பேஸ்லிஃப்டட் Hyundai Alcazar -ன் மைலேஜ் விவரங்கள்
published on செப் 10, 2024 07:48 pm by dipan for ஹூண்டாய் அழகேசர்
- 41 Views
- ஒரு கருத்தை எழுதுக
மேனுவல் கியர் பாக்ஸுடன் கூடிய டீசல் இன்ஜின் இந்த வரிசையில் மிகவும் எரிபொருள் திறன் கொண்ட தேர்வாக உள்ளது.
-
ஹூண்டாய் அல்கஸார் 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் முதல் பெரிய புதுப்பிப்பைப் பெற்றுள்ளது.
-
அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலைகள் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களுக்கு ரூ. 14.99 லட்சமாகவும், டீசல் வேரியன்ட்களுக்கு (பான்-இந்தியா) ரூ. 15.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
இது முன்பு இருந்த அதே 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS, 253 Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS, 250 Nm) ஆப்ஷன்களைத் தொடர்ந்து வழங்குகிறது.
-
6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட டர்போ-பெட்ரோல் இன்ஜின் குறைந்த எரிபொருள் திறன் கொண்டது.
-
ஆட்டோமேட்டிக் வேரியன்ட்கள் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுக்கும் ஒரே மாதிரியான எரிபொருள் செயல்திறனை வெளிப்படுத்துகின்றன.
பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கிடைக்கும் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களுக்கு அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ. 14.99 லட்சமாகவும் மற்றும் டீசல் வேரியன்ட்களுக்கு ரூ. 15.99 லட்சமாகவும் நிர்ணயித்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட அல்கஸார் முன்-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலின் அதே இன்ஜின் ஆப்ஷன்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அறிமுகத்துடன், கிடைக்கக்கூடிய அனைத்து பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுக்கும் கூறப்படும் எரிபொருள் திறன் புள்ளிவிவரங்களையும் ஹூண்டாய் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த கார்களுக்கான மைலேஜ் புள்ளிவிவரங்களை ஆராய்வோம்:
பவர்டிரெய்ன் மற்றும் மைலேஜ் பற்றிய விவரங்கள்
இன்ஜின் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
160 PS |
116 PS |
டார்க் |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன்* |
6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் DCT |
6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் AT |
மைலேஜ் |
17.5 கி.மீ/லி, 18 கி.மீ/லி |
20.4 கி.மீ/லி, 18.1 கி.மீ/லி |
*DCT = டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்; AT = டார்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்
கிடைக்கக்கூடிய பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில், மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய டீசல் இன்ஜின், 20 கி.மீ/லி-க்கும் அதிகமான மைலேஜ் திறன் கொண்டது. 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட டர்போ-பெட்ரோல் இன்ஜின் குறைந்த சிக்கனமானது, 17.5 கி.மீ/லி மைலேஜ் என்று கூறப்பட்டுள்ளது. டர்போ-பெட்ரோல் DCT மற்றும் டீசல்-ஆட்டோமேட்டிக் வேரியன்ட்கள் இரண்டும் ஒரே மாதிரியான மைலேஜ் செயல்திறனைக் கொண்டுள்ளன.
இந்த எரிபொருள் திறன் குறித்த புள்ளிவிவரங்கள் ARAI-யால் உரிமைகோரப்பட்டவை (இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம்) மற்றும் உண்மையான எரிபொருள் சிக்கனம் டிரைவரின் நிலைமைகள் மற்றும் ஓட்டும் பழக்கத்தைப் பொறுத்து மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
மேலும் படிக்க: ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிப்ட்: வேரியன்ட் வாரியான பவர்டிரெயின் விவரங்கள்
2024 ஹூண்டாய் அல்கஸார் பற்றிய ஒரு கண்ணோட்டம்
பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் ரூ. 14.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் கிரெட்டாவை நெருக்கமாக பிரதிபலிக்கும் டிசைனைக் கொண்டுள்ளது. அல்கஸாரின் முன்புறம் H-வடிவ கூறுகளுடன் இணைக்கப்பட்ட LED DRL செட்-அப் மற்றும் கிரெட்டாவால் ஈர்க்கப்பட்ட கிரில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், இணைக்கப்பட்ட LED டெயில் லேம்ப்கள் மற்றும் டூயல்-டிப் எக்ஸாஸ்ட் ஆகியவை அதன் புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்திற்கு மேலும் அழகை சேர்கிறது.
கேபினைப் பொறுத்தவரை, அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட், கிரெட்டாவைப் போன்ற டாஷ்போர்டு டிசைனைப் பெறுகிறது, இதில் புதிய நேவி ப்ளூ மற்றும் ப்ரௌன் கலர் கேபின் தீமை பெறுகிறது. இது 6 அல்லது 7 சீட்கள் கொண்ட அமைப்புகளை வழங்குகிறது. உட்புறத்தில் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கான டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஏசி மற்றும் 2--லெவல் மெமரி செட்டிங்களுடன் (டிரைவருக்கு மட்டும் கிடைக்கும்) 8-வே பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் சீட்கள் உள்ளன. முன் மற்றும் பின்புற பயணிகளுக்கு வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் இரண்டாவது வரிசையில் கப்ஹோல்டருடன் மடிக்கக்கூடிய லேப்டாப் டிரே ஆகியவை இதன் கூடுதல் அம்சங்களாகும்.
அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும். கூடுதலாக, எஸ்யூவி-யின் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் டிரைவரின் உதவிக்காக லெவல் 2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 2024 பேஸ்லிஃப்டெட் ஹூண்டாய் அல்கஸார் vs ஹூண்டாய் Creta: படங்கள் மூலம் ஒப்பீடு
விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் அல்கஸாரின் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களின் விலை ரூ. 14.99 லட்சத்தில் தொடங்குகிறது, அதே சமயம் டீசல் வேரியன்ட்களின் விலை ரூ. 15.99 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). விரிவான வேரியன்ட் வாரியான விலை பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் MG ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா XUV700-இன் 6/7-சீட்டர் வேரியன்ட்களுடன் போட்டியிடுகிறது. கூடுதலாக, இது கியா கேரன்ஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா போன்ற MPV-களுக்கு எதிராக ஒரு போட்டியாளராகவும் உள்ளது.
2024 ஹூண்டாய் அல்கஸாரின் மைலேஜ் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கீழே உள்ள கமென்ட் பாக்ஸில் பகுதியில் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: அல்கஸார் -இன் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful