• English
  • Login / Register

ஹோண்டா நிறுவனம் மாக்மா ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

published on பிப்ரவரி 02, 2016 04:53 pm by sumit

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Honda signs MoU

ஹோண்டா இந்தியா நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு எளிதான முறையில் கடன் வசதி பெறுவதற்கு வழிவகை செய்ய, மாக்மா ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒரு காரின் அடக்க விலையில் 90 சதவிகிதம் வரை, மாக்மா நிறுவனம் கடன் உதவி வழங்குகிறது. ஐந்து வருட காலத்திற்குள், வாடிக்கையாளர் இந்த கடன் தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டும். ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் இயக்குனரான திரு. ராமன் குமார் ஷர்மா, இந்தக் கூட்டு முயற்சி பற்றிப் பேசும் போது, “கார் வாங்குவதற்குத் தேவையான நிதி உதவியை எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக, மாக்மா ஃபின்கார்ப் நிறுவனத்துடன் இணைந்து  செயலாற்றுவத்தில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஹோண்டா நிறுவனம், வாடிக்கையாளர்களை மையமாக வைத்து செயல்படும் ஒரு சிறந்த நிறுவனமாகும். எனவே, நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் ஆசைகள் போன்றவற்றை போற்றி மதிக்கிறோம். கார் வாங்குவதற்குத் தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்க, இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாங்கும் அனுபவத்தைக் கிடைக்கச் செய்ய முடியும்,“ என்று அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

மாக்மா வீட்டு வசதி நிதி நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. சச்சின் காண்டெல்வால், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்த போது, “மாக்மா நிறுவனம், தனது சேவையை நகர்ப்புறத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், தனது கூடுதல் சிறப்பு கவனத்தை ஊரக மற்றும் பாதி-நகர்புற பகுதிகளில் செலுத்தி, தனது சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. 228 கிளைகள் நிறுவுவதிலும், 1,600 வருவாய் வட்டங்கள் (தாலுக்காக்கள்) மற்றும் 2,900 பகுதிகளைக் கடந்து பல இடங்களிலும் தனது சேவையை விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. தற்போது, மாக்மா நிறுவனத்திற்கு 6.5 லட்சங்களுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும், எங்களது நிறுவனம் சுமார் ரூ. 19,000 கோடிகள் பெருமான கடனை நிர்வகித்துக் கொண்டிருக்கிறது,” என்று குறிப்பிட்டார். அவர், ‘மாக்மா மற்றும் ஹோண்டா என்ற இரண்டு நிறுவனங்களும் தங்களது துறையில் முன்னணியில் உள்ளனர். எனவே, ஒருவருக்கொருவர் சிறந்த முறையில் உதவிக் கரம் நீட்டி, ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் ஹோண்டா காரை வாங்குவதைப் பெருமையாகக் கருதும் வருங்கால வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் வசித்துக் கொண்டிருந்தாலும், மாக்மா மூலம், ஹோண்டா கார் வாங்குவதற்கு நிதி உதவி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்’, என்றும் கூறினார். தற்போது, மாக்மாவின் அனைத்து கிளைகளிலும் கார் கடன் வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மாக்மா ஃபின்கார்ப் நிறுவனத்தின், சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கடன் அளிக்கும் பிரிவின் தேசிய வர்த்தகத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திரு. சுமித் முகர்ஜி, கார் வாங்குவதற்கான நிதியின் முக்கியத்துவம் பற்றி பேசுகையில், “களத்தில் இறங்கி வேலை செய்யும் எங்களது 3,700 ஊழியர்களும், மிகக் குறைவான வங்கி வசதிகள் மற்றும் எந்தவிதமான கடன் வரலாறுகளும் இல்லாமல் இருக்கும் முறைசாரா மற்றும் ஊரக மற்றும் பாதி-நகர்புற பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களிடம் தங்களது கவனத்தைச் செலுத்துவர். இத்தகைய வாடிக்கையாளர்கள், முதல் முறையாக கடன் பெற்றுக் கொள்பவராக உள்ளனர். மேலும், இப்போது உடனடியாக நிதி வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. எங்களது வெளிக்கள உத்தியோகத்தர்கள் (ஃபீல்ட் ஆபிசர்கள்) டேப்லெட்கள் மற்றும் பிரின்டர்களை சிறப்பாக உபயோகிக்கத் தெரிந்தவர்கள். எனவே, அவர்கள் இந்தியாவின் எந்த மூலையில் இருந்து வேலை செய்தாலும் (மெய்நிகர் அலுவலகம்), எலெக்ட்ரானிக் ட்ரான்ஸ்பர் வசதி மூலம், கடன் விண்ணப்பங்களை உடனடியாக அனுப்ப முடியும். விற்பனை கண்ணோட்டத்தில் இருந்து இதைப் பார்க்கும் போது, இந்த உடனடி கடன் வசதி திட்டம் மூலம் இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் நுழைந்து, புதிதாக வந்த பிரோபோசல்களை வேகமாக நெறிப்படுத்தி, அவர்களை புது கார் வாங்கச் செய்வதனால், வாடிக்கையாளர்ளுக்கு சிறந்த கஸ்டமர் எங்கேஜ்மெண்ட் நடவடிக்கைகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தைக் கிடைக்கச் செய்ய முடியும். மேலும், கார் வாங்குவதற்குத் தேவையான 90 சதவிகித தொகையை, 5 வருடங்களில் திரும்பச் செலுத்தும் கடன் தொகையாகத் தருவதற்கு, ஒரே நாளில் முடிவெடுத்து செயல்படுவதில் எங்களது ஃபீல்ட் ஆபிசர்கள் பெரிய சூரர்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.      

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience