• English
  • Login / Register

டொயோடா , ஸ்கோடா மற்றும் டாடா மோட்டார்ஸ் விலை உயர்வை அமல்படுத்தி உள்ளது.

published on ஜனவரி 06, 2016 10:31 am by sumit

  • 24 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Toyota, Skoda and Tata Motors implement Price Hike

கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து  டொயோடா ,ஸ்கோடா மற்றும் டாடா மோட்டார்ஸ் விலை உயர்வை அறிவித்துள்ளனர்.  ஸ்கோடா நிறுவனம் தங்களது ஆக்டேவியா (பெட்ரோல்) மாடல்  கார்களின் விலையைத் தான்  அதிகபட்சமாக  ரூ. 33,000  உயர்த்தி உள்ளது.  இப்போது இந்த கார் ரூ. 16.07 லட்சங்களுக்கு கிடைக்கிறது.   மேலும் ஸ்கோடா தங்களது ரேபிட் ( பெட்ரோல் ) மாடல் கார்களின் விலையையும்  ரூ. 15,000 உயர்த்தி உள்ளது. இப்போது இதன் விலை ரூ. 7.71 லட்சங்கள் ( அடிப்படை வேரியன்ட் ) ஆகும்.  டொயோடா நிறுவனம் இன்னோவா கார்களின் விலையை ரூ. 14,000 உயர்த்தி உள்ளது. இப்போது இந்த கார்கள் ரூ. 10.86 லட்சத்திற்கு  விற்பனையாகிறது.  எடியோஸ் மற்றும் எடியோஸ் லைவா கார்களின் விலை முறையே ரூ. 7,500 மற்றும் ரூ. 6,000  உயர்த்தப்பட்டுள்ளது.  டொயோடா நிறுவனத்தினர் அதிகபட்சமாக தங்களது கேம்ரி கார்களின் விலையை ரூ. 31,500  உயர்த்தி உள்ளனர்.  விலை உயர்வுக்கு பின் இந்த செடான் பிரிவு கார்கள்  ரூ. 29.11 லட்சங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  கொரோலா கார்களின் விலையும் ஏறக்குறைய இதே அளவுக்கு (ரூ. 29,000 )  உயர்த்தப்பட்டுள்ளது. 

டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ரூ. 20,000  வரை விலை உயர்வு இருக்கும் என்று அறிவித்திருந்தாலும் , எந்தெந்த மாடல் மீது எவ்வளவு விலை உயர்வு இருக்கும் என்ற தகவலை இன்னும் வெளியிடவில்லை. 

மாருதி சுசுகி , ஹயுண்டாய் , BMW , நிஸ்ஸான் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் , ஜனவரி 1, 2016  முதல் தங்கள் கார்களின் விலையை உயர்த்தப்போவதாக கடந்த மாதமே அறிவித்து விட்டார்கள் என்றாலும் இன்னும் அதை நடைமுறைப் படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ரூ. 30,000 வரை விலை உயர்வு இருக்கும் என்று ஹயுண்டாய் அறிவித்துள்ள நிலையில் ,  BMW , ரெனால்ட் மற்றும் நிஸ்ஸான் நிறுவனங்கள் 3% வரை விலை உயர்வு இருக்கும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலை விவரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ் - ஷோரூம் விலைகளாகும் .

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience