• English
  • Login / Register

Hyundai Alcazar Facelift மற்றும் Tata Safari: விவரங்கள் ஒப்பீடு

published on செப் 19, 2024 07:39 pm by shreyash for ஹூண்டாய் அழகேசர்

  • 26 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2024 அல்கஸார் மற்றும் சஃபாரி இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியான வசதிகளை கொண்டுள்ளன. இந்த இரண்டில் எதை வாங்குவது சிறந்தது? இங்கே பார்க்கலாம்.

Hyundai Alcazar vs Tata Safari

சமீபத்தில் ஹூண்டாய் அல்கஸார் காருக்கு ஒரு மிட்லைஃப் அப்டேட் கிடைத்தது. இதன் காரணமாக காருக்கு ஒரு புதிய வடிவமைப்பு மட்டுமல்ல, பல புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இது டாடா சஃபாரி காருக்கு நேரடி போட்டியாக உள்ளது. கிட்டத்தட்ட இது சமமாக வசதிகளைக் கொண்ட எஸ்யூவி ஆகும். இருப்பினும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் மட்டுமே வழங்கப்படுகிறது. பேப்பரில் உள்ள விவரங்கள் மற்றும் வசதிகளின் அடிப்படையில் 2024 அல்கஸார் சஃபாரியுடன் எவ்வாறு போட்டியிடுகிறது என்பது இங்கே.

அளவுகள்

மாடல்

ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

டாடா சஃபாரி

வித்தியாசம்

நீளம்

4560 மி.மீ

4668 மி.மீ

(-108 மி.மீ)

அகலம்

1800 மி.மீ

1922 மி.மீ (ORVM -கள் இல்லாமல்)

(-122 மி.மீ)

உயரம்

1710 மி.மீ (ரூஃப் ரெயில்ங்களுடன்)

1795 மி.மீ

(-85 மி.மீ)

வீல்பேஸ்

2760 மி.மீ

2741 மி.மீ

+ 19 மி.மீ

Tata Safari Rear 3/4th

  • கிட்டத்தட்ட எல்லா அளவீடுகளிலும் அதாவது நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஹூண்டாய் அல்காஸரை விட டாடா சஃபாரி பெரியது.

  • ஆச்சர்யம் என்னவென்றால் அல்கஸார் நீளம் குறைவாக இருந்தாலும் சஃபாரியை விட 19 மி.மீ நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

விவரங்கள்

ஹூண்டாய் அல்கஸார்

டாடா சஃபாரி

இன்ஜின்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

2 லிட்டர் டீசல்

பவர்

160 PS

116 பி.எஸ்

170 PS

டார்க்

253 Nm

250 Nm

350 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT*

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT**

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT**

*DCT - டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

**AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

Hyundai Alcazar gets dual-barrel headlights

  • டீசல் மட்டுமே வழங்கும் சஃபாரியை போலல்லாமல் 2024 ஹூண்டாய் அல்கஸார் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களின் ஆப்ஷன்களுடன் வருகிறது. சஃபாரி ஆனது 2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது.

  • அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் எடிஷன்கள் இரண்டிலும் சஃபாரி சற்றே அதிக பவரை கொண்டுள்ளது. டீசலில் சஃபாரி 54 PS அதிக சக்தி வாய்ந்தது மற்றும் அல்காஸரை விட 100 Nm அதிக டார்க்கை கொடுக்கிறது.

  • அல்கஸார் டீசல் மற்றும் சஃபாரி இரண்டையும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு AT உடன் வாங்கலாம். 

  • இருப்பினும் அல்கஸார் பெட்ரோல் ஆப்ஷனலான 7-ஸ்பீடு DCT வசதியுடன் வருகிறது.

மேலும் பார்க்க: 2024 ஹூண்டாய் அல்கஸார் டீசல் மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு

வசதிகள்

வசதிகள்

ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

டாடா சஃபாரி

வெளிப்புறம்

  • டூயல்-பேரல் ஆட்டோ-எல்இடி ஹெட்லைட்கள்

  • H-வடிவ கனெக்டட் LED DRL -கள்

  • LED டெயில் லைட்ஸ்

  • 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்

  • ரூஃப் ரெயில்கள்

  • ஷார்க்-ஃபின் ஆண்டெனா

  • கனெக்டட் LED DRLகளுடன் ஆட்டோ-எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • சீக்வென்ஷியல் டேர்ன் இண்டிகேட்டர்கள்

  • முன் LED ஃபாக் லைட்ஸ்

  • கனெக்டட் LED டெயில் லைட்ஸ்

  • LED DRL -கள் மற்றும் டெயில் லைட்டுகளுக்கான வெல்கம் & குட்பை அனிமேஷன்கள்

  • 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்

  • ரூஃப் ரெயில்கள்

  • ஷார்க்-ஃபின் ஆண்டெனா

இன்ட்டீரியர்

  • டூயல்-டோன் பிரவுன் மற்றும் ஹேஸ் நேவி ப்ளூ உட்புறம்

  • லெதர் சீட் அப்ஹோல்ஸ்டரி

  • லெதரைட் ஸ்டீயரிங், கியர் நாப் மற்றும் டோர் ஆர்ம்ரெஸ்ட்

  • ஆம்பியன்ட் லைட்ஸ்

  • பின்புற மைய ஆர்ம்ரெஸ்ட் (7 சீட்கள்)

  • பின்புற ஜன்னல் சன்ஷேட்

  • மூன்று வரிசைகளுக்கும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள்

  • அடுக்கு டாஷ்போர்டு தீம் (தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டின் அடிப்படையில்)

  • லெதர் சீட் அப்ஹோல்ஸ்டரி (தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டின் அடிப்படையில்)

  • லெதரைட்-சுற்றப்பட்ட ஸ்டீயரிங் மற்றும் ஆர்ம்ரெஸ்ட்

  • ஆம்பியன்ட் லைட்ஸ்

  • பின்புற சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட்

  • பின்புற ஜன்னல் சன்ஷேட்

  • இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் 4-ஸ்போக் ஸ்டீயரிங்

  • முன் மற்றும் பின் சீட்களுக்கு அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள்

கம்ஃபோர்ட் & வசதி

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே

  • இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை ஏசி வென்ட்கள் கொண்ட டூயல் ஜோன் ஏசி

  • வென்டிலேட்டட் முன் மற்றும் பின் சீட்கள்

  • கூல்டு க்ளோவ் பெட்டி

  • பனோரமிக் சன்ரூஃப்

  • மெமரி ஃபங்ஷன் கொண்ட 8 வழி பவர்டு ஓட்டுனர் சீட்

  • எலக்ட்ரிக் பாஸ் மோடு உடன் கூடிய 8 வே பவர்டு கோ ஓட்டுநரின் சீட்

  • இரண்டாவது வரிசை பயணிகளுக்கு அட்ஜெஸ்ட்டபிள் தொடை ஆதரவு

  • இரண்டாவது வரிசை சீட்களுக்கு உள்ளிழுக்கும் கப் ஹோல்டர்கள் கொண்ட டிரே பிளேட்கள்

  • பவர்-ஃபோல்ட் செயல்பாட்டைக் கொண்ட எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் ORVMகள்

  • ஃபின் ஷிஃப்டர்கள் (AT மட்டும்)

  • முதல் மற்றும் இரண்டாவது வரிசை சீட்களுக்கு வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • மூன்று வரிசைகளுக்கும் டைப்-சி USB சார்ஜர்கள்

  • புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டார்ப்

  • ஆட்டோ டிம்மிங் IRVM

  • மல்டி டிரைவ் மோடுகள் (ஸ்போர்ட், இகோ மற்றும் நார்மல்)

  • டிராக்ஷன் கன்ட்ரோல் மோடுகள் (ஸ்நோ,மட், சேண்ட்)

  • ஏர் ஃபியூரிபையர்

  • பின்புற வென்ட்களுடன் கூடிய டூயல் ஜோன் ஏசி

  • வென்டிலேட்டட் முன் மற்றும் பின் சீட்கள்

  • கூல்டு க்ளோவ் பாக்ஸ்

  • பனோரமிக் சன்ரூஃப்

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • மெமரி ஃபங்ஷன் கொண்ட 6 வே பவர்டு டிரைவர் சீட்

  • எலக்ட்ரிக் பாஸ் மோடு உடன் 4-வே பவர்டு கோ-டிரைவர் சீட்

  • ஜெஸ்டர் கன்ட்ரோல்டன் பவர்டு டெயில்கேட்

  • பவர்-ஃபோல்ட் ஃபங்ஷனை கொண்ட எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் ORVMகள்

  • ஃபின் ஷிஃப்டர்கள் (AT மட்டும்)

  • 45W டைப்-சி முன் USB சார்ஜர்

  • மூன்று வரிசைகளுக்கும் டைப்-சி மற்றும் டைப் A USB சார்ஜர்கள்

  • புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்

  • ஆட்டோ டிம்மிங் IRVM

  • மல்டி டிரைவ் மோடுகள் (ஸ்போர்ட், இகோ மற்றும் சிட்டி)

  • டெர்ரெயின் ரெஸ்பான்ஸிவ் மோடுகள் (வெட், ஹார்டு, நார்மல்)

  • காட்சியுடன் கூடிய டெர்ரெயின் ரெஸ்பான்ஸிவ் மோடு செலக்டர்

  • ஏர் ஃபியூரிபையர்

இன்ஃபோடெயின்மென்ட்

  • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன்

  • வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

  • கனெக்டட் கார் டெக்னாலஜி

  • 8-ஸ்பீக்கர் போஸ்சவுண்ட் சிஸ்டம்

  • 12.3-இன்ச் டச் ஸ்கிரீன்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

  • கனெக்டட் கார் டெக்னாலஜி

  • 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம்

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்ஸ்

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)

  • பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா

  • வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM)

  • ஹில்-ஹோல்டு மற்றும் ஹில்-டிசென்ட் கன்ட்ரோல்

  • முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

  • பின்புற துடைப்பான் கொண்ட பின்புற டிஃபோகர்

  • ரெயின் சென்ஸிங் வைப்பர்கள்

  • அனைத்து சீட்களுக்கும் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள்

  • அனைத்து சீட்களுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள்

  • EBD உடன் ABS

  • லெவல் 2 ADAS

  • 7 ஏர்பேக்ஸ் வரை (6 ஸ்டாண்டர்டு)

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ரோல்ஓவர் மிட்டிகேஷன்

  • கார்னரிங் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்

  • பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா

  • முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • ஹில்-ஹோல்டு மற்றும் ஹில்-டிசென்ட் கன்ட்ரோல் 

  • ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

  • பின்புற துடைப்பான் கொண்ட பின்புற டிஃபோகர்

  • ரெயின் சென்ஸிங் வைப்பர்கள்

  • அனைத்து சீட்களுக்கும் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள்

  • அனைத்து சீட்களுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள்

  • EBD உடன் ABS

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • லெவல் 2 ADAS

  • ஹூண்டாய் மற்றும் டாடா எஸ்யூவி -கள் இரண்டும் பல வசதிகளுடன் வந்தாலும், அதன் பிரீமியம் வெளிப்புறம் மற்றும் சில கூடுதல் வசதிகள் காரணமாக சஃபாரி சற்று முன்னிலையில் உள்ளது. அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு மேல் கனெக்டட் LED DRL -கள் மற்றும் LED டெயில் லைட்ஸ் மற்றும் பெரிய 19-இன்ச் அலாய் வீல்களுக்கான வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன்களை சஃபாரி கொண்டுள்ளது .

  • சஃபாரி ஜெஸ்டர் கன்ட்ரோல்டன் பவர்டு டெயில்கேட் உள்ளது. இது அல்காஸருடன் கிடைக்காது.

Tata Safari Cabin

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யும் பெரிய 12.3 இன்ச் டச் ஸ்கிரீனை சஃபாரி வழங்குகிறது. மறுபுறம் அல்கஸார் ஆனது 10.25-இன்ச் டச் ஸ்கிரீனை வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் உடன் கொண்டுள்ளது.

  • இருப்பினும் இரண்டு எஸ்யூவி -களும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஏசி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பின்புற ஜன்னல் சன்ஷேடுகள் போன்ற வசதிகளுடன் வருகிறது

2024 Hyundai Alcazar Facelift Dashboard

  • அல்கஸார் கூடுதலாக முன் மற்றும் இரண்டாவது வரிசை பயணிகளுக்கு வயர்லெஸ் ஃபோன் சார்ஜரையும், இரண்டாவது வரிசையில் உள்ளிழுக்கக்கூடிய கப் ஹோல்டர்களுடன் கூடிய டிரே டேபிளையும் கொண்டுள்ளது.

  • இரண்டு எஸ்யூவி -களிலும் பயணிகளின் பாதுகாப்பு 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), 360 டிகிரி கேமரா, கண்மூடித்தனமான பார்வை டிடெக்‌ஷன், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் லெவ;ல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றால் கவனிக்கப்படுகிறது.

  • சஃபாரியின் டாப்-ஸ்பெக் வேரியன்ட் கூடுதல் முழங்கால் ஏர்பேக்குடன் வருகிறது. மொத்த ஏர்பேக்குகளின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.

விலை

ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

டாடா சஃபாரி

ரூ.14.99 லட்சம் முதல் ரூ.21.25 லட்சம் (அறிமுகம்)

ரூ.16.19 லட்சம் முதல் ரூ.27.34 லட்சம்

விலை விவரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம்-க்கானவை ஆகும்

ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் டாப்-ஸ்பெக் வேரியன்ட் டாடா சஃபாரியின் டாப்-ஸ்பெக் ரூ. 6 லட்சத்திற்கு மேல் குறைவாக உள்ளது. 

தீர்ப்பு

2024 ஹூண்டாய் அல்கஸார் ஒரு கிரெட்டா அடிப்படையிலான 3-வரிசை எஸ்யூவி ஆகும். இது ஒரு விரிவான வசதிகளுடன் வருகிறது. மற்றும் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டின் ஆப்ஷனையும் கொண்டுள்ளது. இந்த விலை நிர்ணயத்துடன், டாடா சஃபாரியை அல்கஸார் டாப்-ஸ்பெக் வேரியன்ட் சுமார் ரூ.6 லட்சம் வரை குறைவாக உள்ளது. டாடா எஸ்யூவியுடன் ஒப்பிடும்போது அல்கஸார் மிகவும் வசதியான பின் சீட் அனுபவத்தை கொடுக்கிறது. இதில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ட்ரே டேபிள்கள் மற்றும் உள்ளிழுக்கும் கப் ஹோல்டர்கள் உள்ளன.

மறுபுறம் டாடா சஃபாரி விலை அதிகம். ஆனால் 2024 அல்கஸார் காரை விட பல கூடுதல் வசதிகளை வழங்குகிறது. இதில் ஜெஸ்டர் கன்ட்ரோல்டன் பவர்டு டெயில்கேட் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவுக்கான -க்கான வயர்லெஸ் கனெக்டிவிட்டியை சப்போர்ட் செய்யும் பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. டாடா எஸ்யூவியில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை என்றாலும். அதிக சக்திவாய்ந்த டீசல் இன்ஜினுடன் வருகிறது. கூடுதலாக சஃபாரி நல்ல சவாரி தரத்தை வழங்குகிறது. கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது கேபின் மூவ்மென்ட்டை குறைக்கிறது.

எனவே, நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள், ஏன்? கீழே உள்ள கமென்ட் பாக்ஸில் உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: அல்கஸார் ஆன்ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai அழகேசர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience