ஹோண்டா ரூ. 10,000 வரை விலையை உயர்த்தி உள்ளது.
published on ஜனவரி 11, 2016 05:54 pm by sumit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா நிறுவனம் கடந்த மாதம் அறிவித்திருந்த விலை உயர்வை இந்த மாதம் செயல்படுத்தியுள்ளது. டொயோடா , ஸ்கோடா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தினர் கடந்த ஜனவரி 5 ல் இந்த விலை உயர்வை அமல்படுத்திய ஒரு வார காலத்திற்குள் ஹோண்டா தனது கார்களின் விலையை ரூ. 10 ,000 வரை உயர்த்தி உள்ளது.
ஆரம்ப நிலை ஹேட்ச் பேக் பிரிவு கார்களான ப்ரியோ ரூ. 2000 விலை உயர்த்தப்பட்டு ரூ. 4.27 லட்சம் முதல் ரூ. 6.85 லட்சம் வரை, தேர்ந்தெடுக்கப்படும் வேரியன்டை பொறுத்து விபனை செய்யப்படுகிறது. ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவு கார்களான அமேஸ் மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்கள் ரூ. 3,500 மற்றும் Rs. 4,800 விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஹோண்டா தயாரிப்புக்களில் CR – V கார்கள் தான் மிக அதிகப்படியாக ரூ. 10,000 விலை உயர்த்தப்பட்டு , ரூ. 25.20 லட்சங்களுக்கு ( தோராய விலை ) விற்பனை செய்யப்படுகிறது. ஹோண்டா சிட்டி மற்றும் மொபீலியோ கார்கள் மிதமாக ரூ. 3,000 என்ற அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் டொயோடா மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் தங்கள் மாடல்கள் மீதான விலையை உயர்த்தி உள்ளது. ஸ்கோடா நிறுவனம் அதிகப்பபட்சமாக ( ரூ. 33,000 ) தனது ஆக்டேவியா கார்களின் விலையை உயர்த்தி உள்ளது. அதே போல் டொயோடா நிறுவனம் தனது கேம்ரி கார்களின் விலையை அதிகபட்சமாக (ரூ. 31,500) உயர்த்தி உள்ளது . இந்நிறுவனங்கள் தங்களது பிற மாடல் கார்களின் விலையையும் மிதமாக உயர்த்தி உள்ளது.
வாகன தயாரிப்பாளர்கள் ஆண்டுதொடக்கதில் தங்கள் பல்வேறு மாடல் கார்கள் மீதான விலையை உயர்த்துவது கடந்த மூன்று ஆண்டுகளாகவே நடந்து வரும் ஒரு சராசரி நிகழ்வாகவே உள்ளது. மாருதி சுசுகி , ஹயுண்டாய் , BMW மற்றும் நிஸ்ஸான் நிறுவனங்கள் கடந்த மாதமே விலை உயர்வைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும் இன்னமும் அதை செயல்படுத்தாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹயுண்டாய் நிறுவனம் தனது கார்களின் விலை 30,000 வரை உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் , BMW, ரெனால்ட் மற்றும் நிஸ்ஸான் நிறுவனத்தினர் 3% விலை உயர்வை அறிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful