லிட்டர்

1.3-லிட்டர்

மாசு உமிழ்வு

பி‌எஸ்6

பி‌எஸ்4

ஆற்றல் 

75பி‌எஸ்

75பி‌எஸ்

முறுக்கு திறன் 

190என்‌எம்

190என்‌எம்

செலுத்துதல் 

எஸ்‌எம்‌டி/ஏ‌எம்‌டி

5-வேக எம்‌டி/ஏ‌எம்‌டி

எரிபொருள் சிக்கனம் 

25.35கே‌எம்‌பி‌எல்/40கே‌எம்‌பி‌எல்

28.40கே‌எம்‌பி‌எல்/28.40கே‌எம்‌பி‌எல்

 • அவுரா பிஎஸ்6 டீசல் இயந்திரத்தில் கிடைக்கும்போது, டிசைர் பிஎஸ்4 அலகில் கிடைக்கிறது.

 • வெவ்வேறு திறன்களைக் கொண்டிருந்தாலும், இந்த இரண்டு இயந்திரங்களுமே  ஒரே மாதிரியான ஆற்றல் மற்றும் முறுக்கு திறன் வெளியீட்டைக் கொண்டுள்ளன.

 • இந்த இரண்டு இயந்திரங்களும் 5-வேகக் கைமுறை மற்றும் 5 வேகத் தானியங்கி முறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

 • எரிபொருள் சிக்கனத்தைப் பொருத்தவரை, டிசைர் கைமுறை மற்றும் தானியங்கி முறை செலுத்துதலுடன் அவுராவை விட மிகவும் சிக்கனமானது.

 • மாருதி டிசைர் வாகன உற்பத்தி நிறுவனம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்  முதல் அதன் அனைத்து டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளதால், மாருதி டிசைர் டீசல் இயந்திரம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை மட்டுமே விற்பனைக்கு வரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெட்ரோல் இயதிராத்தின் விரிவான விலைகள்:   

ஹூண்டாய் அவுரா 

மாருதி டிசைர்

இ-ரூபாய் 5.80 லட்சம்

எல்‌எக்ஸ்‌ஐ- ரூபாய் 5.82 லட்சம்

எஸ்-ரூபாய் 6.56 லட்சம்

வி‌எக்ஸ்‌ஐ- ரூபாய் 6.73 லட்சம்

எஸ்‌எக்ஸ்-ரூபாய் 7.30 லட்சம்

இசட்‌எக்ஸ்‌ஐ-ரூபாய் 7.32 லட்சம்

எஸ்‌எக்ஸ்(ஓ)- ரூபாய் 7.86 லட்சம்

இசட் ‌எக்ஸ்‌ஐ+ரூபாய் 8.21 லட்சம்

எஸ்‌எக்ஸ்+எம்‌டி(1.0-லிட்டர் டர்போ)-ரூபாய் 8.55 லட்சம்

 

 

 

எஸ் ஏ‌எம்‌டி- ரூபாய் 7.06 லட்சம்

வி‌எக்ஸ்‌ஐ ஏ‌ஜி‌எஸ்- ரூபாய் 7.20 லட்சம்

எஸ்‌எக்ஸ்+ஏ‌எம்‌டி- ரூபாய் 8.05 லட்சம்

இசட் எக்ஸ்‌ஐ ஏ‌ஜி‌எஸ்- ரூபாய் 7.79 லட்சம்

 

இசட் எக்ஸ்‌ஐ+ஏ‌ஜி‌எஸ்- ரூபாய் 8.68 லட்சம்

பெட்ரோல் வகைகளின் ஒப்பீடு:

Maruti Dzire vs Honda Amaze vs Ford Aspire

ஹூண்டாய் அவுரா இக்கு எதிராக மாருதி டிசைர் எல்எக்ஸ்ஐ

ஹூண்டாய் அவுரா இ

ரூபாய் 5.80லட்சம்

மாருதி டிசைர் எல்எக்ஸ்ஐ

ரூபாய் 5.82 லட்சம்

வித்தியாசம் 

ரூபாய் 2,000 ( டிசைர் விலை அதிகம்)

பொதுவான அம்சங்கள்: காரின் உடல் வண்ணத்திலேயே இருக்கும் மோதுகைத் தாங்கிகள், முன்புற இரட்டை காற்று பைகள், ஈபிடி கொண்ட ஏபிஎஸ், பின்புறமாக காரை நிறுத்தும் உணர்விகள், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான மரையாணிகள், வேக எச்சரிக்கை அமைப்பு, முன் இருக்கை பட்டிக்கான நினைவூட்டல், கைமுறை குளிர்சாதன வசதி, சாய்வு-சரிசெய்யக்கூடிய சுழலும் சக்கரங்கள் மற்றும் மேற்கூரை உணர்கொம்புகள்  

டிசைர் எல்எக்ஸ்ஐ விட அவுரா இ அதிகப்படியாக வழங்குவது: பின்புறம் சரிசெய்யக்கூடிய தலை சாய்ப்பான்கள், பின்புறம் சரிசெய்யக்கூடிய தலை சாய்ப்பான்கள், முன்புற ஆற்றல் ஜன்னல்கள், குளிரூட்டப்பட்ட கையுறை பெட்டி மற்றும் உள்புறமாகச் சரிசெய்யக்கூடிய ஓஆர்விஎம்கள்.

டிசைர் எல்எக்ஸ்ஐ விட அவுரா இ அதிகப்படியாக வழங்குவது என்ன: எதுவும் இல்லை.

முடிவு: ஏறக்குறைய இரண்டு கார்களுமே ஒரே மாதிரியான விலையில் இருக்கிறது, டிஸைரை விட அதிகமான அம்சங்களை அவுரா வழங்குகிறது, இதன் அடிப்படை-அம்சங்களில் மாருதியை விட விவேகமான தேர்வாக அவுரா இருக்கிறது.

Hyundai Aura vs Maruti Dzire: Which Sub-4m Sedan To Buy?

ஹூண்டாய் அவுரா எஸ்க்கு எதிராக மாருதி டிசைர் விஎக்ஸ்ஐ

ஹூண்டாய் அவுரா எஸ்

ரூபாய் 6.56 லட்சம்

மாருதி டிசைர் விஎக்ஸ்ஐ

ரூபாய் 6.73 லட்சம்

வித்தியாசம் 

ரூபாய் 26,000 (டிசைர் விலை அதிகம்)

பொதுவான அம்சங்கள் (முந்தைய வகைகளை விட): உடல் வண்ணத்தில் இருக்கும் ஓ‌ஆர்‌வி‌எம்கள், உடல் வண்ணத்தில் இருக்கும் கதவு கைப்பிடிகள், சக்கர பாதுகாப்பான், வேக உணர்திறன் கதவு பூட்டு, பகல் / இரவு ஐஆர்விஎம், புளூடூத் மற்றும் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள் கொண்ட 2-டின் இசை அமைப்பு, முழுமையான பூட்டுதல் அமைப்பு, சாவி இல்லாத நுழைவு, பின்புற குளிர்சாதன வசதிகள், கைப்பிடி தாங்கிகளுடன் கூடிய பின்புறம், முன் மற்றும் பின்புற ஆற்றல் மிக்க ஜன்னல்கள், மின்சாரம் சரிசெய்யக்கூடிய ஓ‌ஆர்‌வி‌எம்கள், உயரத்தைச் சரிசெய்யக்கூடிய இருக்கை இயக்கிகள் மற்றும் சரிசெய்யக்கூடிய முன்புற தலை சாய்ப்பான்கள்.

டிசைர் விஎக்ஸ்ஐசை விட அவுரா எஸ் அளிப்பது: முன் புறம் இருக்கும் படவீழ்த்தி பிரகாசமான விளக்குகள், பின்புற மூடுபனி விலக்கி மற்றும் எல்இடி டிஆர்எல்.

டிசைர் விஎக்ஸ்ஐசை விட அவுரா எஸ் என்ன அளிக்கிறது: திருட்டுக்கு எதிரான அமைப்பு. 

முடிவு: எங்களுடைய தேர்வாக அவுரா இருக்கிறது. இது மிகவும் மலிவு என்றாலும் கூட, டிசைரை விடக் கூடுதல் அம்சங்களை வழங்குகிறது. 

ஹூண்டாய் அவுராவுக்கு எஸ்எக்ஸ் எதிராக மாருதி டிசைர் இசட்எக்ஸ்ஐ: 

ஹூண்டாய் அவுராவுக்கு எஸ்எக்ஸ்

ரூபாய் 7.30 லட்சம்

மாருதி டிசைர் இசட்எக்ஸ்ஐ

ரூபாய் 7.32 லட்சம்

வித்தியாசம் 

ரூபாய் 2,000 (டிசைர் விலை அதிகம்)

பொதுவான அம்சங்கள் (முந்தைய வகைகளை விட): 15 அங்குல உலோக சக்கரங்கள், முன்புற மூடுபனி விலக்கும் பிரகாசமான விளக்குகள், பின்புற மூடுபனி விலக்கி, தொடக்கத்திற்கான அழுத்த-பொத்தான்கள் மற்றும் மின்சாரத்தை சரிசெய்யக்கூடிய ஓ‌ஆர்‌வி‌எம்கள்.

டிசைர் இசட்எக்ஸ்ஐ விட அவுரா எஸ்எக்ஸ் என்ன வழங்குகிறது: ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கியுடன் 8 அங்குல தொடுதிரை ஒலிபரப்பு அமைப்பு, பின்புறமாக காரை நிறுத்த உதவும் புகைப்படக் கருவி  மற்றும் எல்இடி டிஆர்எல்.

 டிசைர் இசட்எக்ஸ்ஐ விட அவுரா எஸ்எக்ஸ் என்ன வழங்குகிறது: தானியங்கி குளிர்சாதன வசதி, தோலினால் – மூடப்பட்ட திசை திருப்பி மற்றும் திருட்டுக்கு எதிரான அமைப்பு.

 முடிவு: இவை இரண்டுமே அமைப்பில் ஒத்திருக்கிறது. இருப்பினும், அவுராவை விட டிசைருக்கு அதிகளவில் தானியங்கி குளிர்சாதன வசதி  கிடைப்பதால் இதை வாங்குமாறு நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். இதில் தொடுதிரை ஒலிபரப்பு அமைப்பு மற்றும் அவுரா வழங்கும் கார் நிறுத்தும் புகைப்படக் கருவி போன்றவை இதில் இல்லை, ஆனால் அது ஒரு துணைப் பொருளாகப் பொருத்தப்படலாம். மாறாக, அவுராவில் இல்லாத  தானியங்கி குளிர்சாதன வசதியை ஒரு துணைப் பொருளாகச் சேர்க்க முடியாது, இதனால் டிசைர் மிகவும் நியாயமான தேர்வாக மாற்றுகிறது.

 

ஹூண்டாய் அவுரா எஸ்எக்ஸ் (ஓ) போட்டியாக மாருதி ட்சைர் இசட்எக்ஸ்ஐ+:

ஹூண்டாய் அவுரா எஸ்எக்ஸ் (ஓ)

ரூபாய் 7.86 லட்சம்

மாருதி டிசைர் இசட்எக்ஸ்ஐ +

ரூபாய் 8.21 லட்சம்

மாறுபாடு

ரூபாய்35,000 (டிசைர் விலை அதிகம்)

பொதுவான அம்சங்கள் (முந்தைய வகைகளை விட): பட வீழ்த்தி முகப்பு விளக்குகள், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கி தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, வாகனம் நிறுத்துவதற்கான புகைப்படக்கருவி, தானியங்கி குளிர்சாதன வசதி, எல்இடி டிஆர்எல் மற்றும் தோலினால்-மூடப்பட்ட திசைத் திருப்பி.

டிசைர் இசட்எக்ஸ்ஐ + ஐ விட அவுரா எஸ்எக்ஸ் (ஓ) அதிகமாக என்ன வழங்குகிறது: வேகக் கட்டுப்பாடு மற்றும் கம்பியில்லா தொலைப்பேசி மின்னேற்றி.

டிசைர் இசட்எக்ஸ்ஐ + ஐ விட அவுரா எஸ்எக்ஸ் (ஓ) அதிகமாக என்ன வழங்குகிறது: தானியங்கி எல்இடி முகப்பு விளக்குகள்.

முடிவு: அவுரா தான் இங்கே எங்களுடைய தேர்வு. இதில் எல்இடி முகப்பு விளக்குகள் இல்லை, ஆனால் இது டிசைரை விட ரூபாய் 35,000 குறைவான விலை என்று கருதுவது நியாயமான வர்த்தகமாகும். மேலும், ஹூண்டாய் வேகக் கட்டுப்பாடு மற்றும் கம்பியில்லா தொலைப்பேசி மின்னேற்றம் போன்ற உயர் அம்சங்களைப் பெறுகிறது, இது மாருதியில் இல்லை.

Maruti Dzire

பெட்ரோல் தானியங்கி: 

 

ஹூண்டாய் அவுரா எஸ் ஏஎம்டி போட்டியாக மாருதி டிசைர் விஎக்ஸ்ஐ ஏஜிஎஸ்:

ஹூண்டாய் அவுரா எஸ் ஏஎம்டி

ரூபாய் 7.06 லட்சம்

மாருதி டிசைர் விஎக்ஸ்ஐ ஏஜிஎஸ்

ரூபாய் 7.20 லட்சம்

மாறுபாடு

ரூபாய் 14,000 (டிசைர் விலை அதிகம்)

பொதுவான அம்சங்கள்: காரின் உடல் வண்ணத்திலேயே இருக்கும் மோதுகைத் தாங்கிகள், முன்புற இரட்டை காற்று பைகள், ஈபிடி கொண்ட ஏபிஎஸ், பின்புறமாக காரை நிறுத்தும் உணர்விகள், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான மரையாணிகள், வேக எச்சரிக்கை அமைப்பு, முன் இருக்கை பட்டிக்கான நினைவூட்டல், கைமுறை குளிர்சாதன வசதி, சாய்வு-சரிசெய்யக்கூடிய சுழலும் சக்கரங்கள் மற்றும் மேற்கூரை உணர்கொம்புகள், உடல் வண்ணத்தில் இருக்கும் ஓ‌ஆர்‌வி‌எம்கள், உடல் வண்ணத்தில் இருக்கும் கதவு கைப்பிடிகள், சக்கர பாதுகாப்பான், வேக உணர்திறன் கதவு பூட்டு, பகல் / இரவு ஐஆர்விஎம், புளூடூத் மற்றும் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள் கொண்ட 2-டின் இசை அமைப்பு, முழுமையான பூட்டுதல் அமைப்பு, சாவி இல்லாத நுழைவு, பின்புற குளிர்சாதன வசதிகள், கைப்பிடி தாங்கிகளுடன் கூடிய பின்புறம், முன் மற்றும் பின்புற ஆற்றல் மிக்க ஜன்னல்கள், மின்சாரம் சரிசெய்யக்கூடிய ஓ‌ஆர்‌வி‌எம்கள், உயரத்தை சரிசெய்யக்கூடிய இருக்கை இயக்கிகள் மற்றும் சரிசெய்யக்கூடிய முன்புற தலை சாய்ப்பான்கள்.

விஎக்ஸ்ஐ ஏஜிஎஸ்சை விட அவுரா எஸ் ஏஎம்டி  அதிகமாக என்ன வழங்குகிறது: முன்புற பட வீழ்த்தி விளக்குகள், பின்புற மூடுபனி விலக்கி, 15-அங்குல உலோக சக்கரம், மின்சார-சரிசெய்யக்கூடிய ஓ‌ஆர்‌வி‌எம்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்

அவுரா எஸ் ஏஎம்டியை விட அதிகமாக டிசைர் விஎக்ஸ்ஐ ஏஜிஎஸ் என்ன வழங்குகிறது: திருட்டைத் தடுக்கும் அமைப்பு மற்றும் சக்கர பாதுகாப்பான் 

முடிவு: அவுராவானது தொடர்ச்சியாக எங்களுடைய தேர்வாக இருக்கின்றது. விலையானது மிகவும் குறைவு என்றாலும், இது டிசைரை காட்டிலும் முழுமையான தொகுப்பாக வெளிவருகிறது.

Hyundai Aura vs Maruti Dzire: Which Sub-4m Sedan To Buy?

ஹூண்டாய் அவுரா எஸ்எக்ஸ் + ஏஎம்டி போட்டியாக மாருதி டிசைர் இசட்எக்ஸ்ஐ ஏஜிஎஸ்:

ஹூண்டாய் அவுரா எஸ்எக்ஸ்+ஏஎம்டி

ரூபாய் 8.05 லட்சம்

மாருதி டிசைர் இசட்எக்ஸ்ஐ ஏஜிஎஸ்

ரூபாய் 7.79 லட்சம்

வேறுபாடு

ரூபாய் 26,000 (அவுராவின் விலை அதிகம் 

பொதுவான அம்சங்கள் (மேலே கொடுக்கப்பட்டுள்ள முந்தைய வகைகள்): 15 அங்குல உலோக சக்கரம், முன்புற மூடுபனி விளக்குகள், தானியங்கி குளிர்சாதன வசதி, பின்புற மூடுபனி விலக்கும் அமைப்பு, அழுத்த-பொத்தான் தொடக்கம் மற்றும் மின்சாரம்-சரி செய்யக்கூடிய ஓ‌ஆர்‌வி‌எம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

டிசைர் இசட்எக்ஸ்ஐ ஏஜிஎஸ் சை விட அவுரா எஸ்எக்ஸ்+ ஏஎம்டி அதிகமாக என்ன வழங்குகிறது: ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கியுடன் 8 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, பின்புறம் வாகனம் நிறுத்துவதற்கான புகைப்படக் கருவி, கம்பியில்லா தொலைப்பேசி மின்னேற்றம், படவீழ்த்தி முகப்பு விளக்குகள் மற்றும் எல்இடி டிஆர்எல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அவுரா எஸ்எக்ஸ் + ஏஎம்டியை விட அதிகமாக டிசைர் இசட்எக்ஸ்ஐ ஏஜிஎஸ் என்ன வழங்குகிறது: தோலினால்- மூடப்பட்ட திசைதிருப்பி மற்றும் திருட்டுக்கு எதிரான அமைப்பு. முடிவு: அவுரா இங்கே எங்களுடைய தேர்வு. இது கண்டிப்பாக டிசைரை விட விலை அதிகம் தான், ஆனால் அந்த அதிக விலைக்குக் கிடைக்கும் கூடுதல் அம்சங்கள் எங்கள் பதிவேடுகளில் நியாயப்படுத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விரைவில் அவுராவைப் போல டர்போ-பெட்ரோல் வகையைப் பெறுகிறது

மேலும் படிக்க: அவுரா ஏ‌எம்‌டி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் aura

1 கருத்தை
1
A
allenki srikanth
Jan 24, 2020 9:34:30 AM

Launched price mentioned here is wrong(i.e., Launched at a starting price of Rs 7.80 lakh (ex-showroom India), the Aura enters the highly competitive sub-4m sedan segment in India). Please correct.

Read More...
  பதில்
  Write a Reply
  Read Full News
  • ஹூண்டாய் aura
  • மாருதி டிசையர்

  ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

  புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

  trendingசேடன்-

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
  ×
  We need your சிட்டி to customize your experience