ஹோண்டா நிறுவனம் வரும் ஜனவரி 2016 முதல் தனது கார்களின் விலையை ரூ.16,000 வரை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது !
published on டிசம்பர் 24, 2015 11:36 am by sumit
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
புது டெல்லி:
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தன்னுடைய அனைத்து மாடல் கார்கள் மீதும் ரூ. 16,000 வரை விலை உயர்வு செய்துள்ளது. இந்த ஜப்பானிய கார் தயாரிப்பாளர்கள் ரூ. 4.25 லட்சங்கள் விலையுள்ள (எக்ஸ் -ஷோரூம் டெல்லி ) ப்ரியோ (ஆரம்ப - நிலை சிறிய கார் ) முதல் ரூ. 25.13 லட்சங்கள் விலையுள்ள CR – V கார்கள் வரை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றனர். கார் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை உயர்வின் காரணமாகவே தாங்கள் இந்த விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிறுவனத்தினர் , தேர்ந்தெடுக்கப்படும் மாடலைப் பொறுத்து ரூ. 10,000 முதல் ரூ. 16,000 வரை இந்த விலை உயர்வு இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
“ தேர்ந்தெடுக்கப்படும் மாடலைப் பொறுத்து ரூ. 10,000-16,000 வரை இந்ந்த விலை உயர்வு இருக்கும் . வாகன தயாரிப்புக்கான மூல பொருட்களின் விலை உயர்வே நாங்கள் எண்கள் கார்களின் விலையை உயர்த்துவதற்கு காரணம் " என்று ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் மார்கெடிங் மற்றும் விற்பனை பிரிவின் மூத்த துணை - தலைவரான திரு. ஞானேஸ்வர் சென் கூறியுள்ளார்.
ஏறக்குறைய அனைத்து கார் தயாரிப்பாளர்களும் தங்களின் கார்களின் விலையை ஜனவரி முதல் உயர்த்துவதாக ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில் , இப்போது ஹோண்டா நிறுவனத்தின் இந்த விலை உயர்வு அறிவிப்பு நமக்கு ஆச்சரியம் அளிப்பதாக இல்லை .
ஹயுண்டாய் நிறுவனம் ரூ.30,000 வரையிலும் , மாருதி நிறுவனம் ரூ. 20,000 வரையிலும் , நிஸ்ஸான் மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் 3% வரையிலும் தங்கள் கார்களின் விலையை உயர்த்துவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய சந்தையில் வலுவாக காலூன்றி உள்ள ஹோண்டா கார்ஸ் நிறுவனம் ப்ரியோ, அமேஸ், சிட்டி மொபிலியோ , ஜாஸ் மற்றும் CR – V கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful