ஹயுண்டாய் நிறுவனம் ஜனவரி மாதம் முதல் 30,000 ரூபாய் விலை உயர்வை அறிவித்துள்ளது.
published on டிசம்பர் 10, 2015 12:37 pm by sumit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் : ஹயுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 30,000 வரையிலான விலை உயர்வை ஜனவரி 2016 முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அனைத்து மாடல்கள் மீதும் இயான் முதல் ( 3 லட்சம் தோராய விலை ) சாண்டா பி (ரூ. 27 லட்சம்) வரை விலை உயர்த்தப்பட உள்ளது. I10, க்ரேண்ட் i10 , எளிட் i 20 , ஆக்டிவ் i20 , எக்ஸ்சென்ட், வெர்னா மற்றும் எலன்ட்ரா கார்கள் விலை உயர்த்தப்பட உள்ளது. வாகன தயாரிப்புக்கு தேவையான மூல பொருட்களின் விலை ஏற்றத்தாலும் , அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகிறது என்று ஹயுண்டாய் தெரிவித்துள்ளது.
“இத்தகைய சவால் மிகுந்த ஒரு சூழலில் , விலை உயர்வு செய்வது பற்றி நாங்கள் தீவரமாக யோசிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். மூல பொருட்களின் விலை உயர்வும் , பலவீனமான ரூபாய் மதிப்பும் தான் எளிட் முதல் க்ரேடா வரையிலான எங்கள் தயாரிப்புக்கள் மீது வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 30,000 ரூபாய் வரை விலையை கூட்ட செய்துள்ளது.” ஹயுண்டாய் மோட்டார் இந்தியாவின் விற்பனை மற்றும் மார்கெடிங் பிரிவின் மூத்த துணை தலைவர் , ராகேஷ் ஸ்ரீவாத்சவ் , “ மூல பொருட்களின் விலை ஏற்றம் தான் இந்த விலை உயர்த்தப்பட்டதற்கு முக்கியமான காரணம். நாங்கள் கூடுதல் தயாரிப்பு செலவை பெருமளவு ஏற்றுக் கொண்டாலும் இந்த சவாலான வியாபார சூழலில் தாக்கு பிடிக்க இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகிறது” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான பிஎம்டபுள்யு மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தினர் இதே போன்ற விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில் ஹயுண்டாய் நிறுவனமும் இந்த விலை உயர்வு சம்மந்தமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டொயோடா நிறுவனமும் 3% விலை உயர்வை அறிவித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்