BMW இந்தியா 3% விலை உயர்வை அறிவித்தது
modified on டிசம்பர் 24, 2015 11:52 am by bala subramaniam
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை:
வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து, BMW மற்றும் மினி தயாரிப்புகளுக்கு 3% விலை உயர்வை BMW இந்தியா அறிவித்துள்ளதால், இதை ஒரு சந்தோஷமான புத்தாண்டு செய்தி என்று கூற முடியாது. தற்போது BMW 1 சீரிஸ், BMW 3 சீரிஸ், BMW 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, BMW 5 சீரிஸ், BMW 7 சீரிஸ், BMW X1, BMW X3 மற்றும் BMW X5 ஆகியவை, BMW-ன் சென்னை தொழில்சாலையில் தயாரிக்கப்படுகிறது.
இது குறித்து BMW குரூப் இந்தியாவின் தலைவர் திரு.பிலிப் வான் ஷார் கூறுகையில், “முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் விதிவிலக்கான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும், அவர்களின் ஒட்டுமொத்த உரிமைத்துவ அனுபவத்தை மேலும் மதிப்புள்ளதாக மாற்றவும், நாங்கள் மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்தே இந்த விலை உயர்வை அமல்படுத்தி உள்ளோம். புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி, உலக தரம் வாய்ந்த டீலர்ஷிப்களை கட்டியெழுப்பி, நேரத்திற்கு தகுந்தாற் போல உயர் மதிப்பு மிகுந்த சேவைகளை வழங்கும் வகையில் எங்கள் வாடிக்கையாளர்களுடனான ஒரு கலைநுட்பத்துடன் கூடிய தொடர்பு சேவைகளை உணர்வுப்பூர்வமாக வழங்கினால் மட்டுமே ‘ஷீர் டிரைவிங் பிரஷர்’ வட்டத்தை முழுமை பெற செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
BMW 6 சீரிஸ் கிரான் கூபே, BMW X6, BMW Z4, BMW M3 சேடன், BMW M4 கூபே, BMW M5 சேடன், BMW M6 கிரான் கூபே, BMW X5 M, BMW X6 M மற்றும் BMW i8 ஆகியவை நம் நாட்டிலேயே முழுமையாக கட்டியெழுப்பட்ட யூனிட்களாக BMW டீலர்ஷிப்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு கிடைக்கின்றன. BMW 6 சீரிஸ் மற்றும் BMW 7 சீரிஸ் ஆகியவற்றில் சேர்ந்த தனிப்பட்ட கார்களையும், முழுமையாக கட்டியெழுப்பட்ட யூனிட்களாக ஆர்டர் செய்து கிடைக்கின்றன.
மேலும் படிக்க
- ஒப்பீடு: ரேஞ்ச் ரோவர் இவோக் vs வோல்வோ XC60 vs BMW X3
- BMW 1-சீரிஸ் காம்பாக்ட் சேடன் கான்செப்ட் கார் வெளியிடப்பட்டது [தெளிவான இமேஜ் கேலரி இணைக்கப்பட்டுள்ளது]